
தனியார் நிறுவனங்கள் சமூக நலனுக்காக ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரும் லாபத்தில் ஒதுக்கி நன்கொடையாகவும், பொதுநல சேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இது தவிர, அந்த பகுதியில் உள்ள கோயில்கள் சீரமைக்கவும், சாலைகள் சீரமைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான சாமான்கள், குடிநீர் வசதி, போன்றவற்றை செய்து தருகிறார்கள். இதையெல்லாம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.

இருப்பினும், கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்கூடிய விளம்பரங்கள் ,இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு கொடுப்பதில்லை.
ஏனென்றால், வியாபாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற தனியார் கம்பெனி நிறுவனங்கள், இந்த சமூக நலன் பத்திரிகைகளை ஏன் அலட்சியப்படுத்துகிறார்கள்? ஒருவேளை ஒரு சிலர் செய்கின்ற தவறான செய்திகளா? அல்லது இந்த பத்திரிகைகள் எல்லாம் நாட்டில் தேவையற்றது என்று நினைக்கிறார்களா? இதனுடைய உண்மைத்தன்மை அவர்களுக்கு தெரியவில்லை.மேலும்,
நாட்டில் மக்கள் ஏமாந்தால், அரசியல், வணிகம், எல்லாமே அடிப்படும். அதாவது மக்கள் வாங்கும் திறன் அதிகரித்து இருந்தால் தான், எந்த கம்பெனியாக இருந்தாலும் ,எந்த வியாபார நிறுவனங்களாக இருந்தாலும், அது நாட்டில் செழிப்பாக இருக்கும்.
அதற்கு முக்கியத்துவமாக செயல்படுவது சமூக நலன் பத்திரிகைகள் என்பதை இவர்களுக்கு இன்னும் புரியவில்லை.

இது தவிர , இந்த விளம்பரத்துக்கு கொடுக்கக்கூடிய பணம் கூட அவர்களுடைய வருமான வரி கணக்கில் அதை கணக்கு அப்படி இருந்தும் இவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால்,அரசியல் கட்சியினர் என்று பந்தாவாக 10 பேர், 20 பேர் வந்து கம்பெனியில் நிற்கும் போது, பயந்து கொண்டு, அவர்களுக்கு லட்சக்கணக்கில் கூட நன்கொடை என்று வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.

இங்கே கட்சி மீட்டிங் ,அங்க மாநாடு என்று வசூல் செய்து கொள்கிறார்கள். அதற்கெல்லாம் இவர்கள் கொடுக்கும் போது, இந்த பத்திரிகைகளுக்கு ஒரு சிறு தொகை ஏன் மாதம் ஒதுக்க கூடாது? என்பதுதான் சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் கேள்வி ?