பிஜேபி மேலிடம் அண்ணாமலையை கட்டம் கட்டி விட்டார்களா ? புலம்பும் அண்ணாமலை ஆதரவாளர்கள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

அண்ணாமலை! பிஜேபியில் மாநில தலைவராக மூன்றாண்டுகளில் என்ன சாதித்து விட்டார்? இந்த கேள்வி அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

ஆனால், அரசியல் என்பது சோசியல் மீடியாவிலும், கார்ப்பரேட் மீடியாவிலும் தான், முக்கியமான அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற கூட்டம் ,அண்ணாமலையின் அரசியலை பின்பாட்டு பாடும், பக்கவாத்தியமாக இருந்து கொண்டிருக்கிறது. மேலும்,,

அரசியல் தெரியாதவர்கள், அல்லது அண்ணாமலையால் லாபம் இருக்கிறவர்கள், இவர்கள்தான் அண்ணாமலையின் அரசியலை மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களுக்கு அண்ணாமலையால்,பிஜேபியா ?பிஜேபியால் அண்ணாமலையா? என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள். அது மட்டுமல்ல, அண்ணாமலை அரசியலில்,

எப்படி வளர்ந்தார் ?என்பது தகுதியான பத்திரிகையாளர்களுக்கு தெரியும் .திமுகவை தாக்கி பேசியது ,அது பிஜேபியின் வளர்ச்சி .அண்ணாமலை பேசியதால், திமுகவின் வெறுப்பு அரசியலையும், ஊழல் விவகாரங்களையும் ஏற்றுக் கொள்ளாத பலர் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதுமட்டுமல்ல இதற்கு முக்கிய காரணம்,

வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இவருக்கு டேட்டா கொடுக்கவும் அதை வைத்து பொதுவெளியில் ஊழல் பட்டியல் DMK பைல்ஸ் 1,2 என்று வெளியிட்டுக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திமுக மந்திரிகள் அண்ணாமலைக்கு பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

திமுக எப்படி என்றால்! நம்ம வடிவேல் காமெடி போல தான், அடித்துப் பார்ப்பார்கள். எதிரி வலுவாக இருந்தால் ,அவனை சமாதானப்படுத்தி கைகோர்த்துக் கொள்வார்கள். இதில் திமுக கைவந்த கலை. அந்தக் கலையை தான் அண்ணாமலை இடம் பயன்படுத்தினார்கள். அண்ணாமலை வாங்குவது தெரிந்து விட்டது.

எல்லா மந்திரிகள் இடமும் பேரம் பேசி பெரிய தொகை போய்விட்டது. சரி, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுக்கு தான் பேரம் என்றால், அதே பேரத்தை அதிமுக கூட்டணிக்கும் வேட்டு வைக்க பல ஆயிரம் கோடிகள் பேரம் பேசப்பட்டது.

ஆனால், அண்ணாமலை உண்மையிலே போலீஸ்காரன் என்பதை நிரூபித்து விட்டார். ஆரம்பத்தில் செய்தியாளர்களை கூட, தரக்குறைவாக பேசுவார் உண்மையிலேயே நாங்கள் கூட இவர் உத்தம அரசியல்வாதி தான் என்று நம்பி விட்டோம். பிறகுதான் அண்ணாமலையின் வெளிச்சம் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்ல அண்ணாமலை கமலாலயத்திற்கு வந்து கட்சிக்காரர்களை சந்திக்கும் போது மணிக்கணக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். இதில் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி நண்பர் ஒருவர் இவரை விட ரேங்கில் இருந்தவர்.காவல்துறையில் இல்லை, வேறு துறையில் உயர் பொறுப்பில் இருந்தவர் ,இவரை பார்ப்பதற்கு எட்டு மணி நேரம் காத்துக் கொண்டு இருந்திருக்கிறார். எப்படி எல்லாம் பந்தா காட்ட முடியும்? என்பதற்கு அண்ணாமலை ஒரு உதாரணம்.மேலும்,

இப்போது அண்ணாமலையை மிகப்பெரிய அளவில் மேலிடம் கட்டம் கட்டி வைத்துள்ளது. இது சில தினங்களுக்கு முன்னரே மக்கள் அதிகாரத்தில், இது பற்றி, எந்த சோசியல் மீடியாவிலும், அப்போது வெளிவரவில்லை . பிறகு தான், தற்போது ஒவ்வொன்றாக வெளியிடுகிறார்கள்.மேலும்,

அண்ணாமலை பற்றி உளவுத்துறை ரிப்போர்ட் அமித்ஷாவிடம் போனதால் தான் ,அண்ணாமலையை மாநில பதவிலிருந்து தூக்கப்பட்டார் என்ற செய்தி கொடுத்து இருந்தோம். அதன் பிறகு ,சோசியல் மீடியாவில் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து விட்டது. இப்போது அண்ணாமலை அதிக ஆட்டம் போட்டால், தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள். அது மட்டுமல்ல,

