இரவில் இருசக்கர வாகனங்களில் எல் இ டி விளக்குகள் எதிர்வரும் வாகனங்களை விபத்துக்கு உள்ளாக்குவதால், அது தடை விதிக்கப்பட்டும் ,ஏன் நடைமுறையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரில் வரும் வாகனங்களின் எல் இ டி பல்ப் வெளிச்சம் கண்களை கூச்சும் அளவிலும், அதே நேரத்தில் பக்கத்தில் வருவது தெரியாமலும் விபத்துக்கள் தொடர்கிறது.

இது இப்போது உள்ள இளைஞர்களுக்கு எதிர்வரும் வாகன போட்டிகளுக்கு இவர்கள் மிரட்டுவது போன்ற தோரணையில் வேகமாகவும் வருகிறார்கள். அதிலும் 50 வயது கடந்தவர்கள் கண் பார்வையில் சற்று குறைவான பார்வை குறைபாடுகளும் இருக்கும். அவர்கள் மெதுவாக சென்றாலும் இவர்கள் அதுவும் ஹெட்லைட் போட்டுக் கொண்டுதான் வருகிறார்கள். அதை குறைப்பது கூட கிடையாது.

இதனால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சில நேரங்களில் இப்படிப்பட்ட எல்இடி பல்ப் போட்ட வாகன ஓட்டிகள் எதிரே வரும்போது அவர்களுக்கு தடுமாற்றம் ஏற்படுகிறது. இந்த இளைஞர்களும் எதிரே வருபவர்கள் பற்றி யோசிப்பதில்லை .தாங்கள் பாதுகாப்பாக செல்வது மட்டுமே நினைக்கிறார்களே ஒழிய, எதிரே வருபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு எண்ணம் துளி கூட இல்லாமல் இப்படி பட்டவர்கள் இருந்து வருகிறார்கள்.

மேலும், வாகன ஓட்டிகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது?

இருசக்கர வாகனங்களில் அதிக ஒளி தரும் (High Intensity) எல்.இ.டி. பல்புகளை, குறிப்பாக விதிமுறைகளுக்கு பொருந்தாத வகையில் பொருத்தும் போது, எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கூசல் (Glare) ஏற்பட்டு, விபத்து அபாயம் அதிகரிக்கலாம். மேலும்,


விபத்து ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
எதிரே வரும் ஓட்டுநரின் பார்வை, சில விநாடிகள் மங்கி விடும்.
சாலையில் உள்ள குழி, வேகத்தடை, பாதசாரிகள் ,போன்றவற்றை சரியாக கவனிக்க முடியாமல் போகலாம்.


தவிர,மழை, பனி போன்ற சூழல்களில் வெள்ளை நிற LED ஒளி அதிக பிரதிபலிப்பை ஏற்படுத்தி, பார்வையை மேலும் பாதிக்கலாம்.
அசல் ஹெட்லைட்டிற்குப் பதிலாக பொருத்தப்படும் தரமற்ற LED பல்புகள் ஒளியை சரியாக குவிக்காமல் எல்லாத் திசைகளிலும் சிதறடிக்கலாம்.


மேலும்,சில இளைஞர்கள் இதைப் பயன்படுத்தும் பொதுவான காரணங்கள்:
வாகனம் அழகாக (Stylish) தோன்ற வேண்டும் என்ற விருப்பம் இருக்கலாம்.
அதிக வெளிச்சம் கிடைத்தால், இரவில் நன்றாகப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை. ஆனால் அடுத்தவர்கள் நம்மால் பாதிக்கப்படுவார்களே என்ற எண்ணம் மட்டும் ஏன் இவர்களுக்கு இல்லை?


நண்பர்கள் அல்லது சமூக வலைதளங்களில் காணும் மாற்றங்களைப் பின்பற்றுதல்.
வாகனத்தை மாற்றியமைக்கும் (Modification) ஆர்வம் சரியானதா?
எனவே, வாகன உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் அல்லது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஹெட்லைட் அமைப்பையே பயன்படுத்துவது பாதுகாப்பானது.

நடைமுறையில் உள்ள மோட்டார் வாகன விதிகள் மற்றும் அபராதங்கள் குறித்து, தமிழக அரசு காவல்துறை மூலம் ,எல்இடி பல்பு பொருந்திய வாகனங்களுக்கு ,உடனடியாக, அபராதம் விதித்தால் தான், இதை தடை செய்ய முடியும் என்பது ஐம்பது வயதுக்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *