போதைப்பொருள் சர்வதேச கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் திமுகவின் முக்கிய பொறுப்பில் வைத்துக் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் எப்படி நாட்டில் போதை பொருளை ஒழிக்க முடியும் ? இறைவன் மிகப் பெரியவன் என்பது இப்போதாவது புரிந்திருக்குமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மக்கள் அதிகாரத்தை கையில் கொடுத்து விட்டார்கள் .அதனால் எதை சொன்னாலும், எப்படி சொன்னாலும் ,கேட்டுக் கொள்ள வேண்டியது மக்களின் தலையெழுத்து. அதே நிலைமைதான் இன்றைய கார்ப்பரேட் தொலைக்காட்சி, பத்திரிகைகள் நடந்து கொண்டிருக்கிறது. காரணம் சுமார் பத்து ஊடகங்களுக்கு மேல் திமுக மற்றும் அதன் சார்பு உடைய ஊடகங்கள் இருக்கிறது .அவர்கள் சொல்வதுதான் செய்தி. உண்மை மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

 இது தவிர, இந்த ஊடகங்களின் வீக்னஸ் விளம்பரம், சலுகை அதையும் மீறி அவர்களுடைய ஊழல் விவகாரங்கள், உள்ளடி வேலைகள், இவை எல்லாம் தமிழ்நாட்டு ஊடகங்களை ஆளும் கட்சி மிரட்டி வைத்துள்ளதாக தகவல். இது ஒருபுறம் என்றால், நண்பர் ஒருவர் ஒரு தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .அவர் என்னிடம் சொன்னது, இந்த திமுக ஆட்சிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டால் ,எங்களுடைய கேபிள் டிவியை உருவி விடுவார்கள். அதுவும்  அவர்கள் கையில் இருக்கிறது.

இப்படி பல விவகாரங்கள் உள்ளடி வேலையாக நடத்தி ,ஆட்சியின் தவறுகளை பத்திரிகைகள் சுட்டிக்காட்டினால் மக்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். நமக்கு வாக்களிக்க மாட்டார்கள். இதற்கு பயப்படுகிறவர்கள் ஏன்? ஒழுங்கான, நேர்மையான ஆட்சியை நடத்தக் கூடாது? இந்த எண்ணம் என் முதல்வர் மு க ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் வரவில்லை? அவர்களது கட்சியினருக்கும் தெரியவில்லை.

 மக்கள் வாக்களித்தது எடப்பாடி ஆட்சியை விட ஸ்டாலின் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கையில் தான் வாக்களித்து இருக்கிறார்கள். தவிர, இவருடைய வாக்குறுதிகளை நம்பி தான் வாக்களித்திருக்கிறார்கள் .அப்படி இருக்கும்போது போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கு திமுகவில் மாநில அயலக அணியை எப்படி கொடுத்தீர்கள்? மேலும், இது பற்றி உளவுத்துறை எந்த தகவலும் சொல்லவில்லையா? தமிழ்நாட்டில் கிராமங்கள் வரை இந்த போதை பொருள் உலா வந்தது .

அப்போதெல்லாம் இந்த காவல்துறையின் உளவுத்துறை ரிப்போர்ட் ஒரு இடத்தில் கூட காவல்துறை வைக்கவில்லையா? மேலும், இதில் காவல் துறைக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய நெட்வொர்க் இந்தியா முழுவதும் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் தமிழ்நாட்டில் எந்தெந்த விஷயத்தையோ தோண்டி துருவி பார்க்கின்ற காவல்துறை, இதில் மட்டும் இதற்கு தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந்தும் கண்டும் காணாமல் தனக்குரிய சுயலாபத்தை அடைந்து கொண்டு இருந்து விட்டார்களா? இது எவ்வளவு கோடிகள் வியாபாரம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது?

 இதை வைத்து முதலமைச்சர் நிவாரண நிதி, இதை வைத்து சினிமா படம், இதை வைத்து அரசியல், இப்படி எந்த ஆட்சியில்? எந்த மாநிலத்தில்? இதுவரை நடந்திருக்கும்? இது ஸ்டாலின் ஆட்சியில் மிகப்பெரிய கரும்புள்ளி என்பதை பதிவு செய்கிறேன். நாட்டில் மக்களுக்காக தான் ஆட்சி யே தவிர, ஆட்சியாளர்களுக்காக ஆட்சி இல்லை. அதற்காக மக்கள் வாக்களிக்கவும் இல்லை என்பதை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும்.

 எவ்வளவு பெரிய அதிர்ச்சி! இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவம் கேட்கவே நடுங்க வேண்டியுள்ளது. இதனால், எத்தனை லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் ?எவ்வளவு இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? ஆனால், ஒன்று மட்டும் தெரிந்தோ ,தெரியாமலோ அந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் இறைவன் மிகப் பெரியவன் என்ற டைட்டிலில் படம் எடுத்தான். இறைவன் யார் ?என்பது உங்கள் எல்லோருக்குமே இறைவன் மிகப் பெரியவன் தான் இப்போது புரிந்திருக்கும் .மேலும்,

தலைமறைவான ஜாபர் சாதிக் மற்றும் அவன் கூட்டாளிகள் பிடிபட்டால் தான் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்திருக்கிறது? என்பது விசாரணையில் தெரியவரும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *