
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அரசின் நல திட்டங்கள், நிதி வருவாய் பெருக்குதல், கனிம வளம், டாஸ்மாக் ,போன்றவற்றை தனியாருக்கு கொடுக்கலாமா? அல்லது அரசு ஏற்று நடத்தலாமா? எது இதில் சிறந்தது போன்ற பல்வேறு கேள்விகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.
இது தவிர, வனத்துறை அதிகாரிகளிடமும் ,சுற்றுச்சூழல் அதிகாரிகளிடமும், சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது ?என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்ற தகவல்.
மேலும், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து, முதன்முதலில் ஐ.ஏ.எஸ், ஐ.பி எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகளின் முதல் மாநாடு , என்பதால் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளும், மாநாட்டில் முதல்வர் எந்தெந்த கேள்வி கேட்பார்?
அது சம்பந்தமான கேள்விகளை ,பதில்களை, அந்தந்த துறை ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் ,ஐ. எஃப். எஸ் அதிகாரிகள், தங்கள் துறை சம்பந்தமான புள்ளி விவரங்களை எடுத்து பேசுவார்கள்.
அதனால் ,இந்த மாநாடு, அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில், மிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
