
திருப்பூரில் தேமுதிக பிரேமலதா 2026 தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபை தான் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தரமற்ற ரேஷன் அரிசி கொடுப்பதாக திமுக அரசு மீது குற்றச்சாட்டு.
ஒரு வேளை இந்த அரிசியை கட்சிக்காரர் ஒருவரை கொண்டு வரச் சொல்லி இருப்பாரோ,அதை செய்தியாளர்களிடம் காண்பித்திருக்கிறார். இதுவல்லவா காமெடி அரசியல்.
ஆக கூடி முதலிலே கட்சிக்காரனிடம் ரேஷன் அரிசி கொண்டு வா, அதை என்னிடம் காட்டு ,அதை நான் செய்தியாளர்களிடம் காண்பித்து அரசியல் செய்கிறேன். அடடா எவ்வளவு அரசியல் திறமை?
அதுமட்டுமல்ல, இவர்களுடைய தொண்டர்கள் 20 வருஷமாக உழைத்த உழைப்புக்கு கூட்டணி மந்திரி சபையில் இடம் பெறுவார்களா?

அப்படி என்ன உழைப்பு உழைத்தார்கள்? என்பது தமிழ்நாட்டு மக்கள் தான் 2026 ல் சொல்வார்கள். அதைப் பொறுத்திருந்து பார்ப்போம்….!