நாட்டில் கொள்கைக்காக அரசியல் கட்சிகளா? இல்லை, கொள்ளை அடிக்க அரசியல் கட்சிகளா? பொதுமக்களை ஏமாற்றுவது தான் ஜனநாயகமா? அரசியலை, அரசியல் கட்சிகளை புரிந்து மக்கள் விழித்துக் கொள்வார்களா?

அரசியல் இந்தியா சமூகம் சினிமா ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. எல்லா அரசியல் கட்சிகளும், கொள்கையை பற்றி மேடைக்கு, மேடை ,பத்திரிகைகளில் பேட்டி, பிரச்சார பீரங்கிகள் ,எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் செயல்பாட்டில் எத்தனை கட்சிகள் கொள்கைக்காக செயல்படுகிறது? கொள்கைக்காக செயல்பட்டால், அது தவறான பாதையில் செல்ல முடியாது.

பொதுமக்களுக்கு இந்த அரசியல் கட்சிகளைப் பற்றிய இன்னும் புரிதல் இல்லாமலே இருக்கிறது. கரை வேஷ்டி, கட்சிக்கொடி, கார் ,10 பேர் எடுப்புகள் ,இவை எல்லாம் தான் கட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சி அது அல்ல .கட்சி என்பது அந்தப் பகுதியில் இவர்கள் செய்த வேலையை மக்கள் பேச வேண்டும். இவர்கள் செய்த பணியை அந்தப் பகுதி மக்கள் பேச வேண்டும். ஆனால், அது பற்றி யாரும் பேசவில்லை. இவர்கள் எந்த கட்சியில் இருக்கிறார்கள்? என்பதும் தெரியவில்லை .

அதற்கு பதிலாக அந்தந்த பகுதிகளில் ,எத்தனை பேர் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை ஃபிளக்ஸ் பேனர் வைத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் ,அந்தப் பகுதிகளில் உள்ள சாலை ,சுவர்கள், மேம்பாலம் போன்ற இடங்களில் வரைந்து பேர் எழுதி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் இதுதான் கட்சி என்று அந்தந்த பகுதியில் மக்கள் தெரிந்து கொள்ளட்டும் . .படிக்காத மக்கள் வாழ்ந்த காலத்தில் கட்சி என்றால் கூட தெரியாத வாழ்ந்த காலத்தில் ,மக்களை மக்கள் ஏமாற்றி வாழ்ந்ததில்லை. இப்போது படித்து பட்டம் பெற்று, அந்த பட்டங்களை எல்லாம் அரசியல் கட்சி பேனர்களில் போட்டுக்கொண்டு எப்படி ஏமாற்றுவது ?என்ற கலை தெரிந்து பேசுகிறார்கள்.

 ஆனால் ,இவர்கள் கட்சியை வைத்து கிராமங்களிலோ, நகரங்களிலோ உள்ள புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டுக் கொள்வது? ஏரி மண் அல்லது ஆற்று மணலை எப்படி விற்க திட்டம் தீட்டுவது? இப்படிப்பட்ட செயல்களில் இந்த அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது .இதில் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்?என்பஎன்பதே கிடையாது. மக்கள் யார் கொஞ்சம் குறைவாக கொள்ள அடிக்கிறார்கள் ?அவர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலைமைக்கு இன்றைய அரசியல் வந்துள்ளது .

இதுக்கு என்ன காரணம்? மக்களுக்கு அரசியல் தெரியவில்லை .மற்றொரு பக்கம் சினிமா, செல்போன், கம்ப்யூட்டர் இது எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது .உண்மையான வாழ்க்கையை நோக்கி மக்கள் பயணிக்கவில்லை .உண்மை என்பது வேஷம் போடாது. ஆனால் பொய்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது .அந்த பொய்களுடன் இன்றைய பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சிகள் எல்லாம் சேர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறது .அதனால் தான் மக்கள் உண்மை தெரியாமல் அரசியலில் ஏமாற்றப்படுகிறார்கள் .பேசுவது சுலபம். பேசுவது போல் செயல்படுவது தான் மிக மிக கடினம் .

இன்று அதிமுக, திமுக அரசியல் ஆட்சியைப் பிடித்து ஐம்பது ஆண்டு காலத்திற்கு மேல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து விட்டது. ஆனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை . இருப்பினும் ,இந்த இரண்டு கட்சிகள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் மட்டுமே முன்னேற்றம் காணுகிறார்கள். எந்த வேலையும் தெரியாது. படிப்பறிவும் கிடையாது. தொழில் தெரியாது. ஆனால், வெட்டியாக சுற்றி திரிபவர்கள் எல்லாம், இன்று அரசியல் கட்சிகளில் கோடிகளை பார்க்கிறார்கள்.

 இது எதனால்? மக்களுக்கு அரசியல் தெரியாத ஒரே மைனஸ் பாயிண்ட். பேசத் தெரிந்தவன் எல்லாம் கட்சி என்று சொல்லிக் கொள்கிறான். பேசத் தெரிந்தவன் எல்லாம், நான் வந்தால் வில்லா வளைத்து விடுவேன் என்று ,பேசத் தெரிந்தவன் மக்களை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கிறான். இந்த பேச்சு எப்படி முட்டாளாக்கி, உன்னை பள்ளத்தில் தள்ளுவது என்று தான் பேசிக் கொண்டிருக்கிறான். இது தெரியாமல் முட்டாள்கள் பல கைதட்டிக் கொண்டிருக்கிறது. இந்த கை தட்டும் முட்டாள்கள் இருக்கும் வரை, அவர்கள் கோடீஸ்வரர்களாக வளம் வந்து கொண்டிருப்பார்கள்.

 அதனால் ,மக்கள் தான் இனி விழித்துக் கொள்ள வேண்டும். எந்த கட்சி தலைவர் நன்றாக பேசுகிறார் என்பது முக்கியமல்ல, எப்படி செயல்படுகிறார்? என்பதுதான் முக்கியம். இது மக்களின் அரசியல் அறியாமை ஒரு பக்கம், சினிமா என்ற மோகம் மற்றொரு பக்கம், பேச்சு கலையால் ஏமாற்றுவது அரசியல் தந்திரம். இப்படி ஒருவரைப் பற்றி ஒருவர், விமர்சனம் செய்து இந்த திமுக, அதிமுக ,இத்தனை நாள் வரை இந்த மக்களை ஏமாற்றி இருக்கிறது.

 இனி மக்கள் மாற்று அரசியலை நோக்கி பயணிக்கிறார்கள் .ஆனால், இந்த கட்சிக்காரர்கள் எந்த பக்கம் போவது ?என்று தெரியாமல் நிலை தடுமாறி நின்று கொண்டிருக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்கு இந்த இரண்டு அரசியல் கட்சிகளும் இல்லை .ஊழலில் தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆட்சிக்குள் ஊழலில் இருந்தால் பரவாயில்லை, ஏற்றுக் கொள்ளலாம். ஊழலே ஆட்சியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 இன்றைய மக்களின் மனநிலை ,எல்லா அரசியல் கட்சிகளும் பேசுகிறார்களே ஒழிய, யாரும் பேசுவது போல் செயல்படுவதில்லை.மேலும், தற்போது தமிழ்நாட்டில் பேசப்படுவது இரண்டு கட்சிகள் ஒன்று பிஜேபி ,அடுத்தது தமிழக வெற்றி கழகம் ,இந்த இரண்டிலும் யார் மக்களுக்காக இறங்கி செயல்பட போகிறார்கள்? இதுதான் மிகப்பெரிய கேள்வி ?

இன்றைய அரசியலை  மக்களுக்குத் தெரியாமல் குட்டிச்சுவர் ஆக்கிக் கொண்டிருப்பது, இந்த கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தான் .உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்வதில்லை. அதற்கு பதிலாக கட்சிக்காரர்கள், கட்சி தலைமை ,தலைவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே போட்டு அவர்களிடம் காண்பிக்கிறார்கள்.

