நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு? ஆட்சியாளர்களின் ஊழலை மறைப்பதற்கா ? இதன் விளைவு கடை கோடி மக்களின் நம்பிக்கையை நீதித்துறை இழக்குமா ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரிந்து மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் நடந்துள்ளது. இது ஊர் அறிந்த விஷயம்.

இதற்கு அமலாக்க துறை விசாரித்து இந்த ஊழலை வெளிக்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் திமுக என்ன சொல்கிறது என்றால், பிஜேபி எங்களை அரசியல் நோக்கத்துடன் பழி வாங்குகிறது என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் நீதித்துறையில், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு ஸ்டே கொடுக்க முடியாது விசாரணை செய்யலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விதிகளை மீறுகிறது. எல்லையை மீறுகிறது .அதற்கு ஸ்டே கொடுத்துக்கொண்டு ,அந்த ஸ்டேஷனுக்கு கால நீடிப்பு செய்து கொண்டிருக்கிறது.

இப்படி நீதிமன்றம் நாட்டில் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு மறைமுக ஆதரவா? சட்டம் அந்த ஊழல் நிரூபிப்பதற்கு அதற்கான ஆதாரங்களை அவர்கள் எடுத்து விட்ட போது ,அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். என்ன அதிகாரம் வேண்டும்? மாநில அரசின் தவறை மத்திய அரசு நிச்சயம் கண்காணிக்க வேண்டும்.

யார் தான் கேட்பது? மக்களால் கேட்க முடியாது. இல்லை நீதிமன்றத்திலாவது கேட்க வேண்டும். அதுவும் கேட்கக் கூடாது என்றால் நாட்டில் ஊழலை யார் தான் கேட்பது? அதைக் கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது நீதிமன்றத்தில் சொல்லுங்கள்.இதுதான் மக்களின் கேள்வி?மேலும்,

இப்படி எல்லாம் நீதித்துறை செயல்பட்டால், நீதித்துறையின் மீது இருக்கக்கூடிய கடைசி மக்களின் நம்பிக்கை, நீதித்துறை இழந்து விடும்.மேலும், திமுகவில் தற்போது கூட அமலாக்கத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி மீது ஊழல் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இதில் என்ன முக்கியமான ஒரு விஷயம் மக்கள் கவனிக்க வேண்டியது என்றால் சாமானிய மக்கள் தவறு செய்தால் கோர்ட் விறுவிறுப்பாக அவர்களுக்கு தண்டனை கொடுக்கிறது .ஆனால் ,அரசியல்வாதிகள் தவறு செய்தால் அவர்களுடைய ஊழலை மறைக்கவும், தண்டனையில் இருந்து தப்பித்து கொள்ள சட்டத்தின் ஓட்டைகளை நீதிமன்றத்தில் வழக்காக போய்க் கொண்டிருக்கிறது. அப்போது இந்த நாட்டில் சாமானியனுக்கு ஒரு நீதி !அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியா?

நீதித்துறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சாமானிய மக்களுக்கு எளிமையாக பணம் இல்லாமல் கூட இருப்பவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நடுத்தர வர்க்கம் அதிக அளவில் பணத்தை செலவு பண்ணி நீதியை தேட வேண்டி இருக்கிறது. அந்த நிலை எல்லாம் நீதித்துறையில் மாற்றப்பட வேண்டும்.

மேலும், அரசியல்வாதிகளிடம் வரும்போது நீதித்துறை ஆதாரம் இல்லை என்று தட்டிக் கழிக்கிறது. அதே ஆதாரம் ஏழை ,நடுத்தர மக்களிடம் அவனுடைய சொத்து மதிப்பு என்ன ?என்று கணக்கெடுக்கிறது. அந்தக் கணக்கு ஏன் இவர்களிடம் எடுக்கவில்லை? அதுதான் ஆதாரம்.. இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா? என்ன சட்டம்?

நாட்டில் சாமானியனுக்கு ஒரு சட்டம் ?,பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம் ?நீதித்துறை சட்டத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டுமே தவிர ,சட்டத்தில் ஆதாரம் இல்லை என்பதை அடிப்படையாக வைத்து ஊழல்வாதிகளை நிரபராதிகள் ஆக்குவது . நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்குமா?

மேலும், உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு ,,உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, இந்தத் தீர்ப்பின் வேரியேஷன் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் இருக்கிறது அதுதான் சட்டத்தின் மீது மக்களின் பார்வை. அதாவது இவர்களுடைய தீர்ப்பு சட்டம் தெரியாமல் கொடுத்து விட்டார்களா? அல்லது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சம்பந்தமில்லாமல் இதற்கு அதற்கும் ஒத்துப் போக வேண்டும் அல்லவா? ஏன் அந்த தீர்ப்பின் சாரம்சம் ஒத்துப் போக வில்லை. இதுதான் சாமானிய மக்களின் சட்டத்தின் மீதுள்ள பார்வை சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும்,எல்லாருக்கும் ஒரே சட்டமாகத்தான் இருக்க வேண்டும் .அது தான் மக்களின் ஜனநாயக ஆட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *