நாட்டில் சட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றுவது சட்டமல்ல, அதேபோல் பத்திரிக்கை துறையில், சட்டத்தின் மூலம் பத்திரிக்கை துறையை ஏமாற்றுவது பத்திரிக்கை சட்டம் அல்ல !

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டு மக்களுக்கு காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. 19 65 க்கு முன் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, 1965 க்கு பிறகு வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு. இது பற்றி மக்கள் அதிகாரத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.

இன்று பல சட்டங்கள் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தான் 1947 ல் போடப்பட்ட சட்டங்கள் இன்னும், அதை ஒட்டியே பல சட்டங்கள் பத்திரிக்கை துறையில் போடப்பட்டு கொண்டிருக்கிறது.

இதற்கு என்ன காரணம் ?என்றால், அரசியலுக்குள் பத்திரிகைகள் வந்துவிட்டது. ஒரே வரிகள் சொல்லப்போனால், இவர்கள் அவர்களுடைய கைக்கூலிகள். பல கைக்கூலிகள் சோசியல் மீடியாவில் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறது. இவன் என்ன சொன்னா தெரியப்போகிறது? தெரிந்தவர்களுக்கு தான் அது தெரியும். அதனால்,

இந்த கைக்கூலிகள் மக்களின் வரிப்பணத்தை சாப்பிட்டு, மனசாட்சி இல்லாமல், மக்களுக்கு எதிராகவே ஆட்சியாளர்களுக்கும் ,அரசியல் கட்சிகளுக்கும், பத்திரிக்கை வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இந்த சட்டங்களை சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும்,

மாநில அரசில் இது பற்றி தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பதில் கேட்டால், சரியான பதில் இல்லை. அதே போல், மத்திய அரசின் செய்தித் துறையில் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பதில் கேட்டால், not related ; advertising policy 2020 என்று சொல்கிறார்கள்.

இப்படி பத்திரிக்கை துறையிலே பத்திரிகை துறையை ஏமாற்றுகின்ற சட்டங்கள் இருக்கும்போது, மக்களை ஏமாற்றும் சட்டங்கள் மக்களை இன்னும் நன்றாக ஏமாற்றிக் கொண்டிருக்கும்.தவிர, பத்திரிக்கை என்றால் என்ன? என்று தெரியாதவன் எல்லாம் பத்திரிக்கைக்கு வந்து, பத்திரிக்கை துறையை நானும் பத்திரிகை என்று பேசிக் கொண்டிருக்கிறான்.

எந்த ஒரு காலத்திலே ஒரு கட்சி பத்திரிக்கையில் வேலை செய்திருப்பான். இன்று யூடியூபில் கரை வேஷ்டி கட்டாமல், நானும் பத்திரிக்கையாளன் என்று சொல்லிக் கொண்டு ,மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைவிட ஒரு கொடுமை பத்திரிகையின் பெயர் மற்றும் RNI போன்ற அனைத்தும் ரெடிமேடாக விற்க்கக்கூடிய ஒரு மாவட்டம் திருப்பூர் மாவட்டமாக இருக்கிறது. எந்த அளவுக்கு இந்த பத்திரிகைத்துறை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? இது பற்றி மத்திய, மாநில அரசின் செய்தித்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இதற்கெல்லாம் நிச்சயம் இவர்கள் பதில் சொல்லிவிட்டு தான் போவார்கள் அது உறுதி. ஏனென்றால், இன்று நாட்டில் பல போலிகள் எல்லாத் துறையிலேயும் ,ஊடுருவி உள்ளது. குறிப்பாக சொல்லப் போனால் நீதித்துறையில் என்று போலி வழக்கறிஞர்கள், கட்டப்பஞ்சாயத்து கூட்டமாக இருந்து வருகிறார்கள்.

அவர்கள் தான் இப்போது பெரிய வக்கீல்கள் போல் மக்களிடம் பந்தா காட்டிக் கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே பேக்ரவுண்ட் என்னவென்றால், ஒரு பக்கம் ஜாதி கொண்டு வருவார்கள் ,இன்னொரு பக்கம் அரசியல் கட்சியை கொண்டு வருவார்கள்.

இது ரெண்டுமே கட்ட பஞ்சாயத்துக்கு தோதாக இருக்கிறது. அதுபோல்தான் இந்த பத்திரிகை துறையிலும், ஜாதி சப்போட்டில் இருப்பவர்கள், கட்சி சப்போர்ட்டில் இருப்பவர்கள், இந்த போலி பத்திரிகைகளின் பின்புலம்.

இதை வைத்துக்கொண்டு தான், இந்த போலிகள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் அரசியல் சரியாக இருந்தால், போலிகள் ஆட்டம் போட முடியாது.. அரசியல் சரி இல்லாத காரணத்தால், போலிகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கே உழைப்பவன் எப்படி? முன்னுக்கு வர முடியாமல், போராடிக் கொண்டிருக்கிறானோ, ,அதேபோல்தான் பத்திரிக்கை துறையிலும் தகுதியானவர்கள் முன்னுக்கு வர முடியாமல், போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து, எந்த சலுகையும், விளம்பரமோ கொடுப்பதில்லை.

இது தவிர ,தகுதி இல்லாத அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகள்,தகுதி இல்லாத நபர்கள் ,அவர்களெல்லாம் இந்த அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இருந்து கொண்டு, ஒரு கட்சிகாரனை போல் செயல்பாடுபவர்க்கெல்லாம், சலுகை, விளம்பரங்கள் கிடைக்கிறது.

இது பத்திரிக்கை துறை என்று சொல்வதை விட, அரசியல் கட்சி துறை என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால், செய்தித் துறையை அரசியல் கட்சி துறையாக மாற்றி விட்டார்கள். எல்லா செய்தியும், அரசியலில் எந்த கட்சி! ஆட்சிக்கு வருகிறதோ, அதற்கு பக்க பலமாக செய்திகளை போட்டுக் கொண்டு, மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருப்பது தான் இன்றைய மத்திய மாநில அரசின் செய்தி துறைகளின் வேலையாக உள்ளது.

இவர்களுக்கு சர்குலேஷன் பற்றி என்ன தெரியும்? மக்கள் பத்திரிக்கை எந்த அளவில் வாங்கி படிக்கிறார்கள்? அது பற்றியும் தெரியாது. எல்லாம் இணையதளத்தில் ஐந்து வயது குழந்தை முதல் 80 வயது வரை உள்ள நபர்கள் வரை இன்று இணையதளத்தில் தான் படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படி இருக்கும்போது, நீ எப்படி ?இந்த சர்குலேஷன் சட்டத்தை வைத்து 2020 அட்வெர்டைஸிங் பாலிசி, அந்த பாலிசி, இந்த பாலிசி எல்லாம் யாரை ஏமாற்றும் பாலிசி? மாற்றங்கள் சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிகைகளின் தகுதி, தரம், அதைப் பற்றி எல்லாம் நிர்ணயிக்காமல் ,சர்குலேஷன் எப்படி ஒரு பத்திரிக்கையை நிர்ணயிக்கிறது?

அடி முட்டாள்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். பத்திரிக்கை என்றால் அடையாள அட்டை, பத்திரிகை என்றால் லேபிள், இதுதான் பத்திரிகை என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கே பத்திரிகை பற்றி தெரியாது ‌ஒருவன் கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சியில் வேலை செய்து விட்டால், அவன் ஒரு பெரிய பத்திரிகை என்று அவனே நினைத்துக் கொண்டிருக்கிறான்.

முதலில் இந்த முட்டாள்களுக்கு பத்திரிகை என்றால் என்ன? என்று தெரியாது .அவர்களுக்கும் ,ஏதோ மக்கள் இந்த லேபிளை பார்த்து வாங்குவதாக ஒரு பிசினஸ் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிக்கை பிசினஸ் அல்ல, பத்திரிக்கை என்பது வியாபார நிறுவனம் அல்ல . ஆனால் இப்போது சலுகை விளம்பரங்கள் வாங்கக்கூடிய அத்தனை பத்திரிகைகளும் வியாபார நிறுவனங்களாக தான் இருந்து வருகிறது. இந்த வியாபார நிறுவனங்கள் எப்படி மக்களுக்கு சமூக மாற்றத்திற்கான செய்திகளை வெளியிடுவார்கள்? சமூக நலனை எதிர்பார்த்து இவர்கள் பத்திரிக்கை, தொலைக்காட்சி நடத்தினால், இவர்களுடைய வியாபாரம் படுத்துக் கொள்ளும். ஆனால், சமூகநலன் ஒன்றே முக்கியம் என்று நடத்திக் கொண்டிருக்கும் பத்திரிகைகளுக்கு அரசாங்கம் சட்டம் ,இந்த பத்திரிகை துறையை எவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது? என்பது பொதுமக்களுக்கு இப்போது நன்கு புரிந்து இருக்கும். மேலும் பத்திரிகை என்பது

சமூக மாற்றத்திற்கானது. சமூக நலனுக்கானது. மக்களுக்கு உண்மையை சொல்லக்கூடிய, ஒரு கருவி. நீ எப்படி சொன்னாலும், அது உண்மை என்று அவன் நம்ப வேண்டுமா? நம்புவது முட்டாள்களை உன்னால் நம்ப வைக்க முடியும். மேலும்,

பத்திரிக்கை துறையை பற்றி படித்தவர்களை ,நீ நம்ப வைக்க முடியாது. மேலும், சட்டம் என்பது ,அந்த சட்டத்தினால் மக்களுக்கு என்ன நன்மை? என்று தான் கணக்கு இருக்க வேண்டுமே ஒழிய, அரசாங்கத்தின் நலனுக்காகவும், ஆட்சியாளர்களின் நலனுக்காகவும், இன்றைய பத்திரிக்கை சட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

இதை தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதைப் பற்றி தமிழ்நாட்டில் செய்தியை வெளியிடுகின்ற ஒரே பத்திரிகை ,மக்கள் அதிகாரம் தான். மற்ற பத்திரிகைகள் லட்சக்கணக்கில் இருக்கிறது.

அது எதற்காக இருக்கிறது ?ஏன் இருக்கிறது ?என்று கூட இந்த செய்தி துறை அதைப்பற்றி சிந்தித்தது இல்லை இவர்களும் பத்திரிகை என்றால் ,பக்கங்கள் ,அந்த செய்தி மக்களுக்காக என்ன செய்து இருக்கிறது?

அந்த செய்தியால் மக்களுக்கு என்ன பயன்? எதுவுமே தெரியாத செய்தி துறை அதிகாரிகள் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்காக இந்த பத்திரிகைகள் ?என்றாவது இவர்களுக்கு தெரியுமா?

அந்த செய்தியால் என்ன பயன் ?என்று கூட தெரியாது, இந்த செய்தி துறையில் பணியாற்ற கூடிய அதிகாரிகளுக்கு, இவர்கள் எல்லாம் செய்து துறையில் இருந்து என்ன பயன்?ஏதோ கூலிக்கு வேலை செய்கின்ற கூட்டம் போல், இவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

காலம் இதற்கு எப்போது விடை எழுதப்போகிறது? என்ற வேதனையில் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள், தகுதியான பத்திரிகையாளர்கள் கேள்வி ? பத்திரிக்கை சமூக மாற்றத்திற்கானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *