ஜனவரி 25, 2025 • Makkal Adhikaram
ஸ்ரீ சூரிய நம்பூதிரி சுவாமிகள் தமிழ்நாட்டில் மீண்டும் திமுகவின் ஆட்சி 2026 இல் மலரும் என்று தெரிவித்துள்ளார். இவர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதிலிருந்தே, மீண்டும் திமுக ஆட்சி வரும் என்று சொன்னவர். அதேபோல் நடந்தது ,
மேலும், அவர் சொல்வது சரியான முறையில் நடந்தும் வருகிறது. ஆனால், இந்த முறை திமுக கடந்த முறை வெற்றி பெற்றது போல அதிக இடங்களில் வெற்றி பெற முடியாது. குறைந்த எண்ணிக்கையில் தான் வெற்றி பெறும். ஆனால், திமுக ஆட்சி தான் மீண்டும் மலரும் என்று தெரிவித்துள்ளார். மேலும்,தமிழ்நாட்டில்
இரண்டு, பெரிய கட்சிகளான அதிமுக, திமுக வின் கட்சிகளின் ஜாதகங்களை ஆய்வு செய்து பார்த்ததில், அதிமுகவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்று தான் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவின் 2026ல் ஆட்சி மீண்டும் ஏற்பட்டாலும், அது ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதியே முதல்வராக பொறுப்பேற்பார். அதுமட்டுமல்ல, சில கூட்டணி கட்சிகள் வெளியேறும் .சில கூட்டணி கட்சிகள் உள்ளே வரும் என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த காலகட்டத்தில் ஆள வேண்டும்? எந்த அரசியல் கட்சி ஆள வேண்டும்? அவர்களால் மக்களுக்கு நல்லதோ, கெட்டதோ என்ன எல்லாம் அனுபவிக்க போகிறார்கள்? இவை அத்தனையும் இந்தப் பிரபஞ்சத்தின் எதிர்கால ரகசியங்கள். இந்த ரகசியத்தை எல்லோராலும் சொல்ல முடியாது. அதை தகுதியான ஜோதிடர்களால் மட்டும் தான் இந்த உண்மையை வெளிப்படுத்த முடியும். எனவே, இறைவன் தான் இவை அத்தனையும் தீர்மானிக்கிறான்.
எனவே ,இதை தீர்மானிப்பது இறைவனே. மேலும், உதயநிதி அரசியலில் அதிக ஈடுபாடு இல்லை .அதிக உழைப்பு இல்லை. போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை .சமூக சேவை இல்லை. எதுவுமே இல்லை என்றாலும், ஒருவருடைய ஜாதக அமைப்பு ,ஒருவரை எந்த அளவுக்கு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்கிறது? என்பதற்கு இதுவே சான்று.