
தலைமைச் செயலகத்திற்கு பத்திரிகையாளர்கள் சென்று வருவது காவல்துறையின் செக்யூரிட்டிகளின் கெடு பிடிகள் மோசமாக இருப்பது ஏன்?
மேலும், இது பத்திரிக்கை துறையை கேவலப்படுத்துவதாக இருக்கிறது. தவிர ,கடந்த ஆட்சியில் செய்த தவறுகள் மீண்டும் தொடருகிறதா ? தலைமைச் செயலகம் மக்களுக்காக இருக்கிறதா? இல்லை, ஆட்சியாளர்களுக்கும், , அதிகாரிகளுக்கும் மட்டுமே, தலைமைச் செயலகம் இருக்கிறதா?

மேலும்,மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை சொல்வதற்கு தான் தலைமைச் செயலகம். அதேபோல் பத்திரிகையாளர்கள் தங்களுடைய பத்திரிக்கை துறை சம்பந்தமான கோரிக்கைகளை அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும், தெரிவிக்க கூட இன்று தலைமைச் செயலகம் செல்வதற்கு மிகப்பெரிய போராட்டமாக உள்ளது.
அதுமட்டுமல்ல, செக்யூரிட்டிகள் அங்கிருந்து எங்களுக்கு சொன்னால் தான் நாங்கள் உள்ளே விடுவோம். வாகன எண் சொல்ல வேண்டும். இதையெல்லாம் இயக்குநகரகத்தில் அவர்கள் வேலை பார்ப்பார்களா? இல்லை இதையெல்லாம் இவர்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பார்களா? இது ஒரு பெரிய வேலையா? எப்படி சொல்வார்கள்?

மேலும்,உங்களிடம் எங்களுடைய பத்திரிகையின் ஐடி கார்டு காட்டுகிறோம். மேலும் , அவர்கள் கேட்பது ,அரசு அடையாள அட்டை இருக்கிறதா? அரசு அடையாள அட்டை கடந்த ஐந்து வருடமாகவே கடந்த ஆட்சியில் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி கொடுப்பார்கள்? ஒரு சில பத்திரிகைகளுக்கு தான் கொடுத்திருக்கிறார்கள்.
மேலும்,இந்த காவல்துறைக்கு ஒன்று கேட்கிறேன். மக்கள் பணிக்காக தான் நாங்கள் பத்திரிக்கை துறைக்கு வந்திருக்கிறோம். , ஆனால், காவல்துறை இங்கே,இவர்களுடைய அதிகார திமிரை எங்களிடம் காட்டுவதற்கு காவல்துறையில் வேலை செய்கிறார்களா ?

மேலும்,அந்த வேலை எங்கு தெரியுமா? இவர்கள் காட்ட வேண்டும் ?சட்டம் ஒழுங்கு பிரச்சனை தினந்தோறும் நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது, அங்கு காட்டுங்கள். காவல்துறை அதிகாரிகள், அப்பாவி மக்களிடமும், பத்திரிகையாளர்களிடமும், உங்களுடைய அதிகாரத்தை காட்ட சொல்கிறார்களா?
இந்த அவலங்களை மக்கள் என்ன என்று தெரிந்து கொள்ளட்டும். எனவே செய்தி துறை அமைச்சர் ராஜ்மோகன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள்.
