
தமிழ்நாட்டில் ! வாக்கு எண்ணும் மையத்தில், திமுக சதி திட்டம் தீட்டியுள்ளதா?
ஏனென்றால்! திட்டத்தை வைத்துக் கொண்டு, பேசுபவர் போல தான் ஆர் எஸ் பாரதி பேசி இருக்கிறார். ஏனென்றால் திமுகவைப் பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும்.
இவர்கள் விஞ்ஞான ஊழலில் மட்டுமல்ல, கிரிமினல் நடவடிக்கைகளிலும், கை தேர்ந்தவர்கள்.

இவர்கள் அம்மா வயிற்றில் இருந்து கருவில் பிறக்கும் போதே ,சட்டப்படி கொள்ளையடிப்பது எப்படி? அதை நியாயப்படுத்தி பேசுவது எப்படி? மக்களை முட்டாள் ஆக்குவது எப்படி? அதி மேதவிகள், புத்திசாலிகள் ,போல பேசுவது எப்படி? இது எல்லாம் கை வந்த கலை .
ஆனால், அதே ஆர். எஸ் .பாரதியை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு கொடுத்து வாதாடி, வெற்றி பெற அவரால் முடியுமா? அது முடியாது. ஊரை ஏமாற்ற முடியும். ஒன்னும் தெரியாதவர்களை ஏமாற்ற முடியும்.

ஆனால், ஒரு அரசியல் கட்சியை ஏமாற்ற முடியுமா? அதுவும் பிஜேபி மீதே இவர் பழி போடுகிறார். அங்குதான் எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு, சந்தேகமே வருகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடை பெறுவதை பிஜேபி தடுத்து நிறுத்தப் போவதாக பேசியிருக்கிறார்.
இவர்களின் திட்டம் என்ன? அதற்குத்தான் இந்த மீடியாக்களை வைத்து திமுக தான் ஜெயிக்கும் என்று சொல்ல வைத்து விட்டார்களா? எல்லா அரசியல் கட்சிகளும் ,இதில் திமுகவின் சதி திட்டம் என்ன ?என்பதை மத்திய, மாநில அரசின் உளவுத் துறையின் மூலம் ஆய்வு மேற் கொள்ள வேண்டியது அவசியம் .
ஏனென்றால், கடந்த 2021 தேர்தலில் இறந்தவர்கள் வாக்கு, ஊரில் இல்லாதவர்கள் வாக்கு, இதையெல்லாம் சேர்த்து திமுகவினர் கள்ள ஓட்டு போட்டு தான் ஜெயித்திருக்கிறார்கள். அவர்களுடைய வாக்கு வித்தியாசமே ஒன்றரை to 2% தான் இருக்கிறது.

அது தற்போது தேர்தல் ஆணையம் நடத்திய எஸ் ஐ ஆர் (SIR ) மூலம் மக்களுக்கு தெரிந்த உண்மை. இப்போது அது இரண்டும் இல்லாததால் ,வேறு ஏதாவது கண்டுபிடித்திருக்கிறார்களா?
எனவே,இவர்கள் மக்களை ஏமாற்றுவது எப்படி? மீடியாக்களில் நல்லவர்களாக நடித்து பேசுவது எப்படி? என்பது தெரியும். மேலும், அதற்கு ஒத்து ஊதக் கூடிய வியாபார மீடியாக்கள் இருக்கிறார்கள். அந்த வியாபாரிகள் இவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை செய்வார்கள்.

அதனால், உளவுத்துறை இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்திற்கு இவர்களுடைய சதி திட்டத்தை கொண்டு சென்று முறியடித்தால் மட்டுமே ,இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.