மே 20, 2024 • Makkal Adhikaram
பத்திர பதிவுத்துறையில் பத்திரப்பதிவு அலுவலர், பத்திரிகையாளர்கள் தங்களுடைய சொந்த சொத்து பிரச்சனைக்காக போனால் ,அங்கே 100 கேள்வி கேட்கிறார்கள் .ஆனால், ஒருவனுடைய சொத்து இன்னொருவனுக்கு எப்படி பத்திர பதிவு செய்கிறார்கள்? அதேபோல் விற்பனை செய்பவனுக்கு எப்படி பத்திர பதிவு செய்கிறார்கள் என்பதுதான் இங்கே முக்கிய கேள்வி?
பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணம் கொடுத்தால், ஒருவருடைய சொத்தை மற்றவர்களுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்து விடுவார்கள். அது தானே திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சனை அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் அடுத்த விஞ்சவாக்கம் கிராமத்தில் போலே ஆவணங்கள் மூலம் பட்டா வாங்குவது விற்பனை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்ட ஒருவரின் முழு நேரப் பணியால் குழந்தராஜ் மகன் டேனியல் என்பவர் 100 கோடிகளுக்கு மேல் சொத்து சேர்த்து உள்ளார்.
இவன் பெயரில் ஏழை அப்பாவி மக்கள் நில அபகரிப்பு புகார் செய்தும் இன்றுவரை அந்த இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் நீட்டு அவர்களுக்கு ஒப்படைக்கவில்லை.
இது பற்றி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மேற்படி சர்வே நம்பர் 263/2 போலி ஆவணம் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரியவர்களுக்கு ஒப்படைக்க பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை.