
திமுக அரசு ஜாதியை ஒழிப்பதாக நினைக்கிறதா? அல்லது விளம்பரத்திற்காக ஜாதியினுடைய பெயர் பலகைகளை அழிக்கிறார்களா?

அப்படி என்றால்! ஜாதிக்காக கொடுக்கின்ற சலுகைகளை எடுத்து விடுங்கள். அடுத்தது ,ஜாதி பெயரை சொன்னால் ,வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யக்கூடிய பி சி ஆர் சட்டத்தை எடுத்து விடுங்கள்.

இதையெல்லாம் எடுக்காமல் ,தெருக்கலில், ஊர்களில், நகரங்களில், மக்களுக்காக உழைத்த நபர்கள், அந்த காலத்தில் அவர்களுடைய பெயர் மறக்காமல் இருப்பதற்காக சூட்டப்பட்ட பெயரை அழிக்கும் நோக்கம் என்ன?

சரி அதேபோல் கருணாநிதி பெயரில் உள்ள அத்தனையும் அழியுங்கள். நீங்கள் எப்படி உங்களுடைய தந்தையின் பெயரை எந்த நோக்கத்திற்காக வைத்தீர்கள்? அதே போல் தான் அந்த காலத்தில் இந்த மக்களுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் தான் அது.

மேலும்,ஒரு பக்கம் ஜாதி பெயரை அழிப்பதாக சொல்லி, இன்னொரு பக்கம் ஜிடி நாயுடு என்று மேம்பாலத்திற்கு பெயரை சூட்டுகீறீர்கள். இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாத திமுக அரசு ,பொது மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டார்களா? என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும், நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் மக்கள் தாங்கிக் கொண்டு, வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, இதற்கு ஒரு விளம்பரம் தேடுகின்ற திமுக அரசு ,ஜாதியை ஒழிக்க போகிறார்களா? ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றால்! எல்லாவற்றையும் எடுங்கள். அது உங்களால் முடியுமா?
மக்கள் கொடுத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, இதில் பல சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளப் போகிறது என்பதை உறுதி.