
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான பத்திரிகைகள் எந்தெந்த பத்திரிகைகள்? என்பதை அந்தப் பட்டியல் கூட எடுக்க தெரியாத மத்திய ,மாநில செய்தி துறை அதிகாரிகள், சர்குலேஷன் என்ற ஒரு ஓட்டை சட்டம் கார்ப்பரேட் பத்திரிக்கைகளுக்கு, சாதகமாக வைத்துக் கொண்டு, சமூக நலன் பத்திரிகைகளை வளர விடாமலும், அதனுடைய நோக்கங்கள் மக்களுக்கு போய் சேர விடாமலும், தடுத்துக் கொண்டிருக்கும் செய்தி துறை அதிகாரிகளின் அவலம் அது சமூக நோக்கமா? அல்லது வருமான நோக்கமா?

மேலும்,அதை எதிர்த்து கடந்த கால ஆட்சியில் தொடர்ந்து, பல செய்திகளையும், புகார் மனுக்களும் அனுப்பி பயன் இல்லை. திமுக ஆட்சியில் நல்லவர்களும் நியாயத்தின் வழியில் நடப்பவர்களும், உண்மையை எழுதும் பத்திரிகைகளும் மட்டுமே பாதித்திருப்பார்கள். ஏனென்றால், சமூக விரோதிகள் சமூகத்திற்கு எதிரானவர்கள் அதை நியாயப்படுத்தும் பத்திரிகைகள் அவர்கள் மட்டுமே அந்த ஆட்சியில் பிழைக்க முடியும். அவர்களுக்காக தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள்.

மேலும்,தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தில், இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்ற ஒரு நம்பிக்கை சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. தவிர, செய்தித் துறை அதிகாரிகள் உண்மைகளையும் ,ஊழல்களையும் எதிர்த்து எழுதிய பத்திரிகைகள் எத்தனை? என்று தரம் பிரியுங்கள். அதற்கு தானே சம்பளம் வாங்குறீர்கள்.

மேலும்,நீங்கள் எல்லாம் இந்த சமூகத்துக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்வீர்களா? நாங்கள் செய்து கொண்டு தான் இருப்போம் , இருக்கிறோம். இருப்பினும், எங்களுக்கான அங்கீகாரமும் ,அந்த உழைப்புக்கு ஏற்ற பலனும், ஊதியமும் கிடைக்காமல் தான், இன்று வரை இந்த சமூக நலன் பத்திரிகைகளில் தகுதியானவை போராடிக் கொண்டிருக்கிறது.

மேலும் ,உழைப்பவன் தான் கேட்பான். அவனுக்கு தான் வலி இருக்கும். வேதனை இருக்கும். உழைக்காதவன் எப்படி ?அவனால் அந்த உரிமைகளை கேட்க முடியும்? அவனுக்கே தெரியும். நமக்கு அது தகுதி இல்லை . அதனால்தான் உரிமையோடு அவனால் கேட்க முடியவில்லை. இருப்பினும், அவன் ஐடி கார்டு மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறான்.

மேலும்,எத்தனையோ பேர், இது போன்ற பத்திரிகைகள் சங்கத்தை வைத்துக்கொண்டு ,போலியான பத்திரிகை மாயை உருவாக்கிக் கொண்டு, ரோட்டில் கட்டிக்கொண்டு,நானும் பத்திரிக்கை என்று கணக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால்! இவர்கள் போட்ட ஒவ்வொரு செய்தியும், பத்திரிக்கைத்துறை, செய்தித்துறை, ஆய்வு செய்து பார்க்கட்டும். அப்போது தெரியாதா? மேலும்,
அந்தந்த பத்திரிகையின் தரம் என்ன? தகுதி என்ன? காப்பி அடித்ததா? இல்லை காப்பி அடிக்காமல் போட்டதா ? எத்தனையோ பேர் கார்ப்பரேட்டை பார்த்து காப்பியடித்து செய்திகளை போட்டு பத்திரிகை கணக்கு காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து செய்திகளைப் போட்டு இருக்கிறார்கள்? இதையெல்லாம் கணக்கீடு செய்தால் பத்திரிக்கை துறையை ஏன் சரி செய்ய முடியாது?

மேலும்,உழைக்காமல் பத்திரிகை இல்லை .உழைப்பவனுக்கு திமுக ஆட்சியில், அதிமுக ஆட்சியில் அதற்கான தகுதியும் ,அங்கீகாரமும் கொடுக்க இந்த அரசு அதிகாரிகள் முயற்சி எடுக்கவில்லை. முயற்சி எடுத்த ஒரே ஒரு நபர் பாஸ்கர பாண்டியன் செய்தி துறையின் இயக்குனராக இருக்கும் போது, அவர் ஒருவர் மட்டும்தான் முயற்சி எடுத்தார். அதுவும் ஆட்சியை களைத்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஃபைல் போட்டதால், அதுவும் தோல்வியில் தான் முடிந்தது.

மேலும்,இப்போதும் மக்கள் அதிகாரம் தொடர்ந்து செய்திகளையும், புகார் மனுக்களையும், பத்தாண்டுகளாக அனுப்பி தான் வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், செய்தி துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் இயக்குனர் அருண் தம்புராஜ் ஆகியோருக்கு இது சம்பந்தமான மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மத்திய அரசின் செய்தித்துறை சம்பந்தமான அமைச்சகத்திற்கு இந்த கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கும் , தமிழக ஆளுநர் ஆர் .வி. அர்லேக்கர் அவர்களுக்கும்,இது சம்பந்தமான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன? என்பது தெளிவாக புகார் மனுவாக அனுப்பப்பட்டுள்ளது. செய்திகள் மூலமும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இவ்வளவு பேரும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
மேலும், இதற்கான முக்கிய காரணமே! மத்திய ,மாநில அரசின் செய்தித் துறையில், செய்திகளின் முக்கியத்துவத்திற்கு இவர்கள் பத்திரிகையை தேர்வு செய்வதில்லை. தவிர காலத்திற்கு ஏற்ப செய்தி தறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆனால், அது செய்யாமல், 50 ஆண்டுகளுக்கு மேலாக சர்குலேஷன் சட்டத்தை மட்டுமே வைத்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.அதுதான் மத்திய மாநில செய்தி துறை செய்கின்ற மிகப்பெரிய தவறு.

ஒரு பத்திரிக்கை என்றால்! நடுநிலையான உண்மை, தன்மையை வெளிப்படுத்த வேண்டும் .எது உண்மை ?என்பதை மக்களிடம் சொல்வதற்கு தான் பத்திரிக்கை .ஆனால் கடந்த காலங்களில் இந்த பத்திரிக்கை துறையின் அநியாயத்தை எங்களாலே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதற்கும் இந்த செய்தி துறை அதிகாரிகள் !தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு ,இவர்கள் எப்படி எல்லாம் இந்த பத்திரிக்கை துறையை நாசப்படுத்தி கொண்டிருந்தார்கள்? என்பது பத்திரிகை துறையின் இருண்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று, மக்களுக்கான ஆட்சியை தமிழக முதல்வர் விஜய் கொடுத்து வருவதால், மக்களுக்காக நடத்தும் பத்திரிகைகளுக்கு, முக்கியத்துவமும், முன்னுரிமையும் , அளிப்பார் என்பது தான் சமூக நலன் பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை மற்றும் நம்பிக்கை.
