தேர்தல் வாக்குறுதியில் சொன்ன, கூட்டுறவு வங்கி! விவசாய கடன் தள்ளுபடியை விஜய் ஏன் செய்யவில்லை ? விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் – குற்றச்சாட்டு.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

கூட்டுறவு விவசாய வங்கி கடன் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் விஜய் சொன்னது. அதாவது, ஐந்து ஏக்கர் நிலத்திற்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்

ஆனால் ,இப்போது எல்லாவற்றிலும் குரு விவசாயிகள், சிறு விவசாயிகள் என்று பிரித்து 5000, 10,000 தள்ளுபடி என்று அறிவித்துள்ளார். ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்றால் ,அதை மொத்தமாக தள்ளுபடி செய்து விட வேண்டும். இது கொசுருத்தனமாக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும்,தள்ளுபடி என்றால், முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஸ்டாலின் ஆட்சியில் 5 சவரன் நகை தள்ளுபடி என்று சொல்லி கணக்கிற்கு ஒவ்வொரு கூட்டுறவு வங்கியிலும் ,100 பேருக்கு கொடுத்துவிட்டு, கடன் தள்ளுபடி செய்து விட்டோம் என்று கணக்கு காட்டி விட்டார்கள். அதுபோல் இருக்கக்கூடாது.

மேலும்,அது மக்களுக்கான ஆட்சி அல்ல, அவர்களுக்கான ஆட்சி !மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள், வேதனைப்பட்டார்கள் . அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் ,விஜய் மக்களுக்கான ஆட்சியை நிலை நிறுத்துவேன் என்று சொன்னபோது தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்ற அது பற்றிஎதிர்க்கட்சிகள் கேட்பார்கள் .

அதுவும் விவசாயிகள் இதற்காக நிச்சயம் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அதை வைத்து எதிர்க்கட்சிகளும் ,அரசியல் செய்வார்கள் ,போராட்டம் நடத்துவார்கள். அந்த அரசியலுக்கு இடம் கொடுக்காமல் ,விஜய் தேர்தலில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் தமிழக விவசாயிகளின் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *