நாட்டில் சமூக ஆர்வலர்களை தவிர, அரசியல் கட்சியினரால் ஊழலை ஒழிக்க முடியுமா? அரசியல் கட்சி தலைவர்கள் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்வது, மக்களை ஏமாற்றும் அரசியல் வித்தையா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் சமூக ஆர்வலர்களை தவிர, அரசியல் கட்சியினரால், ஊழலை ஒழிக்க முடியாது. விஜய் சொல்லலாம் நான் ஊழலை ஒழிப்பேன் என்று, அவர் மட்டும் ஊழலற்றவராக இருக்க முடியும்.Apart from social activists in the country, political parties cannot eradicate corruption. Vijay can say that he will eradicate corruption, only he can be free from corruption.

மேலும், அரசியல் கட்சிகளில் அடியாட்களுக்கு தகுதியானவர்களும், அரசியல் வியாபாரிகளையும், வேட்பாளர்களாக நிறுத்தி , எந்த அரசியல் கட்சிகளாலும் ,ஊழலை ஒழிக்க முடியாது. அது மட்டுமல்ல,

Furthermore, no political party can eradicate corruption by fielding candidates who are worthy of being subordinates and political traders in political parties. Not only that,

இவர்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வார்களே தவிர, இவர்களுடைய உண்மையான சமூக நோக்கம் என்ன? என்பது பற்றி இவர்களால் மக்களுக்கு வெளிப்படையாக சொல்ல முடியாது.They advertise themselves in corporate magazines and television, but they are unable to openly tell the public what their true social purpose is.

மேலும்,அப்படி சொல்லும் , விஜய் ,சீமான் கட்சியில் எத்தனை பேர், அந்த, அந்த ,கட்சியில் இருக்கிறார்கள்?என்பதை பட்டியலிடுங்கள் பார்ப்போம் . அதில் எத்தனை பேர் தேர்வார்கள்? அதன் பிறகு தான், இவர்கள் ஊழலை ஒழிப்பது பற்றி பேச முடியும்.Also, let’s see how many people in Vijay, Seeman’s party are in that, that, party. How many of them will get elected? Only then can they talk about eradicating corruption.

மேலும்,ஊழலை குறைப்பேன் என்று சொல்லலாமே தவிர ,ஒழிப்பேன் என்று சொல்வது, அது வெத்து வெட்டு வார்த்தையாகத் தான் இருக்கும் .Furthermore, instead of saying that we will reduce corruption, saying that we will eliminate it would be a harsh statement.

ஒருவேளை அந்த வேட்பாளர் ,சமூக ஆர்வலரா? அப்படி இருந்தால் மட்டும்தான், அவர்களால், மக்களுக்கான நேர்மையான, நிர்வாகத்தை, ஊழலற்ற ஆட்சியை தர முடியும். அதற்கு அவர் செய்த சமூகப் பணி, அவர் வாழுகின்ற வாழ்க்கை ,அவையெல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.Maybe that candidate is a social activist? Only if that is the case, can they provide honest administration and corruption-free governance for the people. The social work he has done and the life he lives should be an example for that.

இப்படிப்பட்ட போராட்டமான வாழ்க்கையை சமூகத்தில் அர்ப்பணிப்புடன் வாழுகின்றவர்கள் தான்,அதற்கு தகுதியானவர்கள். அவர்களை மக்கள் தேர்வு செய்ய தயாராக இருப்பார்களா? யார் பணம் கொடுக்கிறார்கள்? என்று கேட்டு வாங்குகிறார்கள் . Only those who live such a life of struggle with dedication in society are worthy of it. Will people be willing to choose them? Who pays for them? They ask.

மேலும்,ஊழலுக்கு அர்த்தம் தெரியாத இந்த மக்களுக்கு ஓட்டுரிமை கொடுத்து ,நான் ஊழலை ஒழிப்பேன் என்று இவர்கள் கார்ப்பரேட் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு, ஊழலைப் ஒழிக்க முடியாது. இவர்களால் ஊழல் ஆட்சி தான் கொடுக்க முடியும்.Moreover, by giving the right to vote to these people who do not know the meaning of corruption, and advertising on corporate television and newspapers that they will eradicate corruption, they cannot eradicate corruption. They can only provide a corrupt government.

மேலும்,ஊழலை ஒழிப்பதற்கு தகுதியான நபர்களால் தான், ஊழல் அற்ற நிர்வாகத்தை கொடுக்க முடியும். இந்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ,அதற்கு ஒருவர் கூட தகுதி இல்லை.Moreover, only those who are qualified to eradicate corruption can provide corruption-free administration. Not a single one of these Tamil Nadu political parties is qualified for that.

அப்படி தகுதியானவர்கள் என்றால்! அவர்களுடைய சமூகப்பணி ,எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, மக்களுக்காக, சேவை செய்திருக்க வேண்டும். மேலும்,அவர்களால்,தான் ஊழலை ஒழிக்க முடியும். தவிர,அவர்கள் சுயேட்சையாக நிற்கலாம். அவர்களுடைய வாழ்க்கை எளிமையானதாக இருக்கும்.

மேலும், 20, 30 காரும், பின்னால் நூறு பேரும் ஓட்டு கேட்க வந்தால் தான், மக்கள் வாக்களிப்பார்கள் என்று அரசியல் வியாபாரிகளும் , கட்சியினரும் ,அரசியலில் ஊழலை ஒழிப்பேன் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . தவிர, மக்கள் கொடுக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி அவர்களால் ஊழல் செய்யாமல் இருக்க முடியாது.Moreover, political traders and party members are deceiving the people by saying that they will eradicate corruption in politics, saying that people will vote only if 20, 30 people, and then a hundred people, come to ask for votes. Besides, they cannot help but commit corruption by using the opportunity given by the people.

மேலும்,எப்போது நாட்டில் கார்ப்பரேட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ !அவர்களால் ஊழலை ஒழிக்க முடியாது. அது, அரசியல் கட்சியினரால் ,,ஊழலை ஒழிப்பேன் என்று வாய்ச்சவடால் விடுவார்களே ஒழிய, ஊழலை ஒழிக்க முடியாது.Moreover, whenever corporates are given importance in the country, they cannot eradicate corruption. That is, political parties cannot eradicate corruption unless they give lip service to it, saying, “We will eradicate corruption.”

மேலும் ,ஊழல் என்பது கார்ப்பரேட்டுடன் உடன் பிறந்தது . அதை நான் பத்திரிகை துறையில் பார்த்து விட்டேன். ஒரு வேட்பாளர் கார்ப்பரேட் பத்திரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால், அவர் சமூகப் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர். Also, corruption is co-inherent with corporate. I have seen it in the journalism industry. If a candidate gives importance to corporate journalism, he is not fit to serve the society.

அவரால் நிச்சயம் ஏழை, எளிய மக்களுக்கு இறங்கி சமூகப்பணி ஆற்ற முடியாது. இது என் அனுபவத்தில், கண்ட உண்மை . மேலும்,டாக்டர் பட்டம், ஐஏஎஸ் ,ஐபிஎஸ் பட்டம், இந்தப் பட்டத்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா? சேவைக்கு என்றே மனதில் ஒரு இடம் இருக்க வேண்டும். மேலும், பல ஆயிரம் கோடிகள், பணமும் ,சொத்தும், வைத்திருப்பவர்கள் பின்னால் சென்றால் , நமக்கு எல்லாம் கிடைக்கும் என்று மக்கள் சேவையை எதிர்பார்க்க முடியுமா?

அது வலிகளின் வேதனை. அதை தாங்க கூடியவர்கள் ,அதை தாங்கக்கூடிய வலிமை உள்ளவர்களால் தான், ஊழலை ஒழிக்க முடியும்.He definitely cannot go down to the poor and simple people and do social work. This is a truth that I have seen in my experience. Also, can a doctorate, IAS, IPS degree, serve the people with these degrees? There should be a place in the mind for service. Only they can serve. It is the pain of pain. Only those who can bear it, those who have the strength to bear it, can eradicate corruption.

தவிர,இந்த ஊழலுக்கு அர்த்தம் தெரியாத கூட்டங்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை கொடுத்தது, மிகப்பெரிய தவறு. அதனுடைய பாதிப்பு என்ன? என்று கூட தெரியாத, இந்த மக்கள் ஆயிரம், 500, 2000த்துக்கு இவர்களுடைய வாக்குகளை விற்கிறார்கள் என்றால், இவர்களுக்கு எப்படி நல்லது செய்பவர்கள்?Besides, giving voting rights to groups that don’t understand the meaning of this corruption is a huge mistake. What is the impact of this? If these people, who don’t even know, are selling their votes for a thousand, 500, 2000, how can they do them any good?

மேலும்,எப்போது இவர்களுடைய வாக்கு விற்றார்களோ, அப்போதே இவர்களின் உரிமையைக் கூட , அவர்களிடம் கேட்பதற்கு தகுதியற்றவர்கள். அதனால், பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள், நீ ஒன்னும் எனக்கு சும்மா ஓட்டு போடவில்லை. பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டு போட்டாய் என்று அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.Moreover, when they sold their votes, they are not even entitled to ask them for their rights. Therefore, those who won by paying money are asking, “You didn’t vote for me for nothing. You voted for me by taking money.”

எனவே, இந்த 2026 சட்டமன்ற தேர்தல், எப்படி இருக்க போகிறது? அரசியல் கட்சிகள், பொய்யை சொல்லி வாக்குகளை கேட்கிறார்கள். அந்தப் பொய்களை எல்லாம் பத்திரிகை தொலைக்காட்சிகளில், செய்தி என்று விளம்பரப்படுத்தி, வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.So, what is this 2026 assembly election going to be like? Political parties are asking for votes by telling lies. They are advertising all those lies in newspapers and television as news and making a business out of it.

மேலும்,செய்திக்கு அர்த்தம் தெரியாத மக்கள், அதுவும் பத்திரிக்கை என்று, நினைத்துக் கொண்டு, அதையும் வாங்கி படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவலங்களை எல்லாம் ,மக்கள் சிந்திக்காத வரை , நாட்டில் ஊழல் ஆட்சியை ஒழிக்க முடியாது.

ஊழலுக்கு காரணமாக ஒரு பக்கம் அரசியலுக்கு தகுதி இல்லாத அரசியல் கட்சியினர் மறுபக்கம் அரசியல் தெரியாத மக்கள் , இதற்கெல்லாம் கடிவாளம் போடாத தேர்தல் ஆணையத்தின் கடுமையான சட்டங்கள் இல்லாதவரை, நாட்டில் ஊழல் தொடரும். ஊழலை ஒழிப்பேன் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்வது அது வெத்து வெட்டு வார்த்தை என்பதை பொதுமக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?Corruption is caused by politicians who are unfit for politics on one side and people who do not know politics on the other. Unless the Election Commission puts a check on all this and makes strict laws, corruption will continue in the country. When will the public understand that the political party leaders’ claim that they will eradicate corruption is just empty rhetoric?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *