
வன்னிய சமுதாயத்தினால் ராமதாஸுக்கு பேரும் புகழும் கிடைத்தது. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் கிடைத்தது .ஆனால், எந்த நோக்கத்திற்காக? இந்த வன்னியர் சங்கம் ஆரம்பித்து? அதுவும் மறந்து விட்டார்கள். மேலும்,
வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக பதிவு செய்து, 40 ஆண்டு காலம் நடத்தியும், இவர் அப்போதெல்லாம் இந்த 10.5 % சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தராமல், இப்போது வந்து அதாவது தேர்தல் வரும்போது, இவர்கள் இந்த இட ஒதுக்கிட்டு பிரச்சனையை கையில் எடுப்பார்கள்.

இது தேர்தல் நேரத்தில், இது ஒரு வியாபாரமாகவே ராமதாஸும் ,அன்புமணியும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் என்ன முக்கிய பிரச்சனை என்றால்! கடவுள் எப்படியோ, இந்த சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று பாவ ,புண்ணியம் பார்த்திருப்பாரோ, என்னவோ தெரியவில்லை.

அப்பா, மகனுக்குமே பிரச்சனைகளை உருவாக்கி ,இந்த கட்சியை இரண்டாக பிளவு செய்துவிட்டார். இன்று வரை இந்த கட்சியை வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக ஒரு துரோக செயலை தான் செய்து கொண்டிருக்கிறது. இதில் ராமதாஸ், அன்புமணி, மட்டும்தான் என்று தனிப்பட்ட நபரை குறிப்பிடாமல், இவர்களுடைய கட்சியின் நிர்வாகிகள் முதல் அடிமட்டம் வரை இவர்களால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்று தான் வன்னிய சமூகம் தெரிவிக்கிறது.மேலும்,இவர்கள் நல்லது செய்யாவிட்டாலும், கெடுதலாவது செய்யாது இருந்தாலே ,மேல் என்றுதான் வன்னிய சமுதாயம் நினைக்கிறது.
மேலும், இப்போது இவர்களுடைய வாக்கு சதவீதம் அரை சதவீதமா? அல்லது கால் சதவீதமா? என்று தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

ஏதோ இவர் புலம்புவது பார்த்தால், இவரால் தான் இந்த சமுதாயம் உயர்த்தி விட்டது போல பேசிக் கொண்டிருக்கிறார். இந்த கட்சி இல்லை என்றால் , வன்னியர் சமுதாயத்தை யாரும் மதிக்க மாட்டார்களா?
ஏதோ இவரால் தான் சமுதாயத்திற்கு மரியாதை வாங்கி கொடுத்து விட்டாரா? இவர்கள் பதவிக்காக புலம்பி கொண்டிருக்கிறார்கள். தவிர, தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை முடக்கி விட்டது. இதற்கு தற்போது அங்கீகாரமும் இல்லை.

அதனால்,இப்போது கார்ப்பரேட் மைக் ஊடகங்களில் புலம்பி கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாளைக்கு இந்த சமுதாயத்தை ஏமாற்ற முடியும்? ஏமாந்தவர்களுக்கு இறைவனே பாதுகாப்பு . மேலும், எவ்வளவு பெரிய இடத்திற்கு போனாலும், ஒரு நொடியில் கடவுள் கீழே இறக்கி வைத்து விடுவான் என்பதற்கு இந்த சம்பவங்கள் சாட்சி .
இனி வரும் 2026 தேர்தலில் ஒரு சீட்டு கொடு ஜெயிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு வன்னியர்கள் வெறுப்பை இவர்கள் சம்பாதித்து விட்டார்கள் . மேலும்,இங்கே எல்லோரையும் விலை பேச முடியாது. இதையெல்லாம் ராமதாஸுக்கு புரியவில்லை .அன்புமணிக்கும் புரியவில்லை அந்தக் கட்சி நிர்வாகிகளுக்கும் புரியவில்லை என்கின்றனர் வன்னியர் சமூகத்தினர் .