உதயநிதிக்கு ஒரே கேள்வி? திமுக ஆட்சி சிறப்பாக செய்திருந்தால் ஏன் ?மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை? – எப்படியும் பேசுவது திறமையா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

திமுக இன்று அல்ல, என்று தொடங்கப்பட்டதோ ,அப்போதே இந்த பேச்சு வித்தை தான், மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் .

இதை இவர் தாத்தா வழியாக ,பரம்பரையாக தமிழக மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, மக்களிடம் எப்படி? தன்னை நேர்மையானவனாகவும், உத்தமனாகவும் ,காட்டிக் கொண்டு பேச வேண்டும் என்று அரசியல் பேச்சை வழி, வழியாக காட்டுகிறார்கள் . மனசாட்சியோடு பேசுபவர்கள், தன்னை யோக்கியனாக, நியாயமானவனாக, காட்டிக் கொண்டு பேச மாட்டார்கள். எதார்த்தமாக பேசுவார்கள்.

விஜய் ஒருபோதும் உதயநிதி போல், பேசுவதில்லை. மனசாட்சியுடன் பேசுகிறார். மக்களிடம் உண்மையை பேசுகிறார். அதுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும்,

இது கூட யார் எழுதிக் கொடுத்தானோ தெரியவில்லை. ஏதோ ஒரு உத்தமன் எழுதி கொடுத்திருக்கிறான் .அதுவும் தெரிகிறது. இது தவிர, திமுக கட்சியினரும், உதயநிதியும் உங்கள் ஆட்சியில் நடந்ததை நீங்கள் மறந்து விட்டீர்கள் .

ஆனால்,மக்கள் திமுக ஆட்சியில் நடந்த கொடுமைகளை எல்லாம் மறந்து விடவில்லை. அவர்களிடம் பட்ட வேதனை, அது என்றும் ஆறாத வடு. மக்களாட்சி நடத்தாமல், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் கட்சிக்கும் ஆட்சி நடத்தி விட்டு, இன்று விஜய் வந்து மூன்று மாதத்தில் மக்கள் பேசுகின்ற நல்லாட்சி கொடுக்கும் போது, இவ்வளவு அவதூறான வன்மத்தை நெஞ்சிலே வைத்துக் கொண்டு பேசுவது, அரசியல் நாகரீகம் அல்ல.

மேலும், இவர்களுடைய அமைச்சர்களை பற்றி விமர்சனம் செய்கிறீர்கள் .லாட்டரி டிக்கெட் வித்தவர்கள், பிளாக் டிக்கெட் வித்தவர்கள், அப்படிப் பார்த்தால் உங்கள் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் எல்லாம், அவர்கள் ஜாதகத்தை தோண்டி பாருங்கள். எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய தகுதி என்ன?தகுதியானவர்கள் தானா? முதலில் அதைத் தெரிந்து கொண்டு உதயநிதி இனி அந்தத் தகுதியை பற்றி பேசுவாரா ? மேலும்,

பத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்து ஓடுகிறார் என்கிறீர்கள் .நான் கேட்கிறேன், எதற்காக? என்ன காரணத்திற்காக ?அவர் சந்திக்க வேண்டும்? நீ கேட்கிற தேவையற்ற கேள்விகளுக்கு எல்லாம் முதலமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருப்பாரா?

மேலும்,நாட்டு மக்கள் அந்த அளவுக்கு அரசியல் தெரியாத முட்டாள்களாக இல்லை. எனவே, உதயநிதி எல்லாம் தெரிந்த மேதை போல், பேப்பரில் எவனோ எழுதிக் கொடுத்ததை ,அடிக்கடி ரீல்ஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் . அந்த ரீல்ஸ் போட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரீல்ஸ் பத்தியும் , மக்கள் கவலைப்படவில்லை .ஏனென்றால் இவர்களுக்கு அனுபவம் குறைவு. என்பது மக்களுக்கும் தெரியும்.

மேலும், அரசியல் தெரிந்தவர்கள் என்ன பேசுகிறார்கள் தெரியுமா?இந்த முறை நீங்கள் ஆட்சிக்கு வந்து இருந்தால், என்ன நடந்திருக்கும் ?ரோட்ல போறவ பாக்கெட்டில் இருந்து கூட பிடுங்கி எடுத்து இருப்பாங்க என்று மக்கள் பேசுகிறார்கள். இது என் காதால் கேட்டது . இதற்கெல்லாம் உதயநிதி பதில் சொல்ல முடியாது.

மேலும்,உண்மை மக்களுக்கு தெரியும். இனி மக்களை ஏமாற்றி அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்த முடியாது என்பதை புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *