நாட்டில் மாற்றத்தை நோக்கி !அரசியல் என்று மக்கள் விரும்ப ! அரசியல் கட்சியினர், திமுகவில் இருந்து, அதிமுக! அதிமுகவிலிருந்து திமுக ! இது ! இவர்களுக்கான மாற்றமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மக்கள் மாற்றத்தை நோக்கி அரசியல் இருக்க வேண்டும் என்று விரும்பினால், அரசியல் கட்சியினர் தங்கள் சுயநலத்திற்காக மாற்றம் எதில் வரும்? என்று அதிமுகவிலும், திமுகவிலும் மாறி ,மாறி எம்பிக்களும், எம்எல்ஏக்களும் ,முன்னாள் மந்திரிகளும், சேர்ந்து கொள்வது அரசியல் என்பது எவ்வளவு சுயநலமாகி விட்டது? என்பது ஒரு எடுத்துக்காட்டு.

இவர்களுடைய சுயநலத்திற்காக அரசியல் கட்சிகள் மாறிக் கொள்கிறார்கள். இவர்களிடம் கொள்கை இல்லை .எந்த கட்சியில் போனால் கொள்ளை அடிக்க வசதி? எந்த கட்சியில் போனால் கோடிகளை பார்க்க வசதி ?இந்த கணக்கு போட்டு தான் அரசியல் போய்க் கொண்டிருக்கிறது.

இதனால், மக்களுடைய வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்ட களம் தான். பேசுவதற்கும், செய்வதற்கும் சம்பந்தமே இல்லை. மக்கள் எம்எல்ஏ, எம்பி களை நம்பி வாக்களித்தீர்கள்.

அங்கே,உங்களை அடமானம் வைத்து, அரசியல் கட்சிகளில் விலை பேசி விற்று விடுவார்கள். அதே போல் ஜாதியை நம்பி ,ஜாதி கட்சிகளுக்கு வாக்களித்தால் ,கொண்டு போய் ஆடு, மாடு விற்பது போல் பணத்திற்காக பேரம் பேசி வெற்றி விடுகிறார்கள்.

அதனால், மக்கள் தான் அரசியல் விழிப்புணர்வுடன் மாற்றம் யாரால் கொடுக்க முடியும்? என்பது சிந்திப்பது அவசியமானது. மேலும், ஸ்திரமான அரசியல் யாரால் தர முடியும் ?நமக்கான அரசியல் எது? என்பதை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.

சினிமாவை பார்த்து விட்டு, சினிமாவில் நடிக்கும் காட்சிகளை பார்த்து விட்டு, அரசியலை தேர்வு செய்யக்கூடாது .அதேபோல் தொலைக்காட்சிகளில் அரசியல் கட்சியினர் பேசுவதையும், பேட்டி அளிப்பதையும் ,பார்த்து அரசியல் தேர்வு செய்யக்கூடாது.

கூட்டங்களை பார்த்து அரசியல் தேர்வு செய்யக்கூடாது. கொடி பிடித்து கோஷம் போடுகிறனைப் பார்த்து அரசியல் தேர்வு செய்யக்கூடாது. இவர்கள் அனைவரும் சொந்த சுயநலத்திற்காக ,அரசியலுக்கு வந்தவர்கள் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

மக்களுக்காக !மக்கள் நலனுக்காக! செய்கின்ற அரசியல் கட்சி எது ?என்பதை தேர்வு செய்யுங்கள் .மக்களுக்காக போராடுபவர்கள் யார்? மக்களுக்காக உழைப்பவர்கள் யார் ? என்பதை தேர்வு செய்யுங்கள். போராடுவது போன்று வசனம் பேசி நடிப்பவர்களை பார்த்து தேர்வு செய்யாதீர்கள். ஏமாந்து போவீர்கள்.

அதனால், அரசியல் தமிழ்நாட்டில் ஏமாற்றுவது எப்படி? என்று கற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதனால், மக்கள் இந்த ஏமாற்று அரசியலில் இருந்து தகுதியான அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை, தேர்வு செய்வது தான் மிகப்பெரிய சவால்கள் .மக்களின் ஏமாற்றம் அரசியல் கட்சியினர்களின் அதிர்ஷ்டம் .

அதனால் ! வாக்காளர்கள் விழித்துக் கொள்வது மட்டுமே அரசியல் மாற்றத்தின் முக்கியத்துவமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *