பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவது ஏன்? ஆக்கினால், பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர மக்கள். இந்த உண்மை தெரியுமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி வர்தகம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பிளஸ்சும் இருக்கிறது, மைனஸும் இருக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில், மைனஸ் மட்டுமே இருக்கிறது. அது என்னவென்றால்!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதால் பாதிக்கப்படுவது, பொதுமக்கள் தான், இதைக் கருத்தில் கொண்டு, மத்திய ,மாநில அரசுகள் செயல்பட வேண்டும். இதை ஏன்? தனியார் மயமாக்குகிறார்கள்? காரணம் என்ன?

ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கினால், அதை தனியார் மயமாக்கி விடுகிறார்கள். இங்குதான் தவறு செய்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பொதுத் துறை நிறுவனங்களையும் ,தனியார் மையம் ஆக்கினால், பாதிக்கப்படுவது, சாமானிய நடுத்தர மக்களும், ஏழைகளும் தான்.

உதாரணத்திற்கு மின்சாரத்தை தனியார் மயமாக்க மத்திய அரசே திட்டங்களை கொண்டு வந்து, அதற்கான அரசாணையை பிறப்பிக்கிறது. இதனால், பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள். இதை ஏன் கொண்டு வருகிறார்கள்?

ஊழல் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவு நடத்தி நஷ்டக் கணக்கை ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு பொதுத் துறை நிறுவனங்களும், நஷ்டத்தில் இயங்கும் போது, அதற்கு அரசின் பணம் கஜானாவில் இருந்து அதை சரி கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதால், இந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகிறார்கள்.

இதற்கு யார் காரணம் ?எந்த மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சியோ ,அவர்கள் தான் இந்த ஊழலுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறார்கள். இவர்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து, குறைந்த விலைக்கு மக்களின் பயன்பாட்டுக்கு கொடுக்காமல் ,தனியாரிடமிருந்து வாங்குகிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியிலும், தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் போது, இந்த மின்சாரத் துறையில் ஊழல்கள் நடைபெற்றுள்ளது. ஆகக் கூடி மக்கள் தலையிலே இவர்கள் ஏறி மிதிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால், மக்கள் உஷாராகி அரசியலில் ஊழலுக்கு எதிராக போராட வேண்டிய காலகட்டம் வந்துள்ளது. மேலும்,

இந்த ஊழல் பற்றி நமக்கென்ன! நமக்கு என்ன? என்று பேசிக் கொண்டிருக்கும், தெரியாத மக்கள், உங்கள் தலையிலே ஏறி மிதிக்கிறார்கள் .ஊழல்வாதிகள் .என்பதை இன்னும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இன்று மின்சாரம் ஒரு யூனிட் ,இரண்டு ரூபாய்க்கு, மூன்று ரூபாய்க்கு வாங்க வேண்டிய யூனிட், 6 ரூபாய், 7 ரூபாய், 8 ரூபாய்,பத்து ரூபாய் என்று மின்சார கட்டணம் உயர்த்தி கொண்டே இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் என்ன ?மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்குகிறது. இலவச மின்சாரம், 100 யூனிட் கொடுக்கிறோம் .வேளாண்மைக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறோம் .நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவசமாக கொடுக்கிறோம்.

இப்படி எல்லாம் பொய்யை சொல்லி தப்பித்து கொள்ள மக்களை ஏமாற்ற ஆளும் கட்சியினர் பேசி வருகிறார்கள். உண்மை எப்போதுமே மறைக்க முடியாது. அது ஒரு நாள் வெளியே வந்து தான் தீரும். அதனால், பிரதமர் நரேந்திர மோடி பொதுத்துறை நிறுவனங்களில், ஊழல் நடைபெற்றால், அந்த ஊழலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ,அவர்களுடைய சொத்துக்களை முடக்கி, பறிமுதல் செய்து ,அந்த ஊழலை சரி கட்டி ,பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமே தவிர ,இவர்கள் செய்த ஊழலுக்காக ,மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடாது. அதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும்.மேலும்,

இவர்கள் தனியார் இடமிருந்து மின்சாரத்தை அதிக விலைக்கு கொள்முதல் செய்து ,அவர்களிடமிருந்து கமிஷன் பெற்று இவர்கள் வளமாக்கிக் கொள்ள மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அதனால், மாநில அரசாக இருக்கட்டும், மத்திய அரசாக இருக்கட்டும் ,பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ,ஆட்சியாளர்கள் அனைவருடைய வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டு ,அந்த நஷ்டத்தை அதில் சரி கட்ட வேண்டும். அப்படி சரி கட்டினால் இனி பொதுத்துறை நிறுவனங்கள் எந்த காலத்திலும் நஷ்டத்தில் இயங்காது .

அதன் மூலம் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மின்சாரத்துறை மிக, மிக முக்கியமான துறை. அந்தத் துறையில் செந்தில் பாலாஜி மின்சார துறை அமைச்சராக இருக்கும்போது ,நடந்த ஊழல்கள் இன்னும் சரியாக கண்டுபிடித்து வெளிவரவில்லை.

எல்லாமே ஒரு தோராயக் கணக்காக தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் நடந்திருக்கிறது. இதை யார் வெளிப்படுத்த வேண்டும் என்றால்? சிஏஜி ரிப்போர்ட் என்ன சொல்கிறது? சிஏஜி ரிப்போர்ட் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக ஊழல் கணக்கு தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டது.

ஆனால், ஒவ்வொரு துறையும், அதில் எவ்வளவு ஊழல் நடைபெற்று உள்ளது? என்பதை வெளிப்படையாக மக்களுக்கு சொல்ல வேண்டும். இதேபோல் ,கூட்டுறவுத் துறை எவ்வளவு நஷ்ட கணக்கு எழுதி சரி செய்து இருக்கிறார்கள்? என்பதை வெளிப்படையாக சிஏஜி ரிப்போர்ட் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டும்.

மேலும்,இப்படி இந்த ஊழல்களுக்கு காரணமாக இருக்கக்கூடிய இந்த அரசாங்கம், நீதிமன்றத்திலே போய் வாய்தா வாங்குவதும் ,தன்னை நிரபராதி என்று காட்டிக் கொள்வதும், இது சட்டத்தை ஏமாற்றும் வேலை. இதை தான்,

தமிழ்நாட்டில் ஒவ்வொரு அமைச்சர்களும் ,உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ,இதை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களுக்கு இவர்களுடைய ஊழல் நன்றாக தெரிகிறது. ஆனால், சொத்துக்களை பறிமுதல் செய்யாமல், இந்த ஊழலை ஒழிக்க முடியாது.தவிர,இவர்கள் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி கடன் எப்படி வரும்? ஆனால், இவர்களுடைய சொத்து மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடி? அது எப்படி வரும்? இப்படி மக்கள் தலையில் கடன்களை சுமத்தி விட்டு, இவர்கள் சொகுசு வாழ்க்கையை வாழ, சொத்துக்களை எல்லாம் பட்டா போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாதா ? ஏன்?இந்த பினாமி சொத்துக்கள், அரசியல்வாதிகள் சொத்துக்கள் ,பறிமுதல் செய்ய சட்டம் கொண்டு வர வில்லை ? அப்படி கொண்டு வந்தால் தான், எந்த பொதுத்துறை நிறுவனங்களும், நஷ்டத்தில் இயங்காது.மேலும், ஏழைகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதிலோ, அல்லது விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுப்பதிலோ , மேலும் நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் கொடுப்பதளோ, மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்காது. இவர்கள் ஊழல் செய்வதால் தான் மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்குகிறது.

அதனால் ஊழல் செய்த சொத்துக்களை மற்றும் வங்கி கணக்கு மோசடிகளை உடனடியாக சிபிஐ மூலம் விசாரணை செய்து, இந்த நஷ்டத்தை சரி செய்ய வேண்டும். மேலும், மின்சாரத் துறையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

நாட்டில் எல்லாமே தனியார் மயமாக்கினால், மக்களுடைய வருமானம், அத்தனையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு, மக்கள் நடுத்தெருவில் தான் நின்று கொண்டிருப்பார்கள். அதனால், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு எவ்வளவோ, பல நன்மைகள் கொண்டு வருகிறீர்கள். ஆனால், இதை எடுத்து சொல்ல உங்களுக்கு நல்ல ஆலோசகர்கள் இல்லையா ?

எனவே, தனியார் மயமாக்குவதை இனி தடுத்து நிறுத்தி, யார் பொதுத்துறை நிர்வாகத்தில் ஊழல் செய்கிறார்களோ, அவர்கள் தான் அதற்கு பொறுப்பு ஏற்று, அந்த நஷ்டத்தை சரி செய்ய வேண்டும். மேலும்,

அது மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களாக இருக்கட்டும், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களாக இருக்கட்டும், பாதிக்கப்படுவது ,பொதுமக்கள் என்பதை புரிந்து, மத்திய, மாநில அரசு செயல்பட வேண்டும் என்பதுதான், பொது மக்களின் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *