வாக்காளர் திருத்த சட்டத்தை (Sir)இத்தனை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேர்தல் ஆணையத்தின் (Sir) வாக்காளர் திருத்த சட்டத்தை இன்று பல அரசியல் கட்சிகள் எதிர்த்து தீர்மானம் கொண்டு வர காரணம் என்ன? வாக்காளர் திருத்தம் சரியானதா? தவறானதா? சரியானது தான்.

இப்போது இருக்கிற வாக்காளர் பட்டியல் இதை திருத்தக் கூடாது என்பதில் என்ன அரசியல் உள்நோக்கம்? எதற்காக எதிர்க்கட்சிகள் பதறுகின்றன? இன்று, திமுக ,காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள், இப்படி பல அரசியல் கட்சிகள் வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர் . மேலும்,

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு பல லட்சம் பேர் இறக்கிறார்கள். இந்த வாக்காளர் பட்டியல் எப்போது எடுக்கப்பட்டது? எந்த ஆண்டு வாக்காளர் சரிபார்ப்பு செய்யப்பட்டது ?அது ஒரு கணக்கு இருக்கிறது அல்லவா? அந்த கணக்கு ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் நீக்கவில்லை என்றால்! அது அப்படியேதான் இருக்கும். அது ஒன்று.

அடுத்தது எத்தனையோ பேர் அட்ரஸை அதாவது விலாசத்தை மாற்றி இருப்பார்கள். இல்லை குடியிருப்பை மாற்றி இருப்பார்கள், இடம் பெயர்ந்து இருப்பார்கள், அதுவே லட்சக்கணக்கில் இருக்கும். இதையெல்லாம் திருத்துவதில் இந்த அரசியல் கட்சிகளுக்கு என்ன நஷ்டம்?

உங்களுடைய ஓட்டுக்கள் அல்லது உங்க கட்சியினர் ஓட்டுக்கள் இதிலே தேர்தல் அதிகாரிகள் திருடி விடுவார்களா? இது என்ன மக்களை ஏமாற்றுகிற வேலை.சரி நீங்கள் சொல்வது அத்தனையும் , உண்மை என்று மக்கள் அப்படியே நம்பி விட வேண்டுமா?

இன்னைக்கு அரசியல் கட்சிகளுக்கு அடி முட்டாள்கள் தான் தேவைப்படுகிறார்கள். ஏனென்றால்! என்ன சொன்னாலும், அவன் வாயைத் திறந்து பார்த்துக்,கொண்டு கைதட்டி இருப்பான். அதுபோல ,எல்லோரும் இருக்க முடியுமா? அவனுக்கு கட்சியின்னாலும் தெரியாது ,அரசியலும் தெரியாது, அர்த்தம் தெரியாதவனெல்லாம் அங்கு வந்து உட்கார வைத்துவிட்டு, மைக்கை பிடித்துக் கொண்டு ,ஆளாளுக்கு என்ன பேசினாலும் ,அவனும் காது கொடுத்து கேட்க போவதில்லை .

ஏதோ கத்துறாங்க, நமக்கு ஒரு பாட்டில் கிடைச்சா போதும், இன்னைக்கு1000 ,500 கிடைச்சா போதும்னு வந்து உட்கார்ந்துட்டு இருக்கான். இந்த நிலைமையில் இருக்கிறவன வச்சு நீங்க அரசியல் பண்றீங்க. அப்படிப்பட்ட கூட்டம் எந்த கட்சி கூப்பிட்டாலும், போய் கூட்டத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறான்.

பாவம் இந்த வேல்முருகன் என்னென்னவோ பேசிக் கொண்டிருக்கிறார். இதையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் .என்றால், அவர்களுக்கு எல்லாம் அரசியல் பற்றி ஒரு துளி கூட தெரியாமல், இருக்கிறது. தெரிந்தால் கேள்வி அந்த வகையில் , இவர்களுக்கு லாபம் தான்.

மேலும் தற்போதைய அரசியல் கட்சிகளில் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் .இல்லை என்றால், அரசியல் தெரியாத அடி முட்டாள்களாக இருக்க வேண்டும் .இப்படிப்பட்டவர்கள் தான் இன்றைய அரசியல் கட்சிகளில் கூட்டமாகவும், கட்சியினராகவும், இருந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்,

தேர்தல் ஆணையம் அதனுடைய கடமை வாக்காளர் திருத்தம் கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும். செத்தவனுக்கும் சேர்த்து ஓட்டு போட்டு கணக்கு காட்ட முடியாது. நாங்கள் சொல்வதெல்லாம் இன்னும் தேர்தல் ஆணையம் ,கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்த வாக்காளர் திருத்த சட்டத்திற்கே இவர்கள் குதிக்கிறார்கள். தவறாக இருந்தால் அவர்களிடம் சொல்லுங்கள். எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறது ?அதை சரி செய்து விட்டு போகப் போகிறார்கள்.

ஆனால், இவர்கள் அலறுவது பார்த்தால் ,இங்கே ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்பதுதான் தெளிவாக தெரிகிறது. வாக்காளர் திருத்தம் என்பது ஒவ்வொரு வருடத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் ,எத்தனை லட்சம் பேர் இறக்கிறார்கள்? அல்லது புதிதாக வந்து சேருகிறார்கள்? என்பது யாருக்கும் தெரியாது .அது கணக்கெடுத்தால் தானே தெரியும். அதில் என்ன தவறு?

அதனால், வாக்காளர் சரிபார்ப்பு பணியை தேர்தல் ஆணையம் தகுந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன், காவல்துறை அதிகாரிகளுடன், இந்த சரிபார்ப்பு வேலையை செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்த அரசியல் கட்சிகள் இதை செய்யவிடாமல் கூட தடுப்பார்கள். அப்படி தடுத்தால் ,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.

இது தேவையற்ற அரசியல் சூழ்நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கும். இது ஒரு நேர்மையான தேர்தலாக நடத்த முடியாது.மேலும், அப்படிப்பட்ட சூழ்நிலையை திமுக உருவாக்கினால் ,ஆட்சிக்கு ஆபத்தா? அல்லது அரசியல் கட்சிகளுக்கு ஆபத்தா? தேர்தல் ஆணையம் அதனுடைய அதிகாரத்தை அரசியல் கட்சிகள் மீது செயல்படுத்த முடியும்.தவிர, சுப்ரீம் கோர்ட் எல்லா இடத்துக்கும் வந்து மத்தியஸ்தம் வேலை பார்க்க கூடாது.

அப்படிப் பார்த்தால், சுப்ரீம் கோர்ட்டால், இந்த வேலையை நடத்த முடியுமா? மேலும் அரசியல் கட்சியினர் இந்த வழக்கை, கோர்ட்டில் கொண்டு போய் போட்டு, தேர்தல் முடியும் வரை வழக்கு இருக்கிறது. நிலுவையில் என்று ஒரு கணக்கு போட்டு தான் திமுக அரசு அதை செய்ய பார்க்கிறது.

ஆனால் ,தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் கண்டிப்பாக அது கருணை காட்டாது. சுப்ரீம் கோர்டே சொன்னாலும், அதனுடைய சுதந்திரத்தை தடுக்க முடியாது. ஏனென்றால் தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணியை வாக்காளர்கள் சரி பார்த்து, மிக, மிக முக்கியத்துவம் ஆனது. அதேபோல், தேர்தல் நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்தின் முக்கிய கடமை. இதையெல்லாம் ஒழுங்காக செய்வதற்கு தான் தேர்தல் ஆணையம் இருக்கிறது. அதை தடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை.

அதனுடைய பணி என்னவோ, அது கண்டிப்பாக செய்து முடிக்கும். அதற்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும், இந்த வாக்காளர் திருத்தம் செய்து வருகிறது. இதை செய்யக்கூடாது என்று எந்த அரசியல் கட்சிக்கும், அவர்களுக்கு உத்தரவு போட அதிகாரம் கிடையாது. தேர்தல் ஆணையம் தான் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு போட முடியும். அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு போட முடியாது.

எனவே, இந்த பிரச்சனையை பெரிதாக்கினால் அரசியல் கட்சிகளுக்கு தான் முடிவு எதிரானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *