
தமிழ் நாட்டில் இனி ஆறுகள் ,ஏரிகள், மலைகள், போன்ற இயற்கை வளங்கள், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பாதுகாக்கப்படும்.

இதனுடைய ஆணிவேர் எது ?என்று பார்த்து தான் சென்னை உயர்நீதிமன்றம், இந்த தீர்ப்பை கொடுத்துள்ளது.

அதாவது இனி ஆறுகள் ,குளங்கள், ஏரிகள், மலைகள் போன்ற எந்த வித கனிமமாக இருந்தாலும் ,அதை அளவுக்கு மீறி அதிகமாக எடுத்தால்! அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்கள் தான் அதற்கு பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்றாலும் குவாரி ஓனர்கள் மத்தியில் இது அதிர்ச்சி அளிக்கிறது.

இனி எந்த ஆட்சி வந்தாலும் ,இதை கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். இதேபோல் சமூக ஆர்வலர்கள் நாட்டில் வழக்கு தொடர்ந்து கொண்டு தான் இருப்பார்கள். மேலும், இதை எதிர்த்து குவாரி ஓனர்கள் உச்ச நீதிமன்றம் சென்றாலும், இது சரியான தீர்ப்பு தான் என்று அங்கும் உறுதி செய்து விடுவார்கள் .அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும்,ஏற்கனவே, இந்த பிரச்சனை அமலாக்கத்துறை ஆறுகளில் எடுக்கப்பட்ட மணல் அளவீட்டுக்கு அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது என்று வழக்கு ஒன்று போய்க் கொண்டு இருக்கிறது. அந்தப் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர்கள் தப்பிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இனி அதிகாரிகள் உஷாராகி விடுவார்கள்.
இவர்கள் கொள்ளையடிப்பதற்கு அவர்கள் எதற்கு? நீதிமன்றத்தில் போய் கைகட்டி கொண்டு, பதில் சொல்ல வேண்டும்? அதனால், இனி எல்லா மாவட்ட ஆட்சியர்களும் உஷாராகி விடுவார்கள். கனிமவள அதிகாரிகளும் உஷாராகி விடுவார்கள். மேலும்,
இது குவாரி ஓனர்களுக்கு மட்டும் வருத்தமளிக்கக்கூடிய செய்தி அல்ல, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினருக்கும், பஞ்சாயத்து தலைவர்களாக இருந்தவர்களுக்கும், அடுத்து பஞ்சாயத்து தலைவராக வரவேண்டும் என்று கனவில் இருந்தவர்களுக்கும் வாயிலே மண் .

இதை நம்பி தான் பெரும்பாலான கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு போட்டி ,போட்டார்கள். இப்போது கூட பஞ்சாயத்து தலைவர்களாக வருபவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் ,விடையூர் கிராமத்தில் ஏரிகளில் உள்ள கருவேல மரங்கள் கூட ,இனி பஞ்சாயத்து ஏலம் விட முடியாது .

ஆக கூடி , இனி ஆறும், ஏரியும் நம்பி பஞ்சாயத்து தலைவர் கணக்கு போட்டு வந்தால், கோடியோ, லட்சமோ எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்து வருகின்ற நேரம் முடிந்து விட்டது. இது ஒரு கிராமத்திற்கு மட்டுமல்ல, ஓட்டு மொத்த தமிழகத்திலும் ,99 சதவீதம் இப்படிதான் பஞ்சாயத்து தலைவர்களுக்கு போட்டி, போட்டு வருகிறார்கள். இதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு செக் வைத்தது போல் தான் இருக்கிறது. அது மட்டுமல்ல,

எத்தனையோ கிராமங்களில், இந்தக் குவாரிகள் ஓடும் போது மோதல் பிரச்சனைகள் வரும் . மேலும் அளவுக்கு அதிகமாக ஏரி மண்ணோ, மலை மண்ணோ,ஆற்று மணல் எடுக்கும்போது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தால் நடவடிக்கை 90% க்கு மேல் எடுத்து விடுவார்கள்.

இங்கே அளவுக்கு அதிகமாக எடுத்தால் தான் குவாரி உரிமையாளர்கள் ஊருக்கு, அரசியல் கட்சியினருக்கு , பஞ்சாயத்து தலைவர்களுக்கு ,பணம் கொடுக்க முடியும்.ஆனால், அளவுக்கு அதிகமாக மண் எடுத்தால், குவாரியை உடனே நிறுத்தி விடுவார்கள். இதில் குவாரி ஓனர்கள் எல்லாரையும் சரிகட்டி ஓட்ட வேண்டும் என்றால் அவர்கள் தலையில் துண்டு போட்டுக் கொள்வார்கள். அதனால், இனி இதை நம்பிக்கையுடன் நம்பி வருவது கஷ்டம் தான் என்கிறார்கள் குவாரி உரிமையாளர்கள்.

இனி காவல்துறையும், இவர்களுக்கு சாதகமாக இருந்தால்! அவர்கள் மீதும் கோர்ட் திரும்பும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எனவே, சென்னை உயர்நீதிமன்றம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு சரியான தீர்ப்பு.இந்த தீர்ப்புக்கு பொதுமக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு.