
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ,தனது 52 வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் விழாவில், பல்வேறு நலத் திட்ட உதவிகள் கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும்,இதை தனது பெரம்பூர் தொகுதியில் ,நடத்தப்பட இருப்பதாகவும் அரசியல் வட்டார தகவல். அதுமட்டுமல்ல, தன்னுடைய தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டு மனு வாங்க இருப்பதாகவும் தகவல் .

மேலும்,இந்த நாளில் சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் அறிவிப்பாரா? என்ற கேள்வி? சமூக நலன் பத்திரிகைகள் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு அறிவித்தால், மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்கும், பத்திரிக்கையாக சமூக நலன் பத்திரிகைகள் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எனவே ,தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பத்திரிக்கை துறையில், மாற்றத்திற்கான முதல் அடி அவருடைய பிறந்தநாள் விழாவாக இருக்குமா ?அது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி? மேலும் ,இது சம்பந்தமாக மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் அவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
