
நாட்டில் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் வேலையாகி விட்டது. கடந்த திமுக ஆட்சியில் 600 பக்க தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதில் 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.

மேலும்,விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன் நகை தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால், பேருக்கு ஒரு வங்கியில் 100 பேருக்கு கொடுத்து விட்டு, நாங்களும் கடன் தள்ளுபடி செய்தோம் என்று அறிவித்து விட்டார்கள் .

இது பற்றி வங்கி அதிகாரிகளை விசாரித்த போது, சார் இனி தள்ளுபடி இல்லை. நீங்கள் உங்கள் நகை கடனை கட்டி தீர்த்து விடுங்கள் என்று சொல்லி விட்டார்கள். எனவே, விவசாயிகளை ஏமாற்றினார்கள். அடுத்தது, என்னுடைய உறவினர் ஒருவர் ,தன்னுடைய மகனுக்கு வங்கியில் கல்வி கடன் வாங்கி படிக்க வைத்தார். அந்த கடன் தள்ளுபடி என்று அப்போது தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். அதுவும் நிறைவேற்றவில்லை.

இப்படி எதுவுமே தேர்தல் அறிக்கையில், திமுக குறைந்தபட்சம் 50 சதவீதம் கூட செய்யவில்லை. ஆனால், சொல்லாததை ஒன்று செய்திருக்கின்றார்கள் .அது என்ன என்றால்? மகளிருக்கு ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து, இந்த இரண்டு இலவசமாக கொடுத்துவிட்டு, மக்களிடம் மின் கட்டண வரி உயர்வு , தண்ணீர் வரி உயர்வு ,கழிவுநீர் வரி உயர்வு ,பத்திரப் பதிவு வரி உயர்வு ,சொத்து வரி உயர்வு ,வீட்டு வரி உயர்வு, குடிநீர்வாரி உயர்வு ,எத்தனை வரி உயர்வுகளையும் ஏற்றி வைத்துவிட்டு ஆயிரம் ரூபாய் எந்த மூலைக்கு? மக்களிடம் பத்தாயிரம் வாங்கிக்கொண்டு ,ஆயிரம் ரூபாய் இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். இதுதான் திமுகவின் தேர்தல் அறிக்கையா? ஓரிரு நாளில் ,வெளி வருவதாக தகவல் . ஆனால்,அந்த அறிக்கையை இனி நம்ப முடியாது.

மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை நம்பி வாக்களித்தால், வாக்களிப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். காஜானா காலி, தமிழ்நாட்டின் கடன் சுமை 10 லட்சம் கோடி . அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே தள்ளாடும் நிலையில்தான் தமிழக அரசு இருந்து வருகிறது. திட்டங்களை செயல்படுத்துவதற்கே பணம் இல்லை. இலவசங்களை எப்படி கொடுக்க முடியும்? வாக்காளர்கள் இதை சிந்திப்பார்களா?
மேலும்,அதிமுகவில் கூட, இந்த தேர்தல் அறிக்கை 100% செய்வார்களா? என்ற நம்பிக்கை இல்லை .இருப்பினும், எடப்பாடி பழனிசாமி ஒரு 50 சதவீதமாக செய்வார் .அதுல ,ஒரு நம்பிக்கை இருக்கிறது.

ஆனால், கடந்த ஆட்சியில் திமுக சொன்ன தேர்தல் அறிக்கை, எதுவுமே செய்யவில்லை. எப்படி இந்த முறை தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப முடியும் ?அதுதான் மக்களின் சார்பாக ஒரு கேள்வி? மேலும், வரி உயர்வு ,விலைவாசி உயர்வு, எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு, இலவசத்தை கொடுப்பதால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மக்கள் இலவசமும், கடன் தள்ளு படியும், நம்பி ஏமாறாதீர்கள்.