
திமுக ஆட்சி முடிய போகிற வேலையில் கூட,இவ்வளவு அராஜகங்களா? மேலும்,
உச்ச நீதிமன்றம் சொல்லுகின்ற ,எந்த ஒரு சட்டத்தையும் காவல்துறையினர் மதிப்பதில்லை. தவிர,உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் காவல்துறை செயல்பட வேண்டும்.
ஆனால், அந்த சட்டங்களை மதிக்காமல் காவல்துறை செயல்படுவதால்,உச்சநீதிமன்றம் ஒவ்வொன்றாக காவல்துறைக்கு கடிவாளம் போட்டுக் கொண்டு வருகிறது. இன்னும் இதற்கு போடவில்லை.

அதாவது காவல்துறை, சட்டத்தை பாதுகாப்பது,மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, தான் காவல்துறையின் முக்கிய வேலை .அதை விட்டு ,விட்டு நாட்டில் அரசியல் அதிகாரத்தின் எடுபிடி வேலை பார்ப்பது காவல்துறையின் வேலை அல்ல.அதாவது காவல்துறை தான் காவல்துறையின் முக்கிய வேலை .அதை விட்டு ,விட்டு நாட்டில் அரசியல் அதிகாரத்தின் எடுபிடி வேலை பார்ப்பது காவல்துறையின் வேலை அல்ல.அதாவது காவல்துறை, சட்டத்தை பாதுகாப்பது, தான் காவல்துறையின் முக்கிய வேலை .அதை விட்டு ,விட்டு நாட்டில் அரசியல் அதிகாரத்தின் எடுபிடி வேலை பார்ப்பது காவல்துறையின் வேலை அல்ல.அதாவது காவல்துறை தான் காவல்துறையின் முக்கிய வேலை .அதை விட்டு ,விட்டு நாட்டில் அரசியல் அதிகாரத்தின் எடுபிடி வேலை பார்ப்பது காவல்துறையின் வேலை அல்ல.
மேலும், மக்கள் பணிக்காகத் தான் காவல்துறையினர் வந்திருக்கிறார்கள் என்பதை எல்லா காவலர்களும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஆட்சியாளர்களின் அதிகார எடு பிடி வேலைக்கு வரவில்லை. அவர்கள் உங்களுக்கு சம்பளம் தரவில்லை. மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறீர்கள். அதிகாரம் இருக்கிறது என்றால்! சட்டத்திற்குள் நீங்கள் வந்து விடுவீர்கள்.

மேலும்,அந்த சட்டத்திற்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும். ஆட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், நீங்கள் ஐந்தாண்டு அல்ல, உங்கள் வாழ்நாள் ஓய்வு வரை ,பணியாற்றிக் கொண்டுதான் இருக்க வேண்டும். என்பதை ஒவ்வொரு காவலர்களும் புரிந்து செயல்பட வேண்டும்.
மேலும்,நாட்டில் YouTuber களுக்கு! பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகள் இல்லை என்றாலும், அரசியல் கட்சியினரை யார் வேண்டுமானாலும்,விமர்சிக்கலாம். அதேபோல்,ஆட்சியாளர்களை விமர்சிக்கலாம். இதற்கு உச்ச நீதிமன்றமே உத்தரவு வழங்கி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, எப்படி அவர்கள் மேல், காவல்துறை பொய் வழக்கு போடுகிறது? இதுதான் மிகப்பெரிய கேள்வி ஆக உள்ளது?
மேலும்,நாட்டில் தவறு செய்பவர்களை பிடிப்பதற்கு தான் காவல்துறை! ஆனால், காவல்துறையே தவறு செய்தால்! அவர்களை யார் கேட்பது? சட்டம் கேட்கும் என்பதை மறந்து விடாதீர்கள். நீதிமன்றத்திற்கு அனைவருமே கட்டுப்பட்டவர்கள்.
மேலும், திமுக ஆட்சியில் நடக்கின்ற அவலங்களை, அராஜகங்களை youtuber கள் பேசுகிறார்கள். சரி youtuber பேசவில்லை. ஆனால்,வேறு ஒரு எதிர்க்கட்சியை சேர்ந்தவர் திமுகவை பற்றி விமர்சித்தால், உடனே அவர்களை கைது செய்து உள்ளே போட்டு விடுவீர்களா? எனவே,சட்டத்தை மதிக்கத் தெரியாத காவலர்கள் சட்டத்தை பாதுகாக்க முடியாது. முதலில் இப்படிப்பட்ட காவல்துறையினருக்கு ,சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனையை உருவாக்க வேண்டும். அதுவரை இவர்கள் இப்படித்தான் அதிகாரத்தை வைத்து ஆடிக் கொண்டிருப்பார்கள்.

