
தமிழ்நாட்டில் திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தீர்ப்பும் அவர்களே அந்த மசோதா மீது சட்டமாக்கி விட்டார்கள்.

அப்போதே சொன்னேன். இது ஒரு தவறான தீர்ப்பு ,உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எதற்கு கவர்னர் ?இனி சட்டமன்றத்தில் இருந்து மசோதாக்களை நிறைவேற்ற நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி விடலாம்.

எதற்கு கவர்னருக்கு அனுப்ப வேண்டும்? மசோதாகளை அவர்களே நிறைவேற்றி, இவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். இது ஒரு காமெடியாகவும் பேசப்பட்டது.
அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ, அதன்படி தான் சிலவற்றை செய்ய முடியும். திமுகவினர் பேசுவதெல்லாம் சட்டம் என்பார்கள். அந்த அளவுக்கு சட்ட மேதைகளை மிஞ்சும் அளவிற்கு பேசுவார்கள்.

தேவை என்றால் மதிப்பார்கள். தேவை இல்லை என்றால், மிதிப்பார்கள் .இல்லையென்றால், தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்வார்கள். இதுவெல்லாம் திமுகவின் கொள்கை.
அதற்கு உச்சநீதிமன்றம் இப்போது சரியான பதிலடி கொடுத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையில் நடைபெற்ற இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு. நாட்டில் நீதியை நிலை நாட்டியுள்ளது. அது என்னவென்றால், மசோதாகளை நிறைவேற்ற ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. இது திமுகவுக்கு கொடுத்த சரியான சவுக்கடி தான்.மேலும்

இதற்காக மக்களின் வரிப்பணத்தில் எவ்வளவு கோடி பணத்தை செலவு வழித்தார்களோ, கடவுளுக்கு தான் தெரியும். இதற்கெல்லாம் பணம் இருக்கிறது. எவ்வளவோ வீண் செலவுகள் செய்வதற்கு பணம் இருக்கிறது. எவ்வளவோ திட்டங்களில் கொள்ளையடிப்பதற்கு பணம் இருக்கிறது.
ஆனால், எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதற்கு தான் திமுக அரசுக்கு பணம் இருக்காது.

மத்திய அரசும் இதையெல்லாம் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் இந்த உண்மை புரியவில்லையா? இல்லை, எங்களுடைய கோரிக்கைகள் மத்திய அரசுக்கு கேட்கவில்லையா?

நாட்டில் எளியவன் வலிகள் கேட்கவில்லை என்றால், நாட்டில் ஜனநாயகம், அரசியலமைப்பு, சட்டம் ,மக்களாட்சி, எல்லாமே ஒரு வீணானது தான் என்று சொல்லி போராடியவர் டாக்டர் அம்பேத்கர்.

தமிழ்நாட்டில் ஊழலுக்கு ஒத்து ஊதினால் தான் சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பார்கள். ஊழலுக்கு எதிராக போராடினால், எதுவும் கொடுக்க மாட்டார்கள். .இது தான் ஸ்டாலினின் ஊழல் ஆட்சிக்கு முக்கிய சான்று.