தற்போது அண்ணாமலைக்கு எடப்பாடி ஊரில் ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்களாம். அரசியலுக்கு முட்டாள்கள் தான் தேவை. ஏனென்றால் ,அவர்கள் தகுதியானவனையும், திறமையானவனையும், முட்டாளாக்கி மேலே வருவார்கள். அதற்கு இந்த அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொண்டு இருப்பார்கள். இது எல்லா அரசியல் கட்சியிலும் இதே நிலைமைதான். மேலும்,

அண்ணாமலையின் ஒவ்வொரு ஃபைல் விவகாரமும், உளவுத்துறை தோண்டி எடுத்து விட்டது. இவர் எதற்காக வெளிநாடு சென்றார் ?அங்கே அரசியலைப் படித்தாரா? இல்லை, பணத்தை முதலீடு செய்தாரா ?என்பது வரை உளவுத்துறை எடுத்து விட்டது.

அடுத்தது, ஒரு பொண்ணு ஒன்னு சோசியல் மீடியாவில் இவருக்காக பேசிக் கொண்டிருந்தது. இது எல்லாம் எப்ப வந்தது? தெரியவில்லை.மேலும்,

பத்திரிகையில் சீனியர்கள் அனைவருமே, அண்ணாமலையின் சப்ஜெக்டை எடுத்து விலா வரியாக தோண்டி துருவி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர அண்ணாமலை, திமுக மந்திரிகளிடம் இவர் எத்தனை கோடி வாங்கினார் ?என்பது வரை உளவுத்துறை ரிப்போர்ட் அமித்ஷாவுக்கு போய்விட்டது. மோடிக்கும் போய்விட்டது.

அதனால் ,இனிமேல் அண்ணாமலை யாரையும் ஏமாற்ற முடியாது. உத்தமனாக வேஷம் போட்டு, பேச முடியாது. அண்ணாமலையின் நடிப்பு பேச்சு சிவாஜி கணேசனையும், மிஞ்சி விட்டது.

ஏனென்றால் ,பிஜேபியில் ஊழலை எதிர்த்துப் பேசினால் வரவேற்பார்கள் .ஆனால், பிஜேபிக்குள் ஊழலை செய்து கொண்டு ,உத்தமனாக பேசிக் கொண்டிருந்தால், அந்தக் கட்சி யாரையும் விட்டு வைக்காது.

எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் தூக்கி நடுத்தெருவில் வீசிவிடுவார்கள். இதுதான் பிஜேபி. அதனால்தான், அதிமுக, திமுகவில் இருக்கும் ,இந்த ஊழல் கூட்டம் பிஜேபிக்கு வருவதற்கு பயப்படுவார்கள்.

இவர் உத்தமராக பேசிக் கொண்டிருந்தால், இவர் பின்னால் கைதட்டிக் கொண்டிருக்கும் அடி முட்டாள், அரசியல்வாதிகளுக்கு என்ன நடந்திருப்பது என்பது தெரியாது.

அண்ணாமலைக்கு எந்த ஒரு மந்திரி பதவியோ, எம்எல்ஏ பதவியோ, இல்லாமல் எப்படி சொத்து வரும்? எப்படி சொத்து வாங்கி இருப்பார்? இந்த ஒரு கேள்விக்கு இவர்களுக்கு அர்த்தம் தெரியாது. பதில் சொல்லவும் தெரியாது?

அடுத்தது இவர் மனைவி பிசினஸ் பண்றார் .என்ன பிசினஸ் ?இவருடைய சொத்து மதிப்பு என்ன? ஆரம்பத்தில்! இந்த மூன்று வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு என்ன ?இவர் குடும்பத்தின் சொத்து மதிப்பு என்ன? வங்கி பேலன்ஸ் எவ்வளவு?

ஒருவேளை இந்த கூட்டத்துக்கு எலும்பு துண்டுகளை போட்டாலும், போடலாம் .அதனால், இவர்கள் பேசலாம். யாருக்கு தெரியும் ?எல்லாம் கடவுளுக்கு தான் தெரியும்.

இதைவிட ஒரு முக்கியமான ஒரு கேள்வி ?அண்ணாமலை அரசியலில் வந்து என்ன சாதித்தார் ?என்ன செய்தார்? சாதித்தார் என்பதை விட என்ன செய்தார்? கூட்டத்தை சேர்ப்பது சாதனை அல்ல. அது ஒரு பெரிய வேலையும் அல்ல,

இன்றைக்கு பணம் கொடுத்தால், கூட்டம் வந்து சேரும். எல்லா கட்சிகளும் ,அப்படி தான் கூட்டத்தை கூட்டிக் கொண்டிருக்கிறது. அதைத் தூக்கி தூர வைத்து விட்டு, இவர் கட்சிப் பணியில் கட்சிக்காரர்களுக்கு என்ன செய்தார்? தினமும் மக்களுக்காக என்ன வேலை செய்தார்? இந்த இரண்டு கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடியுமா?

அப்படி இருந்தால், அண்ணாமலை என்ன செய்தார்? என்பதை பட்டியல் போட்டு வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம், என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *