
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன்னுடைய உயிரை தியாகம் செய்த பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு எந்தவித நிதி உதவி செய்யவில்லை.

குடிகாரர்கள் செத்தால் பத்து லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு முருக பக்தன் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன் உயிரை தியாகம் செய்திருக்கிறான்.

அவனுக்கு திமுக அரசு எந்தவித உதவியோ ,ஒரு அனுதாப செய்தி கூட தெரிவிக்கவில்லை. ஆனால் இந்துக்களின் ஓட்டு மட்டும்,1000, 500க்கு இவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம், இந்துக்களிடையே ஒற்றுமை இல்லை. அந்த ஒற்றுமையை இருந்தால் ,இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்காது.

மேலும், இந்த உயிருக்கான ஒரு மதிப்பு, மரியாதை அரசாங்கம் கொடுக்காமல் இருந்திருக்காது. இவர்கள் ஓட்டுக்காக தான் அரசியல் செய்வார்கள். அரசியல் செய்கிறார்கள் என்பது இன்னும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகளாகவே இருக்கிறார்கள். இந்த தவறு அவர்களும் செய்கின்ற தவறு.

பத்திரிக்கை தொலைக்காட்சிகளும் செய்கின்ற தவறு. நீங்கள் எது பெரிய பத்திரிக்கை ,பெரிய தொலைக்காட்சி என்று நம்புகிறீர்களோ ,நீங்கள் யார் காரில் வந்து இறங்குகிறான், பணத்தை பெட்டியில் வீசுகிறான் என்று மக்கள் நினைக்கிறார்களோ, அவர்களாலே நீங்கள் மறைமுகமாக ஏமாற்றப்படுகிறார்கள். அப்படி பல லட்சக்கணக்கான குடும்பங்களில் பூரண சந்திரன் குடும்பமும் திமுகவின் விசுவாசிகள். அவர்களுக்கும் இந்த நிலைமைதான். இப்போதாவது இந்த உண்மை திமுகவின் விசுவாசிகளுக்கு புரிகிறதா?மேலும்,

இவர்கள் வாக்கு வியாபார அரசியலை தான் செய்வார்கள். இதன் பின்னால் ,இந்த ஏழை, நடுத்தர மக்களின் குடும்பம் கல்விக்காக, பணத்தை ஆயிரக்கணக்கில் கடன் வாங்கியாவது, தன் உழைப்பை வியர்வை சிந்தி, தனியார் பள்ளிகளிடம் கொடுக்கின்றன.

அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மூலம் கொடுக்கின்றன. இதையெல்லாமே கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக இருப்பதை, தெரியாமல் திமுகவின் வெத்துவிட்டு பேச்சாளர்கள், தங்கள் சுயநலத்திற்காக பேசிக் கொண்டிருப்பார்கள்.

இது பற்றிய அவர்களுக்கு தெரிந்தாலும் கவலை இல்லை. தெரியாவிட்டாலும் கவலை இலலை . தாங்கள் பிழைக்க, எத்தனை பேர் வேண்டுமானாலும், சாகடிப்பார்கள். அதுதான் திமுக. இதைதான் திமுக மேலிடமும் ,திமுக செய்து கொண்டு இருக்கிறது.

இதுவே ஒரு கிறிஸ்தவநோ,முஸ்லிமோ இறந்து இருந்தால் ,இந் நேரம் லட்சக்கணக்கில் பணத்தை அறிவித்திருப்பார்கள். அந்த குடும்பத்திற்கு அரசு வேலை அறிவித்து இருப்பார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நிலையை மாற்ற பிஜேபி தமிழகத்தில், இந்த இந்து மக்களுக்கு ஒரு பாதுகாவலனாக இருக்கக்கூடிய வேலைகளை முன்னெடுக்க வேண்டும். இவர்கள் கொடுக்க விட்டால் என்ன?
நாங்கள் கொடுக்கிறோம் என்று மத்திய அரசு அறிவியுங்கள். 10 லட்சம் பணத்தை மத்திய அரசு அறிவியுங்கள் . அந்த குடும்பத்திற்கு படிப்பு செலவு, அந்த குடும்பத்திற்கு வேலை வாய்ப்பு ,எல்லாவற்றையும் கொடுத்து, ஒரு முருக பக்தனின் ஆத்மா சாந்தியடைய நிறைவேற்றுமா? இந்துக்கள் ஒன்றுபடுவோம் தீய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை வென்று காட்டுவோம்.