ஆசிரியர்களின் உரிமைக்காக போராடினால், திமுக ஆட்சியில் கைதா?If we fight for teachers’ rights, will we be caught in the DMK government?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் திமுக ஆட்சியை முடியும் தருவாயில் கூட, அரசு ஊழியர்கள்,மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்கள், போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. அப்போது சொன்னது வேறு, இப்போது சொல்வது வேறு, இதுதான் மக்களிடம் திமுக அரசியல் கட்சி செய்த போலிய அரசியல். அதாவது பேசுவதற்கும் செய்வதற்கும் சம்பந்தமில்லை. இதை கார்ப்பரேட் ஊடகங்கள், விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றி இருக்கிறது. Even as the DMK regime in the country is about to end, government employees and people from various sectors are struggling. Moreover, none of the promises made during the election have been fulfilled. What was said then is different, what is being said now is different, this is the politics that the DMK political party has done to the people. That is, there is no connection between talking and doing. The corporate media has advertised this and deceived the people.

இது அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்களும் ,இதில் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். It is not just government employees who have been cheated in this, but also government employees from various departments.

தற்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ,நாளுக்கு நாள், தொடர் போராட்டமாக மாறி வருகிறது. 2026 முதல் நாளாக இருந்தாலும், ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். அவர்களுடைய போராட்டமும், கோரிக்கையும் நியாயமானது. எங்களுடைய தகுதிக்கும், வேலைக்கும் ஊதியத்தை வழங்குங்கள், இதுதான் அவர்களுடைய கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்காக அவர்கள் வீதியில் இறங்கி பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். தவறில்லை. ஏனென்றால், மக்கள் ஒரு நிமிஷம் சிந்திப்பார்கள் அல்லவா? Currently, the secondary teachers’ struggle is turning into a continuous struggle, day by day. Even though it is the first day of 2026, the teachers are struggling. Their struggle and demand are justified. Pay us wages according to our qualifications and work, this is their demand. For this demand, they are taking to the streets and bringing it to the public’s attention. There is nothing wrong with that. Because, people will think for a minute, won’t they?

இது தேர்தல் நெருங்குகின்ற வேலை! இந்த நேரத்தில் இவர்கள் போராட்டம் செய்தால், நம்முடைய வாக்கு வங்கி அடிபடும் என்று திமுக கணக்கு போடுகிறது. ஆனால், அவர்களின் நியாயமான உரிமை, போராட்டத்திற்கு நியாயம் கிடைக்காமல், திமுக அரசு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மேலும், காக்கி சட்டை போட்டு விட்டாலே, அது பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஒருவரை அடக்குவது தான் அவர்களுடைய தொழில் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு ஆசிரிய பெண்மணி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கு ஊடகங்களிடம் பேசுவதை கூட தடுக்கிறார்கள். இந்த உரிமை கூட திமுக ஆட்சியில் காவல்துறை, எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது? அவர்கள் என்ன கொலை குற்றவாளியா? இல்லை கொள்ளை அடித்த குற்றவாளியா? இல்லை ஊழல் குற்றவாளியா? எதுவுமே இல்லை. அவருடைய உரிமைக்காக போராட வந்தவர்கள், அவர்களுடைய ஆதங்கத்தை பொதுவெளியில் பேசுவதற்கு கூட, இவர்கள் இடம் கொடுக்காமல் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி அதிகாரம் இருக்கிறது என்று ,ஒரு அரசு ஊழியரை பலவந்தப்படுத்தி தூக்கி போடுகிறார்கள்.தற்போது ஒரு ஆசிரியரின் கையை உடைத்து விட்டார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.இது எல்லாம் மக்களாட்சியா? இல்லை சர்வாதிகார ஆட்சியா? இதே ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, இந்த வசனத்தை பேசி இருப்பார். ஆளுங்கட்சியாக வந்து அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

இப்படி நீங்கள் அவர்களுடைய கோரிக்கையை செய்வது, செய்யாத போவது, அது அடுத்த கட்டம், ஆனால், உரிமையை கேட்டுப் போராடும் போது, காவல்துறை அவர்களை குற்றவாளிகளை போல நடத்துவது, மனித உரிமை மீறல் என்பதை காவல்துறை புரிந்து கொள்வார்களா?Whether you do or don’t do their demands is the next step, but will the police understand that treating them like criminals while fighting for their rights is a violation of human rights?

இவர்களால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விட்டது? இதை அவர்களால் விளக்க முடியுமா? அல்லது அதற்கான ஆதாரத்தை இவர்கள் காட்ட முடியுமா? இதைதான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து வலியுறுத்துகிறது .இந்த கருப்பு சட்டங்களை, காவல்துறையிலிருந்து களை எடுக்க வேண்டும்.

இது அரசியல் கட்சியினருக்கும்,ஆட்சியாளர்களுக்கும் சாதகமாக காவல்துறையை வைத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இப்போதாவது அரசு ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும், இந்த உண்மைகள் புரிகிறதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *