
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் யார் முதல்வர் ?என்ற குழப்பத்தில் தமிழகத்தின் தேர்தல் முடிவு இருக்கிறதா? இந்த முடிவுகளை யாராலும் சரியாக சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் ,அதிகாரிகள், இது பற்றி பலர் என்னிடம் பேசி இருக்கிறார்கள்.
நான் சொன்னது, இந்த தேர்தல் முடிவை பற்றி மகான்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஜோதிடர்கள் கூட ,ஒரு குத்து மதிப்பாக தான் சொல்கிறார்கள். நடந்தால், நான் சொன்னது நடந்து விட்டது என்பார்கள் நடக்கவில்லை என்றால், நான் ஜோதிடர் தானே கடவுள் இல்லை என்று, அதற்கு ஒரு பதிலை தூக்கி வீசி விடுவார்கள்.
மேலும் ,தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுக, திமுகவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விஜய். விஜயின் அரசியல்! ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியலாக அது இருக்கும் .அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை . இதை தான், மக்கள் அதிகாரம் தொடர்ந்து எழுதி வருகிறது.
மேலும்,தொங்கு சட்டமன்றம் அமைந்தால் ,அதை சரி செய்வது விஜய் ஆகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல, இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் இருக்காது.

கடவுள் என்ற ஒரு சக்தி இருக்கிறது என்பதை நிரூபிக்கும் தேர்தலாக தான், இது இருக்கும். அதனால், மக்கள் குழப்பம் அடையத் தேவையில்லை .மே 4 ந்தேதி வரும் முடிவு மட்டும் தான் உண்மையானது.

மேலும்,துர்கா ஸ்டாலின் ,தன் கணவர் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று எத்தனையோ யாக பூஜைகள் கோயில் குளங்கள் ,சென்றாலும், இறைவன் கணக்கை யாருக்காகவும் அவர் மாற்றிக் கொள்ள மாட்டார் .
சட்டத்தை மீறுபவர் அல்ல, அவர் நீதிமான், தர்மவான் அவருக்குத் தெரியும் ,நிச்சயம் ஸ்டாலினுக்கு மீண்டும் பதவியில் அமர வைக்க வேண்டமா? வேண்டுமா?