
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலர் வங்கியின் தணிக்கை அதிகாரிகள் ஊழலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கோ. வரலட்சுமி முன்னாள் உதவி மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது பற்றி அவர்,மேலாண்மை இயக்குனர் சிவமலருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். மேற்படி கடிதம் எங்களுடைய மக்கள் அதிகாரம் பத்திரிகைக்கும் கொடுக்கப் பட்டுள்ளது.
அதாவது, ஒரு வங்கியில் யார்? எந்த தவறு செய்தாலும் ,அதற்கு வங்கியின் மேலாளர் தான் பொறுப்பு. அதேபோல், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியிலும், ஒட்டு மொத்த நிர்வாகத்தின் தலைமையாக இருக்கக்கூடிய மேலாண்மை இயக்குனர் சிவமலர் தான் இதற்கு பொறுப்பு.
மேலும்,தற்போது காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், ஏற்கனவே 12 கோடிக்கு மேல் பர்னிச்சர் வாங்கியதில் ஊழல் முறைகேடு நடைபெற்று உள்ளது. அதற்கு ஆடிட்டிங் படிக்காத தணிக்கை பிரிவு மேலாளர் ஏழுமலை , இந்த கணக்கை சரிகட்டும் வேலையை செய்துள்ளார்.

இதையெல்லாம் துல்லியமாக ஆய்வு செய்யக்கூடிய ,அனுபவமிக்க ஆடிட்டர்கள் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் முறையான ஊழல்கள் அதிலிருந்து வெளிவரும்.
மேலும்,இப்போது விவசாயப் பிரிவு மேலாளர்பவன் குமார் என்பவர் அக்கவுண்ட் படிக்காமலே இவரையும் போட்டு பல கோடி வர்த்தகம் நடைபெறும் இடத்தில், இவர்களை எல்லாம் ஆடிட்டர்களாக நியமித்தால், மேற்படி வங்கியில் ஊழல் தான் அதிகரிக்கும்.
இது தவிர, தற்போது பவன் குமார் சுமார் 12 கோடிக்கு மேல், ஊழல் செய்துள்ளதாக தகவல் வெளிவருகிறது. ஆனால், அதை ஏதோ சிறிய அளவில் கணக்கு காட்டி, அதை மூடி மறைக்கும் நோக்கத்தில் , மேலாண்மை இயக்குனர் சிவமலர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது பற்றி இவரே காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. எல்லாமே ஒரு மேலோட்டமான நாடக நிர்வாகமாக மேலாண்மை இயக்குனர் சிவ மலர் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடத்திக் கொண்டிருக்கிறார்.மேலும்,
இவரைப் பற்றி பத்திரிகையில் செய்திகள் உண்மைத் தன்மையோடு வெளிவந்தும் கூட, கூட்டுறவுத்துறையின் இயக்குனர் மற்றும் பதிவாளர் எந்த நடவடிக்கையும், இதுவரை எடுக்கவில்லை. இப்படியே இந்த நிர்வாகம் செயல்படுமானால்,இது கூட்டுறவுத் துறையின் ஊழலை அங்கீகரிக்கும் வேலையை உயர் அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் ஊழல் நிர்வாகத்திற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ,என்று கூட்டுறவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாசகர்கள் டவுன்லோட் பைலை கிளிக் செய்து பார்க்கவும் .
மேலும்,ஒரு வங்கியில் கணக்கு வழக்குகளை பார்க்கக்கூடிய ஆடிட்டர்கள் சரியான முறையில் கணக்கை ஆய்வு செய்தால், யார் எந்த இடத்தில் எவ்வளவு ஊழல் செய்து இருக்கிறார்கள்? என்பது வெட்ட வெளிச்சமாக வெளிவரும். ஆனால், இங்கே மேலாண்மை இயக்குனர் சிவமலர் கையில் ஆடிட்டிங் தெரியாதவர்களை வைத்துக் கொண்டு, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் ஊழல் நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் வெட்ட வெளிச்சமான உண்மை.
மேலும் இந்த வங்கியில் ஊழல்கள் தொடர்வதற்கு முக்கிய காரணம் முறையாக ஆடிட்டிங் தெரிந்தவர்களை நியமிக்காமல்,ஊழல்களை வெளிக்கொணர முடியாது . தவிர,இவர்களுடைய வங்கி அலுவலர்களை வைத்து ஆடிட் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு. அடுத்தது, இந்த வங்கியின் உட் தணிக்கையாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணகுமார் முக்கிய ஊழல் கணக்குகளை மறைத்து உயர் அதிகாரிகளுக்கு, இந்த ஊழலை சரிகட்டும் வேலை தான் வேலையை வங்கியில் செய்து வருகிறார்.
அதனால் தான் வங்கிக்கு தகுதியான ஆடிட்டிங் தெரிந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும். இந்த முறையை மாற்றாமல், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் ஊழல் நிர்வாகத்தை சரி செய்ய முடியாது. அடுத்தது, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வரும் ஏ.கே சிவ மலரை மாற்றாமல் வங்கி நிர்வாகத்தை சரி செய்ய முடியாது.
அப்படி என்றால், மேலாண்மை இயக்குனர் சிவமலர் ,இவர்களுடன் கூட்டு சேர்ந்து ,இந்த ஊழலுக்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் கூட்டுறவாளர்கள் தெரிவிக்கின்ற உண்மை.
மேலும், மேற்படி ஊழல் குற்றச்சாட்டு குறைந்த அளவில் கணக்கு காட்டி, மூடி மறைக்க நினைத்தால், இந்த வங்கிக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து, மேற்படி ஊழல் விவகாரத்தை வெளியில் கொண்டு வர வேண்டும் என்று இந்த வங்கியின் முன்னாள் உதவி மேலாளர் கோ .வரலட்சுமி மற்றும் கூட்டுறவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இப்படிப்பட்ட ஆடிட்டர்களை தூக்கி ஓரம் கட்டாமல், வங்கியில் ஊழல் நிர்வாகத்தை சரி செய்ய முடியாது. மேலும், இந்த ஆடிட்டர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நேரடி ஆடிட்டர்களை ஒவ்வொரு மத்திய கூட்டுறவு வங்கிக்கும் தலைமை அலுவலகத்தில் நியமித்தால், ஊழல் என்பது கூட்டுறவு துறையில் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது உறுதி .
எனவே, இப்போதாவது கூட்டுறவு பதிவாளருக்கு இந்த உண்மைகள் புரிகிறதா?