இதில் எவ்வளவு உண்மை என்பதை அரசியல் தெரிந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தெரிந்து கொள்வார்கள் .ஆனால் தெரியாதவர்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள்.இங்குதான் மக்கள் கடந்த ஆட்சியில் ஸ்டாலின் பேசிய பேச்சு நம்பி வாக்களித்தார்கள் .ஆனால், இப்போது ஏண்டா வாங்கி அளித்தோம் என்று வேதனைப்படுகிறார்கள் .இது ஒருபுறம் என்றாலும் ,இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இன்னும் மக்களிடம் இந்த உண்மைகளை கூட கொண்டு போய் சேர்க்கவில்லை.

 மக்களின் அறியாமையை அரசியல் ஆக்கிக் கொண்டால், நாட்டில் சமூக ஆர்வலர்கள் ,விவரம் தெரிந்தவர்கள், இந்த அரசியல் கட்சி பிராடுகளுடன் போராட வேண்டி இருக்கிறது .ஒரு சர்வே எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டில் அதிமுக, திமுக வந்து இந்த 50 ஆண்டு காலத்தில் எவ்வளவு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது ?இது ஒரு புறம் என்றால் ,மற்றொரு புறத்தில் ஜாதி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, புரட்சி பாரதம் போன்ற அந்தந்த சமூக ஜாதி கட்சிகள், அந்த ஜாதிகளையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறது .

இப்படி பேசி மக்களை முட்டாளாக்குவது தான் இன்றைய அரசியல் கட்சிகளின் திறமையாகி விட்டது. இவர்களுடைய திறமைகளை இந்த பெரிய பத்திரிகைகள் பெரிய தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டிருப்பது தான், அவர்களுடைய திறமை ஆகிவிட்டது.ஆனால் எந்தெந்த அரசியல் கட்சிகள் மக்களுக்காக என்ன செய்தது ?என்ன செய்து கொண்டிருக்கிறது? இதை பட்டியலிட்டால் இந்த அரசியல் கட்சிகளின் உண்மை நிலவரம் மக்களுக்கு புரிந்து விடும்.

 மேலும், விஜய் அரசியலுக்கு வந்து விட்டார்.யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வரட்டும் .ஆனால் என்ன செய்யப் போகிறார்? எப்படி செய்யப் போகிறார்? அதேபோல், பிஜேபியில் அண்ணாமலை படித்தவர். விஷயம் தெரிந்தவர். ஐபிஎஸ் அதிகாரி இவர் எப்படி செயல்பட போகிறார்? இந்த எதிர்பார்ப்பில் தான் அரசியல் தெரிந்தவர்களின் அரசியல் கட்சிகளைப் பற்றிய எதிர்பார்ப்புகள் மக்களிடம் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே கட்சிப் பணியில் ஒவ்வொரு நாளும் மக்களின் குறை நிறைகளை கேட்ட அரசியல் கட்சிகள் எத்தனை ?அதற்கு தீர்வு கண்ட அரசியல் கட்சிகள் எத்தனை? மக்கள் தொலைபேசியில் அழைத்தால் கூட எடுக்காதவர்கள் எத்தனை? இப்படி ஒரு தலைவரிடம் தொலைபேசியில் எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டால் கூட , பேச முடியாது என்றால் ,இது அண்ணாமலை போன்றவருக்கு ஐபிஎஸ் அதிகார பதவி இல்லை .மக்கள் பணிக்காக கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பு .

மேலும், விஜய் சினிமா நடிகர் ,சினிமாவில் வசனம் பேசி நடித்ததெல்லாம் நிஜமாக்கி விட முடியுமா ?மேலும் ,இவரால் நடுரோட்டில் இறங்கி நடந்து செல்ல முடியுமா? அல்லது மக்களின் குறைகளை அவருடைய நிலைமையிலிருந்து இறங்கி வந்து கேட்பாரா? அரசியல் என்பது சினிமாவில் நடிப்பது போல் நிஜத்தில் நடிக்க முடியாது. இங்கே திருடன் ,பிராடு, ஊழல்வாதி. சமூக குற்றவாளி எல்லாருமே உத்தமர்களாக அரசியல் கட்சிகளில் நடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களை சமாளிப்பது கட்சிக்கே மிகப்பெரிய கடினமான வேலை.

இதில் எப்படி இறங்கி மக்களிடம் ஆதரவு பெறப்போகிறார்கள்? அரசியல் என்பது இந்த கட்சிக்காரர்களின் நடிப்பா? அதனால்தான், சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் அரசியலுக்கு நடிக்க வருகிறார்களா? இனி வருங்கால தலை முறைகள் அவசியம், அரசியலை படித்து தான் ஆக வேண்டும் .இல்லை என்றால் ,உங்களுடைய எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும். நாட்டில் ஒரு உண்மை தெரியவில்லை என்றால், இன்று ஒரு தொழிலாளி, முதலாளியை ஏமாற்றுகிறான். தொழிலாளிக்கு உண்மை தெரியவில்லை என்றால், முதலாளி தொழிலாளியை ஏமாற்றுகிறான் .

ஒரு பொருளை அதாவது ஒரு வீடோ அல்லது ஒரு நிலமோ அல்லது ஒரு வீட்டு மனையோ கூட வாங்கும் போது அதைப்பற்றிய உண்மை என்னவென்று தெரியாமல் புரோக்கர்கள் சொல்வதை நம்பி வாங்கி,இன்று எத்தனையோ பேர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். புரோக்கர்கள் சொல்லும் விலையை நம்பி வாங்கி ஏமாந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள் சிலர் அதில் சொத்துக்கு உரிமையாளரையே காட்ட மாட்டார்கள். சிலர் வில்லங்க சொத்தை வாங்கி கொடுத்து விடுவார்கள். இப்படி எல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் .

 அதுமட்டுமல்ல நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் மளிகை பொருட்கள் முதல் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் தரமானவை தானா? என்பதை பார்த்து வாங்க வேண்டிய நிலைமைக்கு மக்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது. ஒரு பக்கம் விலையில் ஏமாற்றுகிறார்கள். மற்றொரு பக்கம் அந்த பொருளின் தரத்தில் ஏமாற்றுகிறார்கள். இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் ஏமாற்றம் என்பது தான் இன்றைய மக்களின் வாழ்க்கை நிலைமை ஆகிவிட்டது.

இதில் இந்த பத்திரிக்கை, செல்ஃபோன், தொலைக்காட்சிகள், இதில் எல்லாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டம் ஆகிவிட்டது. காரணம் செல்போனில் சில பேர் மெசேஜ் அனுப்புகிறார்கள் .அந்த மெசேஜை கிளிக் செய்தால், உங்களுடைய அக்கவுண்டில் இருந்து பணம் போய் விடுகிறது .நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம், ஒரு நொடியில் ஏமாற்றி விடுகிறார்கள். இப்படிப்பட்ட காலத்தின் கொடுமை என்பதை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இப்படிப்பட்ட நிலைமையில், அரசியல் கட்சிகளிடம் மக்கள் போராட வேண்டி வந்துவிட்டது .

ஏனென்றால், இவர்கள் சமூக சேவை செய்வதை விட, பொது மக்களுக்கு இடையூறு செய்வது , எப்படி ஏமாற்றுவது ?தான் அதிகமாகிவிட்டது .அதாவது ஜாதி கட்சிகள் அந்தந்த ஜாதிகள் இடம் எப்படி ஏமாற்றுவது ?ஜாதியை வைத்து எப்படி பேசி ஓட்டு வாங்குவது ?எப்படி பொது சொத்துக்களை ஏமாற்றி எடுத்துக் கொள்ளலாம்? இப்படி இவர்களுடைய அன்றாட மனநிலை அதுவாகிவிட்டது. இதிலிருந்து இவர்கள் எப்படி மாறப் போகிறார்கள்?

 மக்கள்தான் மாற வேண்டும். ஏமாந்தால், உங்களுக்கான உரிமைகள் பறித்து எடுத்துக் கொள்வார்கள். இதை இந்த நாட்டு மக்கள் வாக்களிக்கும் ஒவ்வொருவரும், இந்த அரசியல் கட்சிகளின் உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற கட்சிக்காரர்களின் உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் நீங்கள் வாழ்ந்தால் உங்களுடைய உரிமைகள் அவர்கள் பறித்துக் கொள்வார்கள். இனியாவது அரசியலை, அரசியல் கட்சிகளை புரிந்து மக்கள் விழித்துக் கொள்வார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *