
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று மோன்தா புயலாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் எங்கு கரையை கடக்கும்? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள தென்கிழக்குப் பகுதியில் உருவெடுத்த மோன்தா புயல் அங்கிருந்து மேற்கு-வடமேற்காக மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.
திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அந்தப் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 560 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது.
அடுத்த 12 மணி நேரத்தில் இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. பின்னர் வடமேற்காக நகரும் இந்தப் புயல், அதன்பிறகு மேற்கு-வடமேற்காக நகர்ந்து மேலும் வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை காலை தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பின்னர் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவு ஆந்திராவில் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டணத்திற்கும் கலிங்கபட்டணத்திற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 90–100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அது மணிக்கு 110 கிலோமீட்டர் வரையிலும் வேகமடைலாம், என்றது இந்திய வானிலை மையத்தின் அறிக்கை.
அந்திரா, யானம் மற்றும் ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. மேலும்,
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது?
மோன்தா புயலால் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பொழிய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும்,

அதன்படி, திங்கட்கிழமையை பொறுத்தவரை தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.தவிர இது,
தீவிர புயலாக மாறி செவ்வாய்க்கிழமையன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.மேலும்
புதன்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தின் அறிக்கை கூறுகிறது.மேலும்,
அக்டோபர் 30-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றும் நாளையும் தமிழ்நாட்டு கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அது மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தையும் எட்டலாம்.
எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் அக்டோபர் 30-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.