
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்ற நீதியரசர் வி. மோகனாவுக்கு, தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம், உச்சநீதிமன்றம் சார்பில் புதுடெல்லியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது . மேலும்
Indian Law Institute அரங்கில் நடைபெற்ற, இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், மேனன் நீதிபதி, ஆர்.பானுமதி மற்றும் கழகத்தின் தலைவர் மேனாள் நீதிபதி, கற்பக விநாயகம் மற்றும் முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை பிரமுகர்கள் பங்கேற்றனர்.மேலும்,
நீதிபதி மோகனா அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அவரின் கணவர் மற்றும் அவரின் புதல்வர் இருவருக்கும், மரியாதையும் வரவேற்பும் கொடுத்தனர். மேலும்,
விழாவை தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கிய கழகம் உச்ச நீதிமன்றத்தின் செயலாளர் வழக்கறிஞர் அறிவழகன், பொருளாளர் அரவிந்த், இணை பொருளாளர் சுப்ரமணியன் இணை செயலாளர் சுமதி மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
