
கடவுளே இல்லை என்று சொல்லி பதவியில் இருந்தவர்கள், பதவியை அடைந்தவர்கள், இப்போது இந்த பதவி, அதிகாரம், நம்மளை விட்டுப் போய்விடுமா? என்ற பயம் இவர்களுக்கு வந்து விட்டதா?.

காரணம், விஜய்! இவர்களுடைய ஓட்டு வங்கியில், கை வைத்து விட்டார். இவர்களுக்கு இருந்ததே சிறுபான்மை மக்களின் வாக்குகளும், தலித் மக்களின் வாக்குகளும் 37 சதவீதம் சாலிடாக இருந்தது.
அதில் இப்போது ஓட்டை போட்டு, 37 சதவீத வாக்குகளில் ஓட்டை போட்டு பிரித்து விட்டார். இப்போது எல்லோருக்குமே தோல்வி பயம் வந்துள்ளதற்கு முக்கிய காரணமே இதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும்,தென் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் காசிக்கே சென்று விட்டாராம் . கடவுள் என்ற ஒரு நபர் திமுகவும் ,திமுக கட்சியினரும், ஏமாளி என்று நினைத்து விட்டார்களா ? பதவி வந்ததும், சட்டத்தை ஏமாற்றுகிறார்கள். எந்தெந்த வழிகளில் கொள்ளையடிக்கலாம்,? அதை சட்டத்தின் ஓட்டைகள் மூலம் எப்படி மறைக்கலாம்? கடவுளே இல்லை என்று பேசலாம்.

மேலும் ,நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொன்னாலும், அதை மறுத்து தீபத்தை கூட அந்த கோயில் ஏற்றக்கூடாது என்று அதிகாரத்தை பயன்படுத்தலாம். மனசாட்சி இல்லாமல் ஆட்சியாளலாம். மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல், இருந்தாலும், தாங்கள் மட்டும் பாதுகாப்பாக வாழலாம்.

இவ்வளவும் செய்து விட்டு, மக்களை எந்த அளவுக்கு தங்களுடைய பேச்சால், திறமையாக ஏமாற்றலாம்?. இதற்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிகைகளுக்கும் ,தொலைக்காட்சிகளுக்கும் கோடிக்கணக்கில் எலும்பு துண்டுகளை போட்டுக் கொள்ளலாம்.

மேலும்,கடவுள் ஒரு கல், அவன் கோயிலில் எங்கே இருக்கிறான்? மக்களின் மூட நம்பிக்கை கோயிலுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் நினைத்தவர்கள், பேசியவர்கள், இன்று இந்த பதவி, அதிகாரம், நம் கையை விட்டு போய்வுடுமோ, என்ற பயத்தில் கோயில் கோயிலாக போய்க் கொண்டிருக்கிறார்களாம்.

இதில், சாமியார்களுக்கும், ஜோதிடர்களுக்கும் அடித்தது யோகம். இவர்கள் எந்தெந்த கோயில் சொல்கிறார்களோ, என்னென்ன பரிகாரங்கள் சொல்கிறார்களோ, அதையெல்லாம் செய்ய பாதி பேருக்கு மேல் புறப்பட்டுள்ளதாக தகவல்.
மேலும்,கடவுள் என்பவர் இவர்களுக்கு இளிச்சவாயன் என்று நினைத்து விட்டார்களோ, அப்படிதான் இருக்கும் என்று நினைக்கிறேன். பதவி, அதிகாரம் இருக்கும் வரை, ஆணவத்தில் பேசுவது, அகங்காரத்தில் ஆடுவது, அது போனதும் கடவுளே என்று தேடி காலில் விழ்வது.

அப்படிதான் அமைச்சர் கே .என். நேருவின் அமலாக்கத்துறை கைது விஷயத்தில், திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு, 40 லட்சம் நன்கொடை,அபிஷேகம், ஆராதனை, அன்னதானம், போட்டது தேவஸ்தானமே அதை விளம்பரப்படுத்தி விட்டது.
மேலும்,இதிலிருந்து மக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும், என்ன தெரிகிறது? கடவுள் நாம் என்ன தப்பு செய்தாலும், கோயிலுக்கு சென்று தேங்காய், பழம் ,பூ, அர்ச்சனை, அன்னதானம், செய்தால் நம்மை காப்பாற்றி விடுவார். நம்மளை எந்த சட்டமும் ஒன்றும் செய்யாது. நாம் ஜெயிலுக்கு போக மாட்டோம். இப்படி எல்லாம் இவர்கள் நினைக்கிறார்கள்.

அப்படிதான், ஜெயலலிதா மந்திரி சபையில், திருவள்ளூர் மாவட்டத்தில், அதிமுகவில் அமைச்சராக இருந்த ஒருவர், திருப்பதி வெங்கடேச பெருமாளை பௌர்ணமி, பௌர்ணமி சென்று தரிசித்து பதவி வாங்கினார். வாங்கிய பின் ஆசை அளவோடு இல்லை. குட்க்கா ஊழலில் சிக்கிக் கொண்டார்.
அதற்காக திமுக அமைச்சர் நேருவைப் போல், இவரும் திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்துக் கொண்டு, தன் மீது வழக்கு வாராமல் பார்த்துக் கொள்ள பிரம்ம பிரம்மபியத்தனம் செய்து பார்த்தார் நடக்கவில்லை.

வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சிறையும் சென்றார். பதவியும் ஜெயலலிதா பறித்தார். ஒன்று விடாமல் நடந்தது. அதனால், ஊழல் செய்து, சட்டத்தை ஏமாற்றி ,வாழ்ந்து விட்டு, அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று தவறான கணக்கில், இவர்கள் கடவுளோக்கே லஞ்சமா ?

இது தமிழக மக்கள் அல்ல, நீங்கள் எவ்வளவு கொள்ளையடித்தாலும், ஓட்டுக்கு 5000, 2000, 1000,என்று கொடுத்தால் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வாக்களிப்பவர்கள் முட்டாள்கள். மற்றொரு பக்கம் ஏமாளிகள்.
ஆனால், உன்னை படைத்து ,உன்னை வாழ வைக்கும் தெய்வத்திற்கு கொடுக்கவும், தெரியும். அதை எடுக்கவும் தெரியும். எல்லாம் வல்ல பரம் பொருள் பிச்சைக்காரனா? இல்லை, நீ பிச்சை போடும் அளவுக்கு அவன் பிச்சைக்காரனா?

இல்லை, நீ கொண்டுவரும் ஊழல் பணத்துக்கும், லஞ்ச பணத்திற்கும், உண்டியல் வைத்து கடவுள் காத்துக் கொண்டிருக்கிறாரா? ஒருகாலும் இல்லை. நீ ஒரு வேலைக்காரன்.உனக்கு இட்ட வேலையை நீ சரியாக செய்யவில்லை. தவறாக செய்தால் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.
மேலும்,இதில் கோயில்களில் கடவுள் பெயரை சொல்லி, கோயில் சொத்துக்களை கொள்ளை அடிப்பதும், அந்த பணத்தை தவறாக கணக்கெழுதி செலவு செய்வதும், அறநிலையத்துறை அதிகாரிகள், முதல் அமைச்சர் சேகர்பாபு வரை உண்மைகள் நிச்சயம் வெளிவரும் .

இல்லையென்றால் இந்த கணக்கை ஆடிட் செய்ய கூட காட்ட மாட்டேன் இதற்கு காலன் தான் கடவுள் யார்? என்று இவர்களுக்கு காட்டுவாரா? மேலும்,தெய்வம் உங்களைப் போன்று ,எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், பேசாது. நடிக்காது. அதற்கு அது எல்லாம் தெரியாது.

ஆனால், அதற்கான வலியும், வேதனையும், உங்களால் அனுபவித்த, மக்களின் கண்ணீரைப் பார்த்துக் கொண்டு, சும்மா இருக்காது. அரசன் அன்றே கொள்வான். தெய்வம் நின்று கொள்ளும். இதற்குள் பல அர்த்தங்கள்.

மேலும்,கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், கடவுள் என்னை வணங்கு, என்னிடம் வா, என்று அவர் எப்போதும் சொல்வதில்லை.
அவரை வணங்குவதற்கும், அதற்கான தகுதியும் ,புண்ணியமும் நீ செய்து இருந்தால் மட்டுமே, இந்த பிறவியில் கடவுளையும், மகான்களையும், தெய்வ வழிபாட்டையும், செய்ய முடியும்.

இல்லையென்றால் உன் பிறவி செய்த பலனுக்கு நரகமே. நீங்கள் எல்லாம் பெரிய பதவிக்கு போய் விடுவீர்கள் என்று நினைக்காதீர்கள். நீதிமன்றத்தை ஏமாற்றலாம். ஆனால், உங்களுடைய கணக்கில் செய்த நல்லது, கெட்டவைகளுக்கு எல்லாவற்றிற்கும் சேர்த்து வட்டியுடன் என்ன? என்று தீர்ப்பு எழுதுபவன் இறைவன்.

அதனால், கடவுள் உங்க இஷ்டத்திற்கு கடவுள் இல்லை. உங்கள் இஷ்டத்திற்கு தெய்வங்கள் இல்லை. இவையெல்லாம் பதவி போன பிறகு, அதிகாரம் போன பிறகு, உங்களுக்குப் புரிந்து என்ன பிரயோஜனம்?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா ? கடவுளிடம் எல்லாவற்றிற்கும் ஒரு விலை !அந்த விலை, நீங்கள் என்ன செய்தீர்கள்? அதற்கான விலையை கொடுத்தே தீருவார்.