நாட்டில் ஊழலை ஒழிக்க பத்தாண்டுகளுக்கு மேல் அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகள் (Registration)தேர்தல் ஆணையம் நீக்குமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் ஊழலை ஒழிக்க முக்கிய நடவடிக்கைகளில் அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகள் தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் .

அரசியல் கட்சிகள் என்பது கடந்த காலங்களில் சமூக நலனும், தேச நலனும் மட்டுமே முக்கியத்துவம் ஆக இருந்தது.

இன்று இந்த தூண்டுக் கட்சிகள் அதாவது லெட்டர் பேட் கட்சிகள் முதல் ஒரு சதவீத ஓட்டு , 2 % ஓட்டு,3% சதவீத ஓட்டு, 5% சதவீத ஓட்டு ,6 % சதவீத ஓட்டு, 7% சதவீத ஓட்டு, 10% சதவீத ஓட்டு, இது எல்லாம் இன்று நாட்டில் ஊழலை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. எப்படி? என்று பொதுமக்களுக்கு தெரியாது.

ஆனால், இந்தக் கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும், தங்களுடைய சுயநலத்திற்கும், பொது சொத்துக்களை ஏமாற்றவும், ரவுடிசம் செய்வதற்கும், கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கும், ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலை செய்வதற்கும், பல் வேறு பிராடு வேலைகளை செய்வதற்கும், இன்றைய அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சொல்லப் போனால் சமூக விரோதிகள் இந்த அரசியல் கட்சிகளால் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் ஒரு பக்கம் அம்பேத்கர் பெயரை பயன்படுத்தியும், அரசியல் கட்சிகளை பயன்படுத்தியும், சமூக விரோத கும்பல், செயல்படுகிறது.தவிர,அம்பேத்கர் இவர்களை கட்டப்பஞ்சாயத்து பண்ணி ,ரவுடிசம் பண்ண, அம்பேத்கர் என்ன வச்சு பொழப்பு நடத்துங்கன்னு சொன்னாரா? தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேத்கர் ஒரு காலம் அனுமதிக்க மாட்டார்.

மேலும்,அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவரே அல்ல என்கிறார்கள். ஆனால், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக அடித்தட்டு மக்களுக்காக போராடிய ஒரே காரணத்துக்காக ,இவர்கள் அவரை ஜாதி தலைவராக ஆக்கிக் கொண்டார்கள். எப்படியோ இருக்கட்டும், ஆனால் ,

அம்பேத்கர் நோக்கமும், செயல்பாடும் அது தேசத்துவமானது . அது குறுகிய நோக்கம் கொண்டதல்ல,ஆனால் அம்பேத்கரை வைத்து மற்ற சமுதாயத்தை மிரட்டலாம் என்று அரசியல் செய்வது, அவரை வைத்து பி சி ஆர் ஆக்ட் (PCR act ) மூலம் வன்கொடுமை சட்டத்தில் பழிவாங்க நினைப்பது, இது எல்லாம் இன்றைய அரசியல் கட்சிகளில், சமூகவிரோதிகளின் வேலையாக உள்ளது.மேலும்,

தேர்தல் ஆணையம் அவசியம் 10 ஆண்டுகாலம், இவர்கள் மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சிகளாக வருவதற்கு தகுதி இல்லை என்றால் ,எதற்கு அப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்க வேண்டும்? நான் சொன்னது அதிகம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தான் ஒரு கட்சி வளர்வதற்கு ,வளர்ந்து தேர்தலில் அங்கீகாரம் பெறுவதற்கும், பிறகு குறிப்பிட்ட எம்எல்ஏ, எம்பிகளை ஜெயிக்காமல் ,ஓட்டு சதவீதம் வாங்குகிறேன் என்று சொல்வது, மக்களுக்கு அதனால், எந்த பயனும் இல்லை.

மேலும்,ஒரு அரசியல் கட்சியின் நோக்கம் என்ன? அதன் செயல்பாடு என்ன ?அது எதற்கு தேவை ?என்பதை கருத்தில் கொண்டு ,தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இப்போது கூட 2026 தேர்தலில் இந்த அரசியல் கட்சிகள் கூட்டணி, மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? அல்லது இவர்களுக்கு ஒத்துப் போகக்கூடிய அளவில் இருக்கக்கூடிய கூட்டணிகளை இந்த அரசியல் கட்சிகள் வைக்கிறார்களா ?என்பதை மக்களும் சிந்திக்கிறார்கள்.

மேலும்,பிரேமலதா விஜயகாந்த் அதிமுக ,திமுக இரண்டு கட்சிகளிடமும் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார் .இப்படி பேரம் பேசி சீட்டு வாங்கி, பணத்தை வாங்கி எதற்காக? இந்த தேமுதிக கட்சி தேர்தலில் நிற்க வேண்டும் ?

இதனால், மக்களுக்கு என்ன பயன் ?அதை சிந்தியுங்கள் . நீங்கள் பல கோடிகளை சம்பாதிப்பதற்கு, அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொண்டு, சமூக விரோத செயல்களை செய்வதற்கு அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டு, அரசியல் தெரியாத அடி முட்டாள்கள், ஆயிரம், ஐநூறுக்கு (1000,500 ) உங்களுக்கு எல்லாம் வாக்களித்துக் கொண்டு, படித்தவனையும், அரசியல் தெரிந்தவணையும், முட்டாளாக்கிக் கொண்டு, இந்த சமூக முன்னேற்றத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஊழலை உருவாக்கிக் கொண்டு, இந்த அரசியல் கட்சிகளால் நாட்டுக்கு தேசவிரோத சக்திகளாக இருந்து கொண்டு இருப்பதால், என்ன பயன்?

மேலும் , இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளை, மக்களிடம் இவர்களின் செய்திகளை, அது உண்மையா? பொய்யா? என்று கூட ஆய்வு செய்யாமல், கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், அவர்கள் சொல்லும் பொய்களை, மக்களிடம் பத்திரிகை வியாபாரம் நடத்த, மக்களுடைய வரிப்பணத்தில் அதற்கு சலுகை, விளம்பரங்கள் செய்தித் துறை கொடுக்க, இது எல்லாம் எவ்வளவு பெரிய தேச துரோக வேலை?

எனவே,தேர்தல் ஆணையம் இந்த முக்கிய கருத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் சார்பிலும் ,இந்த தேச நலன் சார்பிலும் ,நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு வைக்கின்ற முக்கிய கோரிக்கை.Therefore, the main request that the Election Commission should examine this important issue and take action is the main request that the MAKKAL ADHIKARAM MEDIA makes to the Election Commission to take action on behalf of the newspaper, on behalf of social welfare, and on behalf of this nation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *