அகில இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக்கை, உடனடியாக மாற்றி சரியான தேர்தல் ஆணையரை நியமிப்பீர்களா? – எதிர்க்கட்சிகள் சுயேட்சை வேட்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் ஆங்காங்கே, திமுக மற்றும் பல அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பது, வெளிப்படையாகவே மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள்

தமிழ்நாட்டில் இதை பல மாவட்ட ஆட்சியர்கள் கண்டும் காணாமல், இருந்து வருகிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, அவர்கள் கவனத்திற்க்கு வராமல் இருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்த தமிழகமும், பரிசு பொருட்கள் கொடுப்பது, பணம் கொடுப்பது, தொடர்ந்து நடந்து வருகிறது.

அது பற்றி சமூக ஆர்வலர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ,ஆங்காங்கே புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு, அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும், தேர்தல் ஆணையத்தில் இருந்து எடுக்கவில்லை என்பதுதான் அவர்களுடைய ஓட்டு மொத்த வேதனை.

மேலும்,தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் இப்படி தேர்தல் நடத்தினால், நிச்சயம் அர்ச்சனா பட் நாயக் நடத்தக்கூடிய தேர்தல், ஆங்காங்கே குளறுபடியும், மறு தேர்தலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும், ஏற்பட வாய்ப்புள்ளது.

தவிர,தேர்தல் அறிவிப்பு வந்த பிறகும் ,அதனுடைய விதிமுறைகள் கடுமையாக அதிகாரிகள் மத்தியில் கடைப்பிடிப்பது போல் தெரியவில்லை. மேலும் காவல்துறையும், தேர்தல் விதிமுறைகள் கெடுபிடியும், இல்லாமல் சாதாரணமாகவே இருக்கிறது.

இப்படி இருந்தால், தேர்தல் ஆணையம் நிச்சயம், தமிழ்நாட்டின் தேர்தல் பிரச்சனைகள், நீதிமன்றத்திற்கு நிச்சயம் செல்ல வாய்ப்புள்ளது. மேலும், தற்போது வேலூர் மாவட்டத்தின் சமூக ஆர்வலர் ஒருவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் நகராட்சி ஆணையர் லட்சுமணன் ஆகியோரை உடனடியாக மாற்ற தேர்தல் விதிமுறைப்படி சமூக ஆர்வலராக கோரிக்கை வைத்துள்ளார். அது மட்டுமல்ல,

மாநகராட்சியின் மேயரான சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ,நான் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பேன் .என்னை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று பேசி பரிசு பொருட்களை கொடுத்து வருகிறார்.

அந்த அளவுக்கு அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், திமுக ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்று புகார் தெரிவித்துள்ளனர். இது ஜனநாயக தேர்தலா? திமுக அரசின் தேர்தலா? என்று தெரியவில்லை என எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் , சுயட்சை வேட்பாளர்கள் புகார். இந்திய தேர்தல் ஆணையம் இப் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமா?

மேலும், இணையதள பத்திரிக்கை செய்திகள், பத்திரிகை செய்திகள், யூடியூப் செய்திகள், தொலைக்காட்சி செய்திகள் ,என செய்திகளை உடனுக்குடன் தேர்தல் ஆணையர் பார்க்க வேண்டும். ஆனால், இவர்கள் பார்க்கிறார்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *