
இந்த உலகத்தை வழிநடத்துவது மகான்களும், சித்தர்களும் வழி நடத்துகிறார்கள். இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல் !சக்தி !இயக்கம் !அனைத்தும் மகான்களும், சித்தர்களும்,கிரகங்களும், பூமியை ஆள்கிறது. அதனால்தான் இன்றைய இயற்கையின் பேரிடர் எப்படி எல்லாம் மனித வாழ்க்கைக்கு எதிராக உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா?
இன்றைய மனித வாழ்க்கை போலியான வாழ்க்கையில் சந்தோஷம் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பதவி அதிகாரம் மனித வாழ்க்கையின் ஆணவமாக மாறிவிட்டது. பல கோடிகள் உல்லாச வாழ்க்கை சொத்து சுகங்கள் எல்லாமே தவறான வழியில் பொருளீட்டி சுகத்தை அனுபவிக்க அரசியல் இன்று ஏமாற்று வேலை ஆகவிட்டது. பல போலி சாமியார்கள் மந்திரவாதிகள் இவர்களை எல்லாம் மதத்தை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள்.

அதேபோல் தான் கிறிஸ்தவத்திலும், இஸ்லாமியத்திலும் உண்மையான பக்தி உள்ள சாமியார்கள் மத போதகர்கள், மதமாற்றத்தை விரும்ப மாட்டார்கள். மதமாற்றம் என்பது ஒருவருடைய எண்ணத்திலிருந்து மாறுபட வேண்டும். அதை மாற்றி அவர்களை அங்கே உட்கார வைக்கிறார்கள் என்றால், அவர்களும் ஒரு போலியான ஆன்மீகத்தை பின்பற்றுபவர்களாக தான் இருப்பார்கள்.
இது எல்லாம் கலிகாலத்தின் ஆன்மீகம் எந்த அளவுக்கு மோசமான நிலையை அடையும் என்பது முன்னரே மகான்கள் ஞானிகள் எழுதி வைத்து விட்டதும் சென்றிருக்கிறார்கள்.
மேலும்,பணத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை கடவுளுக்கு கொடுக்க மாட்டார்கள். அற்ப சந்தோஷங்களுக்கு கொடுக்கின்ற மரியாதை கூட கடவுளுக்கு கொடுக்க மாட்டார்கள்.

ஆனால், கோயிலுக்கு செல்வார்கள் சடங்கு செய்வது போல், கையெடுத்து கும்பிட்டு ,வணங்கி விட்டு வருவார்கள். கடவுள் யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை .அவர் எதிர்பார்ப்பது அன்பு மட்டுமே! அந்த அன்பும் தூய்மையானதாக இருக்க வேண்டும். இதுதான் மகான்கள் ,சித்தர்கள் விரும்புவது.
இறைவனை தேடுபவர்கள் தன்னை சாமியார் என்று சொல்லிக் கொண்டாலும், அந்த நிலையை அவ்வளவு எளிதில் அடைய முடியாது. இறைநிலை என்பது அவ்வளவு சாதாரணமான நிலை அல்ல
மேலும்,சித்தர்களுக்கு அப்பாற்பட்ட நிலை மகான்கள் சில பேர் இரண்டும் ஒன்று என்றுதான் பேசுகிறார்கள் அதுவல்ல, ஒவ்வொருவருக்கும் ,பல வித்தியாசங்கள் இருக்கிறது. ஒருவருடைய நிலை! வேறு ஒருவர் அடைய முடியாது என்பது போல ஆன்மிகத்திலும் இந்த நிலை இருக்கத்தான் செய்கிறது.
மேலும்,மகான்கள், சித்தர்கள், பிறப்பற்றவர்கள். மகான்கள் ஒருவரை தேர்வு செய்து தான் பக்தர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள் அல்லது தன்னை வணங்குபவர்களாக, சிஷ்யர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். மற்றவர்கள் போலாம், வரலாம், பார்க்கலாம்,
மேலும்,அவரை வணங்க வேண்டும் என்றால் ?அவர்தான் அதை தீர்மானிக்கிறார் என்பது என்னுடைய அனுபவத்தின் மூலம் உணர்ந்த ஒன்று. அது மட்டுமல்ல, இறைவனின் அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி என்று சொல்வது போல, அவருடைய அருள் இருந்தால் மட்டுமே, அவரை வணங்க முடியும். இதுதான் உண்மை.

மேலும்,அவருடைய அனுக் கிரகம் இல்லாமல் ,அவரை வணங்க முடியாது. சேஷாத்ரி மகான் ஒருவருக்கு அவருடைய அனுகிரகம் இருந்தால், அவரை அந்த விடியற்காலை நேரத்திலே அவரே எழுப்பி விடுவார் .
அதன் பிறகு அவரவர் எப்படி அவரை பூஜிக்க வேண்டுமோ ,எப்படி போஜித்தாலும் ஏற்றுக் கொள்பவர் அவர்தான். அவரை பூஜிக்க எந்த ஆடம்பரமும் தேவையில்லை. அவரை நினைத்து வணங்கினாலே போதும் ,அவர் வழிகாட்டியாக அழைத்துச் செல்வார். அவரை நம்பி விட்டால், அவர் எல்லாமாக இருந்து அவரை நம்மை வழிநடத்திக் கொள்வார்.
அதாவது சேஷாத்திரி வணங்கினால், அவரே குருவாகவும், அவரே தந்தையாகவும் ,அவரே தாயாகவும், அவரே சகோதரனாகவும் ,எல்லாமாக அவரே நமக்காக மாறி விடுவார். நம் உறவுகளில் ஒருவராக வந்து கனவிலே தோன்றி பேசுவார் .அது புரியாது .உணர்ந்து கொள்ள தான் முடியும் .

சேஷாத்திரி ஒரு உயர்ந்த நிலைக்கு சென்ற மகான்! திருவண்ணாமலையில் ,எத்தனையோ மகான்கள் இருக்கிறார்கள் .சித்தர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய ஜீவசமாதி இருக்கிறது. இருப்பினும், இவருடைய ஒரு அணுகுமுறை எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசமானது.
இவருக்கும், நமக்கும் என்ன உறவு ?என்ன பந்தம் ?எப்படி பிணைப்பு ஏற்பட்டது ?எத்தனையோ முறை திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றாலும் ,அப்போதெல்லாம் திருவண்ணாமலை கிரிவலம் மட்டுமே சென்றிருக்கிறோம் .
அவருடைய ஆசிரமத்திற்குள் நுழைந்ததில்லை. அவர் அழைத்த பிறகுதான் ஆசிரமத்திற்கு போக முடிந்தது .இதுதான் சேஷாத்திரி .இதை ஏன் சொல்கிறேன் என்றால்? அவர் அனுமதி இல்லாமல் ,ஒருவரும் அங்கே உள்ளே நுழைய முடியாது. அவர் அனுமதி இல்லாமல், அவரை வணங்க முடியாது. இதுதான் நான் கண்ட அனுபவ உண்மை .
மேலும், பல விஷயங்கள் சேஷாத்திரி மகனைப் பற்றி தொடர்கதையாக மக்கள் அதிகாரத்தின் ஆன்மீகப் பக்கத்தில் வெளிவர உள்ளது. சேஷாத்திரி மகான் அருளாலே இது !(தொடரும்)
