
திருவள்ளூர் மாவட்டம் ,திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சுகந்தி ,பெருமாள் தம்பதியரின் மகன் மோனிஷ்வர் (3 வயது) இவர் பீட்டா தல சீமியா மேஜர் (Beta Thalassemia Major) என்ற கடுமையான ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதற்கு மருத்துவ தீர்வு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone marrow transplant)செய்ய வேண்டும். அதற்கு மருத்துவர்கள் சுமார் 9.46 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர்.
மேலும், இந்தத் தொகையை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் பணிபுரியும் பெருமாள் மற்றும் சுகந்தி ஆகியோரால் கொடுக்க முடியாத சூழல் இருந்தது.
மேலும்,இவர்களது நிலைமையை விளக்கி பிரதமர் நரேந்திர மோடிக்கு குழந்தைக்கு மருத்துவ நிதி உதவி செய்ய வலியுறுத்தி கடந்த மார்ச் 21 ,2025 அன்று சிறுவனின் தாயார் சுகந்தி கடிதம் எழுதியுள்ளார்.
தாயின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் அலுவலகம் (PMO ) சிறுவனின் சிகிச்சைக்காக ரூபாய் 8, 51,400/-நிதியினை உடனடியாக ஒதுக்கீடு செய்தது.
மேலும், குழந்தையின் தாய் சுகந்தி விடுத்துள்ள நெகிழ்ச்சியான அறிக்கை என்னவென்றால்! எனது மகனின் நிலைமையை கண்டு நாங்கள் மிகுந்த மனவேதனையில் இருந்தோம்.
தவிர, ஐந்து வயதிற்குள் இந்த அறுவை சிகிச்சை செய்தால்தான் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
அந்த இக்கட்டான நேரத்தில், ஒரு சாதாரண தாயின் குரலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மதிப்பளித்து எனது மகனின் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு என் வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டு இருக்கிறேன்.
மேலும், கடந்த ஜூலை 21, 2005 அன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், எனது மகனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இன்று எனது மகன் மோனிஷ்வர் முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறான்.
ஒரு ஏழை குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்த பிரதமரின் இந்த உதவி, எங்களைப் போன்ற பல ஏழை ,எளிய மக்களுக்கு !அரசு மீது உள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளது என்றார்.
மேலும், இந்த நிகழ்வு, இக்கட்டான மருத்துவ சூழல்களில் மத்திய அரசு எவ்வளவு விரைவாகவும், அக்கறையுடனும் செயல்படுகிறது? என்பதற்கு சான்றாக இச்சம்பவம் அமைந்துள்ளது .
மேலும் உரிய நேரத்தில் கிடைத்த இந்த மருத்துவ நிதி உதவி ஒரு சிறுவனின் எதிர்காலத்தை மீட்டெடுத்துள்ளது.