
நேற்று சட்டமன்றத்திலே காரசாரமான விவாதங்கள் திமுக உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும், இடையே ஏற்பட்டது.
அதில் விஜய் பேசும் போது, நாங்க மிசாவை பார்த்தோம், மிஸ்ஸாவை பார்த்தோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், அடுத்தது பார்ட்டி பண்டு எல்லாத் துறைகளிலும் வாங்கியது குறித்து பேசினார் .அதற்கும் சரியான பதில் இல்லை,

மேலும்,ஸ்டாலின் அப்பா மீது சர்க்காரியா கமிஷன் கொண்டு வந்தார்கள் .அப்போது இந்திரா காந்தி இடம் சமரசமாகி விட்டார் கருணாநிதி . இப்படிப்பட்ட இவர்களுடைய வரலாறுகளை எல்லாம் புட்டு, புட்டு மக்களுக்கு வைத்துவிட்டார் முதல்வர் விஜய்.
இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரிந்த விஷயம் தான் .தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். இவ்வளவு தாக்குதல் ஸ்டாலின் குடும்பத்தின் மீதும், ஸ்டாலின் மீதும் விஜய் வைத்ததற்கு , தற்போது வரை ஸ்டாலின் இடமிருந்து எந்த விதமான பதில் தாக்குதல் வரவில்லை. மேலும்,

ஒருவேளை இந்த குற்றச்சாட்டை ஸ்டாலின் ஒப்புக்கொள்கிறார? என்பதுதான் மக்களும் ,தமிழக வெற்றி கழகத்தினரும் ,கேட்கின்ற கேள்வி? இதற்கிடையில் சம்பந்தம் இல்லாமல், விஷ்ணு ரெட்டி குறித்து அவதூறு பேசினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் , இல்லாத குற்றச்சாட்டுகளை ,செய்திகளை ,கனிம வள சுரங்கங்களை கட்டுப்படுத்துவதாக விஷ்ணு ரெட்டி மீது உதயநிதி நேற்று சட்டமன்றத்தில் குற்றம் சாட்டியது குறித்து, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது திமுகவுக்கு! அதிமுக தான் எதிரி என்பது போய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் தான் எதிரி என்ற சூழ்நிலை அரசியலில் உருவாகிவிட்டதா? என்கின்றனர் அரசியல் கட்சியினர்.
