2026 ஆங்கில புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .Happy New Year from Makkal Adhikaram Newspaper, may all the people of the country live well in the English New Year 2026.
2026 ஆம் ஆண்டில் ! மக்கள் நலனில் அக்கறை உள்ள ஆட்சி மலர ,உலக மக்களை வாழவைக்கும் பிரபஞ்ச சக்தியான இறைவனை வணங்கி, அருள் புரிய வேண்டுகிறேன். In the year 2026! I pray to God, the universal power that sustains the lives of the people of the world, for a government that cares about the welfare of the people to flourish and for His blessings.
மக்கள் அனைவரும் இந்த புதிய ஆண்டில்! கடந்த கால வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருந்தாலும், இனி வரக்கூடிய இந்த ஆண்டு சந்தோஷம் நிறைந்த ஆண்டாக இருக்கட்டும் . தொழில் ,வியாபாரம், வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் அனைத்திலும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் ஆட்சி மலர உங்களுடைய அறிவை பயன்படுத்தி சிந்தித்து வாழ்ந்தால், இந்த ஆண்டு மக்களுக்கான நல்லாட்சி மலரும், ஆண்டாக இந்த பிரபஞ்ச சக்தி கொடுக்கட்டும். Everyone in this new year! Even though the past life was full of struggle, may this coming year be a year full of joy.If you use your knowledge and live thoughtfully to create a government that fulfills the expectations of the people of Tamil Nadu in all areas of industry, business, employment, education, and the economy, good governance for the people will flourish this year, and may this cosmic power continue to bless you year after year.
மேலும், இந்த 2026 ஆண்டு பத்திரிக்கை உலகில்! பத்திரிக்கையின் நலம் காக்கின்ற புதிய அரசு உதயமாகட்டும். உழைக்கின்ற சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு, பத்திரிக்கை துறையில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாக அமையட்டும். காலம் அதற்கான வேலைகளை பார்க்கட்டும். இந்தப் பிரபஞ்ச சக்தி எல்லாவற்றையும் பார்த்து தீர்மானிக்கின்ற மகா சக்தி. அந்த மகா சக்திக்கு இந்த கோரிக்கை . Also,In this 2026 year in the world of journalism! May a new government arise that protects the welfare of journalism. May it be a government that fulfills the expectations of the working social welfare press and journalists, in the field of journalism. Let time see the work for it. This universal power is the great power that sees and decides everything. This request is to that great power.
மேலும்,நாட்டில் ஏமாற்றும் போலி அரசியலில் இருந்து மக்கள் விடுபட , கடவுளை வழிபட்டு , அதற்கான தீர்வை தெய்வத்திடமே வேண்டுவது தவிர, மக்களுக்கு வேறு வழி இல்லை. மக்கள் எப்படியும் வாழலாம், எப்படியும் பேசலாம், என்ற நிலையிலிருந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.Furthermore, people have no other option but to worship God and seek a solution from God to get rid of the deceptive fake politics in the country. Change yourself from the position that people can live and speak in any way they want.
இலவசத்தையும், ஓட்டுக்கு பணத்தையும், நம்பி ஏமாறும் உங்கள் சுயநலத்தால், அரசியலில்!ஊழல்வாதிகளின் பின்னால் சென்றால், வருங்கால உங்கள் சந்ததிகள், இன்னும் பல ஆண்டுகள் நாட்டில், அவர்கள் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பார்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். அப்போது இறைவன் உங்களுக்கு நல்ல ஆட்சியாளர்களை கொடுப்பான். If you go after corrupt politicians in politics, believing in freebies and money for votes, and act accordingly, realizing that your future generations will be struggling with their lives in the country for many years to come. Then God will give you good rulers.
நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால், பணத்தையும் இலவசத்தையும் எதிர்பார்க்கக் கூடாது. அதுதான் நீங்கள் வருங்கால சந்ததிகளை வாழ வைக்கும் ஒரு நல்ல செயல் என்பதை மக்கள் உணர வேண்டும்.If you want to choose good people, you shouldn’t expect money or freebies. People should realize that it’s a good deed that you’re doing to help future generations.
நீங்கள் அடுத்தவனை ஏமாற்றிய பிழைக்கலாம் என்று நினைத்தால், உங்களுக்கு ஏமாற்றுக்காரர்கள் தான் ஆட்சியாளர்களாக கிடைப்பார்கள். இனியாவது திருந்தினால் பிரபஞ்சம் அதற்கான நல்வழி காட்டும். அரசியலில் ஏமாற்றி முன்னேறலாம் என்றால், இறுதி எல்லோருக்கும் ஏமாற்றம் தான். If you think you can survive by deceiving others, you will only have deceivers as rulers. If you change at least now, the universe will show you a good path for that. If you can get ahead in politics by deceiving, in the end everyone will be disappointed.
ஏமாற்றுக்காரர்களுக்கு வாக்களிப்பதும், நீங்கள் கடவுளுக்கு செய்கின்ற துரோகமே. கோயிலுக்கு விரதம் இருந்து மாலை போட்டு, சாமி கும்பிட்டு தீயவர்கள் பின்னால் சென்று வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியாது. அது நல்லவர்கள் பின்னால் நின்றால் தான், நாட்டுக்கும், நல்லது மக்களுக்கும் நல்லது. 2026 இல் தர்மம் வெல்லட்டும். நீதி தழைக்கட்டும். மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும். 🍀Voting for cheaters is a betrayal of God. You cannot go to the temple, fast, put garlands, bow to the Lord and follow the evil ones and live a happy life. It is only when the good people stand behind it that it is good for the country and the people. May Dharma prevail in 2026. May justice prevail. May the people get well-being. 🍀