
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி சந்தேகத்தை எழுப்புகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணம், தற்போது தேர்தல் ஆணையம் 97 லட்சம் பெயர்களை நீக்கியுள்ளது. இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விஷயம் அல்ல. மேலும்,இது இன்னும் துல்லியமாக ஆய்வு செய்தால் ,ஒரு கோடி பேரையும் தாண்டும்.

தவிர, இந்த ஆய்வு தேர்தல் ஆணையம் நடத்தியது உண்மையிலேயே மிக, மிக வரவேற்க வேண்டிய ஒன்று.
மேலும், இறந்தவர்கள் பெயர்கள், இல்லாதவர்களின் பெயர்கள், இடம் மாறியவர்களின் பெயர்கள், எல்லாம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு ,அது போலி வாக்காளர்களாக உருவெடுத்து தேர்தலில் வாக்களிக்கப்பட்டால்,அது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

மேலும்,தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலின்போது மொத்த வாக்காளர்கள் 5, 99 36,0039 இதில் போலிங் ஆனது 4, 58, 86 ,784 ; மேலும், நோட்டா 3, 45,487, .இதில், அதிமுக கூட்டணி கட்சிகள் வாங்கிய ஓட்டுகள் 1,53, 9 1, 055, தவிர,
பர்சன்டேஜ் வோட் திமுக 37.70% ஓட்டுக்கள், அதிமுக 33.29%,
மேலும்,திமுக கூட்டணி கட்சிகள் வாங்கிய ஓட்டுகள் ,1, 74, 30, 179 .இது இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் வெறும் ₹20 லட்சம் ஓட்டுகள் தான்.
இப்போது சுமார் ஒரு கோடி பெயரை நீக்கியிருப்பதால், இந்த வாக்கு வித்தியாசத்தை போலியான வாக்குகள் என்று அரசியல் கட்சி வட்டாரங்கள் பேசுகிறது. ஒருவேளை தொடர்ந்து திமுக இப்படித்தான் தமிழ்நாட்டில் ஜெய்க்கிறதா? என்ற சந்தேகத்தை அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதனால் ,தான் இவர்கள் இதற்கு இந்த கத்து, கத்தனார்களா ? என்ற கேள்வியும் எழுகிறது. இதில் இவர்கள் கட்சிக்காரர்களே, இந்த வாக்காளர்கள் பெயர் நீக்கத்தின் போது,BLO க்களுடன் இணைந்து செயல் பட்டிருக்கிறார்கள். அப்படி இருந்தும், இவ்வளவு பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதை தேர்தல் ஆணையம் மீண்டும் சரி பார்ப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இங்கே, திமுக போலி வாக்காளர்கள் பெயரை வைத்து கள்ள ஓட்டு போடுவது தொடர்ந்து வந்துள்ளதா?
மேலும், எதிர்க்கட்சிகளின் வாக்காளர்கள் பெயர்களை இவர்கள் நீக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆக கூடி தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சரிபார்ப்பு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது, ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் ஆகி இருக்கிறது .

எனவே, தேர்தல் ஆணையம் இனி SIR விஷயத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும், வருவாய்த்துறை அதிகாரிகளையும், உள்ளாட்சித் துறை அதிகாரிகளையும், நம்பி இருக்காமல் ,தனிப்பட்ட முறையில் இதற்கென்று தனி அலுவலகம், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும் .அதற்கென்று தனி அதிகாரிகள் ,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இதற்கு, ஒரு துல்லியமான ரிப்போர்ட் ஏற்படுத்த முடியும். மேலும்,

ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர்கள் சரிபார்ப்பு இணையதளத்தில் சென்று தங்களுடைய பெயர் இருக்கிறதா? என்பதை சரி பார்த்துக் கொள்வது நல்லது. மேலும் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பி .எல். ஓ. களை அணுகலாம்.

இல்லையென்றால் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான https//:voters.eci.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களுடைய வாக்குகளை ஒவ்வொருவரும் சரிபார்த்துக் கொள்வது பாதுகாப்பானது.