மேலும்,இப்போது சவுக்கு சங்கர் எங்கே இருக்கிறார்? என்று கூட தெரியவில்லை என்கிறது youtuber கள் வட்டாரம் . அது மட்டுமல்ல, அவர் ஒரு வீடியோ பதிவில், தமிழ்நாட்டில் உள்ள கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.அவருடைய விமர்சனம் நியாயமானது தான்.
அதாவது இன்றைய கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சி நிருபர்கள் அடி வாங்கும் போது, திமுகவினர் ஆராஜகம் செய்கிறார்கள்.என்று உங்களை அடிக்கும் போது, கத்துகிறீர்களே ,கதறுகிறீர்களே, அதேதான் எனக்கு நேர்ந்த கதி ,அப்போது ஏன் வேடிக்கை பார்த்தீர்கள்?

மேலும்,ஒரு பத்திரிக்கை, மற்றும் தொலைக்காட்சி என்றால் நடக்கின்ற தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா? ஏன் உங்கள் கடமையை நீங்கள் சரி வர செய்யவில்லை? இந்த சுயநலம் தான் என்று சிறிய பத்திரிகை முதல் பெரிய பத்திரிக்கை வரை இருக்கிறது.
மேலும்,இங்கே காவல்துறை! ஆட்சியாளர்களின் எடுபிடியாக இருப்பது ஒருபுறம் என்றால், இங்கே பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் என்று அவர்களுடைய கடமையை சரிவர செய்யவில்லை. நீங்கள் கடமை செய்யாமலே, மக்களின் வரிப்பணத்தில் கோடி கணக்கில் சலுகை, விளம்பரங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதைதான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து சுட்டி காட்டிக் கொண்டிருக்கிறது. மேலும், பத்திரிகைகளில் இருக்கக்கூடிய பிரிவுகள், செய்தித் துறையில் தினசரி ,வாரம், மாதம் இதையெல்லாம் வைத்து செய்தித்துறை, எதை வைத்துப் பிரித்து இருக்கிறார்கள்? செய்தியை வைத்து பிரித்தார்களா? அல்லது அரசு செய்தியை வைத்து பிரித்தார்களா? அந்த பிரிவில் எப்படி சலுகை விளம்பரங்களை பிரிக்கிறார்கள்? அதுவே தவறானது.
மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கின்ற சலுகை விளம்பரங்கள் மக்களுக்கே அது பயன்படாத பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு தான் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது இவர்களுக்கு வேண்டிய பத்திரிகை தொலைக்காட்சிகள் இவர்கள் என்ன சொன்னாலும் என்ன தவறு செய்தாலும், அதை நியாயப்படுத்தும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இதற்கு எல்லாம் கொடுத்துவிட்டு, மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய பத்திரிக்கைகளுக்கு ம், ஊழலை எதிர்த்து போராடுகின்ற பத்திரிகைகளுக்கும், இந்த உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தின் மூலம் சட்டம் ஏமாற்றப்படுகிறதா? அல்லது தவறான சட்டம் போடப்பட்டுள்ளதா? இதற்கெல்லாம் மத்திய மாநில அரசின் செய்தித் துறை எப்போது பதில் சொல்லப் போகிறது? மேலும்,

இந்த உண்மைகள் மக்களுக்கு புரிகிறதா? சவுக்கு சங்கர் கேட்டது ,தவறு இல்லை. நியாயமானது.