நாட்டில் அட்ரஸ் இல்லாதவர்கள் தங்கள் விலாசத்தை மக்களிடம் அடையாளப்படுத்துவதற்கும் தங்களுடைய சுயலாபத்திற்கும் இன்றைய அரசியல் கட்சியினர். அதனால் தான் ஊரில் எங்கள் முகங்களை கட்டவுட்டில் பாருங்கள் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், தமக்கு எங்கே ?ஆதாயம் என்று தான் தேடி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்.
மக்கள் நலனுக்காகவோ, மக்கள் சேவைக்காகவோ, தற்போது எந்த அரசியல் கட்சியும், கூட்டணி வைப்பதில்லை . அதேபோல், அரசியல் கட்சியினர்களும், எந்த கட்சியில் போனால், பல கோடிகளை சம்பாதிக்கலாம்? எந்த கட்சியில் போனால், பதவிகளை சம்பாதிக்கலாம்? இப்படி கணக்கு போட்டு தான், அரசியல் கட்சிகளை முன்னால் எம்எல்ஏக்களும், முன்னாள் ,இன்னாள் எம்பி ,எம்எல்ஏக்கள் ,மந்திரிகள், முன்னால் ,இன்னால் மாவட்ட செயலாளர்களும், ஒரு கட்சியில் இருந்து, இன்னொரு கட்சிக்கு மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

மேலும்,திமுகவுக்கு போனால், திமுகவை உயர்வாக பேசுவார்கள். அதிமுகவுக்கு போனால் , அதிமுகவை உயர்வாக பேசுவார்கள். இப்படி எந்த கட்சிக்கு இவர்கள் தாவினாலும், அந்தந்த கட்சியை உயர்த்திப் பேசிக் கொண்டே இருப்பார்கள். அப்போதுதான் இவர்கள் சம்பாதிக்க முடியும். ஆக கூடி அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது.

இந்த வியாபாரத்திற்கு யார் முக்கிய காரணம் !என்றால், பணம் வாங்கி தன்னுடைய ஓட்டுரிமையை விற்கக்கூடிய வாக்காளர்கள் தான் இந்த வியாபார அரசியலையும், ஊழல் அரசியலையும், நாட்டில் உருவாக்குபவர்கள் .அவர்கள் தன்னுடைய வறுமைக்கு கொடுத்தார்கள். நான் வாங்கிக் கொண்டேன் என்று சொல்வது மிகப்பெரிய தவறு.

இது தகுதியற்ற வாக்காளர்களாக இவர்களை கொண்டு வர வேண்டும். இவர்களால் பாதிக்கப்படுவது உழைப்பவர்கள் ,நேர்மையாக இருப்பவர்கள், இவர்கள் எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள். உழைக்காமல் ஊரை ஏமாற்றி சொத்து சம்பாதிக்க கூடிய அரசியல் கட்சி கூட்டங்கள் ,இவர்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஒரு பக்கம் குடிகாரர்கள், இன்னொரு பக்கம் ஓட்டுக்கு விலை போகக்கூடிய மக்கள், இவர்களால் தான் நாடு இப்போது கூட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறது. இதை படித்த வருங்கால இளைய தலைமுறைகள், இந்த அரசியல் மாற்றத்தை கொண்டு வந்தால் தான், அவர்களுடைய எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும்.
மேலும்,ஊழல் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால், படித்த இளைஞர்கள் ,ஊழல் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. அரசியல் கட்சி என்பது வேறு, ஒருவருடைய தனிப்பட்ட தகுதி என்பது வேறு ,தனிப்பட்ட தகுதிக்கும், அரசியல் கட்சிக்கும் ,சம்பந்தம் கிடையாது.

ஒருவன் நேர்மையான அரசியல்வாதியாக, எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும், அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஒருவன் ஊழல்வாதியாக எவ்வளவு பெரிய அரசியல் கட்சியில் இருந்தாலும், அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது.
இதுவரையில் எந்த அரசியல்வாதியாவது, எந்த அரசியல் கட்சியிலாவது, நான் இந்த மக்களுக்காக இந்த தொகுதியில் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறேன். இதை செய்திருக்கிறேன். நேர்மையாக என்னுடைய பணியை உங்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறேன் என்று எவனாவது ஒருவன் பேசியிருக்கிறானா? தமிழ்நாட்டில் அப்படிப்பட்டவர்களை தேட வேண்டி இருக்கும் . இவர்கள் தலைவா வாழ்க, தலைவா வாழ்க என்று கத்திக் கொண்டிருப்பார்கள்.இதுதான் இன்றைய அரசியல் நிலைமை .

மேலும், அரசியலில் நேர்மையும் , சமூக சேவையும் ஒருவரின் முக்கியத்துவம் ஆன தகுதி .இது இல்லாதவர்கள் ,எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும், அவர்களுக்கு வாக்களிப்பவர்கள் ,தகுதி இல்லாதவர்களாக தான் இருப்பார்கள்.
ஒருவன் பணக்காரன் என்பதால், அவனுக்கு வாக்களிக்கக் கூடாது நேர்மையானவன் என்பதால், அவனுக்கு வாக்களிக்க வேண்டும். நேர்மைக்கு பணம் ஈடு இணை அற்றது. ஏமாற்று பேர்வழிகளும், தங்களை நேர்மையானவர்களாக காட்டிக்கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் பணத்தை குறுக்கு வழியில், பல கோடிகளை சம்பாதிக்கிறது பட்டார்கள் . அந்த இல்லீகலாக சம்பாதித்த பணத்தை தான் ஓட்டுக்கு கொடுப்பார்கள்.
நேர்மையாக உழைத்து வாழ்பவர்கள் அந்த பணத்தை கொடுக்க முடியாது.அது ஊரை ஏமாற்றுபவனால் தான் கொடுக்க முடியும். அதனால், மக்கள் இருவரையும், ஒன்றாக பார்க்க கூடாது. அதாவது செய்தித் துறையில் ஒரு தவறான சட்டம் . அது என்னவென்றால்,

சமூகநலன் பத்திரிகைகளுக்கும் சர்குலேஷன் சட்டம், வியாபார பத்திரிகைகளுக்கும் சர்குலேஷன் சட்டம், அரசியல் கட்சி பத்திரிகைகளுக்கும் சர்குலேஷன் சட்டம், என்ன சட்டம் இது?
இங்கே கொள்ளையடிப்பவனும் ஒன்று, ஊரை ஏமாற்றுபவனும் ஒன்று, நேர்மையானவனும் ஒன்று, ஒரே சட்டமா? எல்லாவற்றிற்கும் ஒரே சட்டமா? அதாவது பணத்தினால் ஒரு மனிதனுக்கு தகுதி வந்து விடுகிறதா? அதுபோல்தான் பணம் இருந்தால் சர்குலேஷன் அப்போது சர்குலேஷன் இருந்தால் எவ்வளவு மக்களுக்கு தேவையற்ற செய்திகளும் வியாபார செய்திகளும் போட்டாலும் அவர்களுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். செய்தித்துறை சட்டமும் அரசியல் கட்சியினர் சட்டமும் ஒன்றாகத்தான் இருக்கிறது. அதாவது சட்டம் என்பது செய்தி துறையிலும் ,இந்த சர்குலேஷன் சட்டம், இந்த பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

அதனால், ஏழை, பணக்காரன் என்பது நேர்மைக்கு, உழைப்புக்கு, சமூக சேவைக்கு, ஈடு இணையற்றது. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? மக்களை மதிப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களை மதிக்கின்ற அரசியல் கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும். வாயிலே நல்ல வார்த்தை பேசி விட்டு ,பதவி வந்தவுடன் திரும்பிப் பார்க்காதவர்களை, மக்கள் திரும்பிக் கூட பார்க்க கூடாது.
இதை எல்லாம் தொடர்ந்து இந்த மக்கள், அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தான் இந்த பாடம். ஏனென்றால் ஒருவன் 10 காரைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, இவர்களோடு 10 அவர்கள் கட்சியின் எடுப்புகளையும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, கையெடுத்து கும்பிட்டு, நன்றாக பேசி வணங்கி கும்பிட்டுக் கொண்டு இருந்தால் ,நல்லவர் என்று முடிவு செய்து அவர்களுக்கு வாக்களிப்பது உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.

அதனால், அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் வேலை அல்ல . மேலும்,அது மக்களுக்கான உரிமையை பறிக்கும் வேலை .அதற்கு நீங்களே துணை போனால் ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான். இப்போது பிரேமலதா எங்கு ஆதாயமா, அங்கு சேர்ந்து கொண்டார். அதிமுகவிலும் பேசினார், தவெகாவிலும் பேசினார். எங்கு அதிக வருமானம் இருக்கிறதோ ,அங்கு சேர்ந்து விட்டார். இதுதான் இன்றைய அரசியல்.

இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்களுக்கான ஆதாயத்தை தேடித்தான் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். இதில் வாக்களிக்கும் மக்கள் ஏமாளிகளா? அல்லது முட்டாள்களா? அல்லது இவர்களை பாராட்டி இங்கு வாக்கு சேகரித்தார். அங்கு வாக்கு சேகரித்தார் .அங்கே மக்கள் கூட்டத்தில் இதை பேசினார் .அதை பேசினார். வீடு ,வீடாக சென்று, வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார். இதையெல்லாம் பத்திரிகை செய்தி என்று, பல பத்திரிகைகள் வெளியிடுகின்ற செய்திகளும், தேர்தலில் ,மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த செய்திகளால்,மக்களுக்கு என்ன பயன்? இவர் சேகரித்தால் என்ன? இவர் பேசினால் என்ன ?பேசாவிட்டால் என்ன? இவர் என்ன செய்தார்? மக்களுக்கு இதுதான் உண்மையான பத்திரிக்கையாளர்கள் ,சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வி?
ஸ்டாலின் கேக்குறாரு சோசியல் மீடியா வீடியோக்களில் வருகின்ற விளம்பரங்களில் , என்ன வருகிறது? என்றால், இவர் பெண்களைப் பார்த்து கேட்கிறார்.உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்து ஆயிரம் ரூபாய் வருதா? இந்த ஆயிரம் ரூபாய் வைத்து எத்தனை நாளைக்கு இவர்கள் பிழைப்பார்கள்? 5000 ஐ பெருமையாக பேசுகிறார்கள்? இந்த 5,000-த்தை வைத்து எத்தனை நாளைக்கு பிழைப்பார்கள்?

மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி நினைக்காமல், ஆயிரம், இரண்டாயிரம் ,ஐயாயிரம் ஓட்டுக்கு அரசியலா? இந்த பணத்தால், மக்களை விலை பேசக்கூடிய வேலை.மேலும், படிப்பறிவில்லாத காலத்தில் கூட மக்கள் பணத்தை வாங்கி ஓட்டு போட்டதில்லை.

இன்று ஊருக்கு 90% பேர் பட்டதாரிகள். இந்த காலத்தில் தான் அரசியலில் அதிகமான ஊழல்கள் இருக்கிறது .பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள். அரசியல் என்பது ஏமாற்றமாக, போராட்டமாக, இருந்து கொண்டிருக்கிறது. இதை முறியடிக்க வேண்டும் என்றால்! தகுதியான அரசியல்வாதிகளை தேர்வு செய்ய வேண்டும்.

அந்த தகுதியை மக்கள் பணத்தை வைத்து நிர்ணயிக்கிறார்கள் .அது தவறானது. ஒருவரின் தகுதி என்பது அரசியலில் அவருடைய நேர்மையும், சமூக சேவையும், மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்வு செய்தால் ,நாட்டில் ஊழலற்ற நேர்மையான நல்லாட்சி உருவாகும். அதனால் ,இதை உருவாக்குவது மக்கள் கையில் !

இன்று சசிகலா அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள்? பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார் .யாருக்காக இவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்? உழைக்கும் மக்களை முன்னேற்றவா? இல்லை இவர்களுக்கு கொடி பிடிக்க ஆட்கள் தேவை. மக்களுக்காக இன்றைய அரசியல் கட்சிகள் இல்லை.