நக்கீரன் தமிழ் சங்கத்தின் மூலமாக சென்னையில் , ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் நீதிஅரசர் கற்பக விநாயகம் சாதனையாளர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நக்கீரன் தமிழ் சங்கத்தின் மூலம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு பாராட்டு விழாவும், பள்ளி மாணவர்களுக்கு கல்வியிலும் வாழ்க்கையிலும் ஒரு வழிகாட்டியாக இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய பெருமை இச்சங்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கருக்கு முக்கிய பங்கு என்று நீதியரசரே அவரை பாராட்டினார். மேலும், இக் கூட்டத்தில்!

ஒவ்வொருவரும் தான் மாணவப் பருவத்தில் எப்படி இருந்தோம்? எப்படி வாழ்ந்தோம் ?எப்படி முன்னேறினோம் ?என்பது பற்றி விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இப்படி பலர் பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களுக்கு பாராட்டியவர்கள், ஆன்மீக நெறியாளர் ஸ்ரீ பரத் சுவாமி, ஆன்மீக கருத்துக்களோடு நீதியரசரை பாராட்டினார்.

அதேபோல், செழியன் குமாரசாமி மற்றும் பொன் கி பெருமாள் ஆகியோர் நீதி அரசரை சிறப்பாக பாராட்டி மாணவர்களுக்கு சிறப்பான கருத்துக்களை எடுத்துரைத்தனர். மேலும், அனைவரின் பேச்சு,

இந்த விழா மேடையில் ,மிக சிறப்பாக பழைய பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளை ஒவ்வொருவருடைய பேச்சு நினைவு கூற வைத்தது.

அதில் சிறப்பாக ஒரு வழக்கறிஞர் தற்போது உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வாதாட கூடிய அளவிற்கு உயர்ந்த நிலைக்கு வந்த ஒரு பெண் டாக்டர் .எஸ். வேலா ஸ்ரீ தன்னுடைய மாணவப் பருவத்தில் தான் படிக்கும் போது, என்னை பெண் ஆசிரியர் (you are a shame less & imperfect girl ) என்று கேவலமாக பேசுவார்கள்.

நான் ஒரு கிராமத்தில் படித்த பெண். எங்கள் பள்ளியில் ஆங்கிலத்தில் நடத்தக்கூடிய பாடத்தை தமிழில் நடத்த வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்போம். அப்படி நான் கேட்ட ஒரு டீச்சரை அப்போது அந்த டீச்சர் என்னை கேவலமான வார்த்தைகளால் பேசினார். நான் அதையெல்லாம் தாங்கி எப்படியோ படித்து சென்னையில் வந்து பிளஸ் டூ சேர்ந்தேன்.

இங்கிருந்து கல்லூரியில் படித்து இன்று உயர்ந்த நிலைக்கு ஆங்கிலத்தில் ,தமிழில் சரளமாக பேசக்கூடிய அளவுக்கு என்னுடைய தொழிலை உயர்த்தி உள்ளேன். அதே பெண் ஆசிரியர் என்னை பார்க்க என்னுடைய பி ஏ விடம் அப்பாயின்மென்ட் கேட்டு என்னை பார்க்க வந்தார். அப்போது அவர்கள் பேசிய அந்த வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வந்தது. என்னை ஞாபகம் இருக்கா என்று கேட்டேன். நீங்கள் இந்த பள்ளியில் பணியாற்றினீர்களா? புரிந்து கொண்டேன்.

என்னிடம் உதவிக்கு வந்து இருக்கிறார்கள். அப்போது இதை சொல்வது நன்றாக இருக்காது. மேலும், இதை ஏன் சொல்கிறேன்? என்றால், இது என் வாழ்க்கையில் நடந்த அனுபவம், இந்த மாணவர்களுக்கு சொல்லும்போது ,எத்தனையோ படிக்காத மாணவர்கள் கடைசி ரேங்கில் இருப்பவர்கள் ,நம்மால் முடியாது என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும், அந்த மாணவர்களுக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் அப்படிப்பட்ட மாணவர்களுக்கு,அவர்களுடைய வாழ்க்கை எப்படி மாறி இருக்கிறது? என்பது மாணவர்கள் உண்மையிலே தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.மேலும்,

அதே போல் தான் நீதி அரசர் கற்பக விநாயகம் பேசும்போது சொன்னார். அவருடைய வாழ்க்கை மிகவும் சோகமானதாக இருந்தது. அந்த காலத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெறுவது கடினமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் தான் நீதி அரசர் எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்திருக்கிறார்.

தோல்வியை அடைந்தது மட்டுமல்ல, அவர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அதை ஒரு கதையாகவே இன்று மாணவர்களுக்கும், இக் கூட்டத்தில் வந்தவர்களுக்கும், உண்மையை புரிய வைத்திருக்கிறார்.

அதாவது நம்முடைய வாழ்க்கை இனி முடித்துக் கொள்ளலாம். அப்படி முடித்துக் கொள்ளும் வாழ்க்கை இந்த உயிராகப்பட்டது சித்திரவதை செய்து போகக்கூடாது. விஷம் குடித்தோ அல்லது தூக்கு மாட்டிக் கொண்டோ இந்த உயிர் போகுவதற்கு நீண்ட நேரம் ஆகும். அதனால், ரயிலில் தலையை வைத்தால், ஒரு நொடியில் உயிர் போய்விடும். அதுவும் சிறிய ட்ராக் உள்ள தண்டவாளத்தில் தலை வைத்தால், அதுவும் சரி வராது என்று பெரிய ரயில் பாதையில் தலையை வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டார். அப்படி முடிவெடுத்து இருக்கும் போது ,அந்த ஊரில் உள்ள லைப்ரரியில் ஏதாவது ஒரு நல்ல நாவலை கேட்டு வாங்கி படிக்கிறார்.

அதில் பல நாவல்களில் திருப்தி இல்லை. பிறகு காந்தியினுடைய சத்திய சோதனை என்ற ஒரு நாவலை வாங்கி படிக்கிறார் .இது படிக்க, படிக்க நாட்கள் போய்க் கொண்டே இருக்கிறது .இனி நம்முடைய உயிரை மாய்க்கும் எண்ணத்தை கைவிட்டு, விட்டு வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். அந்த முடிவில் கடுமையான உழைப்பில் எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெறுகிறார். கல்லூரியில் சேருகிறார் வெற்றியாளராக கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று, சட்டக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று, வழக்கறிஞராக இன்று நீதிபதியாக உங்கள் முன் நிற்பவர் தான் இந்த கற்பக விநாயகம் தான் இந்த உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்த நபர் என்று அதை ஒரு கதையாக சொன்னார். அந்தக் கதை இவர் சொல்லும் போது ,ஒரு திரைப்படத்தின் கதை போல இருந்தது.

இவர் ஏற்கனவே திரைத்துறைக்கு நடிகராக வரவேண்டும் என்று கனவு கண்டவர் .அதற்கான அழகு முகம், அவரிடம் இருந்தது. நாடகத்தில் நன்றாக நடிப்பவர். சிவாஜி போல முக அழகு உள்ளவர் .சிவாஜியை நேசிக்கக் கூடிய ரசிகர். பிறகு ஒரு நாள் என்னிடம் சொன்னார் .நான் எம்ஜிஆருக்காக ஜெயிலுக்கு சென்றேன். அங்கே பத்து நாள் ஜெயில் வாழ்க்கை இருந்தது. பிறகு எம்ஜிஆரை சந்திக்கும் வாய்ப்பு வரும் போது, நடிக்க வேண்டும் என்று அவரிடம் விருப்பத்தை சொன்னேன். அவர் சொன்னார் .எந்த வயதிலும் நடிக்கலாம்.

ஆனால், எந்த வயதிலும் படிக்க முடியாது வழக்கறிஞராக முடியாது. நீங்கள் நீதிபதியாக முடியாது .அதனால், தொடருங்கள் என்று அறிவுரை சொல்லி எம்ஜிஆர் அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு மனிதனுடைய உயர்வு தெய்வம் நம்பிக்கை மற்றும் நல்ல எண்ணங்கள் ,நிச்சயம் அவர்களை உயர்த்தும்.மேலும்,

நீதியரசர் கற்பக விநாயகம் பேசும்போது, மாணவர்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும், ஒரு கருத்தை ஆழமாக சொல்லி இருக்கிறார்.

அது என்னவென்றால்! மனித பிறப்பில் ,நீ எதுவாக இருக்கிறாய்? எப்படி வாழ்கிறாய்? எவ்வளவு நாள் வாழ்கிறாய்? என்பது முக்கியமல்ல, நீ எப்படி சம்பாதித்தாய் ?கோடிக்கணக்கில் சம்பாதித்தாயா? அது முக்கியமல்ல, எப்படி நேர்மையாய் சம்பாதித்தாய்? என்பது தான் முக்கியம் ?

பதவியில் இருப்பது முக்கியமல்ல, பதவியிலிருந்து நீ என்ன செய்தாய்? என்பதுதான் முக்கியம்.மேலும், நீதி அரசரை பற்றி வேல ஸ்ரீ வழக்கறிஞர் சொல்லும் போது, இவருடைய தீர்ப்பு பகவத் கீதையை ஒட்டி இருக்கும். பல தர்ம சிந்தனைகளை கொண்ட நீதியாக அது இருக்கும். நீதி அரசர்களுக்கும், அது ஒரு வழிகாட்டியாக இருக்கும். இப்படி ஒரு போற்றப்படும் பாராட்டப்படும் நபராக இன்றைய நீதியரசர் கற்பக விநாயகம் இருக்கிறார். இதைப் பற்றி அவர் சொன்ன ஒரு முக்கிய தகவல்.

என்னுடைய உயர்வுக்கும், பாராட்டும், இந்த பெருமைக்கு பின்னால், மூன்று பேர் இருக்கிறார்கள். ஒருவர் நான் வணங்கும் சீரடி சாய்பாபா, இரண்டாவது எம்ஜிஆர், மூன்றாவது என் மனைவி பத்மினி, இந்த மூன்று பேரும் என் உயர்வுக்கு பின்னால் இருப்பவர்கள் என்று இந்த விழா மேடையில் தெரிவித்தார். அது மட்டுமல்ல, மாணவர்களுக்கு அவர் தெரிவித்தது

மாணவர்கள் முயற்சித்து, முன்னேற வேண்டும் முயற்சிக்காமல் இருப்பது தவறு .உழைக்காமல் இருப்பது தவறு. அதனால், ஒழுக்கம் உயர்வானது. அதற்கு பாடலை பாடிவிட்டார். அந்தப் பாடலை மக்கள் அதிகாரம் பத்திரிகையிலும் ,வெளியிட்டிருக்கிறேன். மேலும்,கல்விக்கு அழகு, அறிவு, அறிவுக்கு அழகு ஒழுக்கம், ஒழுக்கத்திற்கு அழகு, அன்பு. இப்படி ஒரு மனிதன் அன்பு, அறிவு மட்டுமே அவனை உயர்த்துகிறது என்று தனது உரையை சிறப்பித்து முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *