அரசியலில் ஊழல் புகாரில்! சிக்கியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும், இதுவரை சரியான சட்டம் கொண்டு வரவில்லை .ஏன்? – இந்திய வாக்காளர்கள் கேள்வி?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

மத்திய அரசும் ,மாநில அரசும், அதிகாரிகள், லஞ்சம் வாங்கினால் உடனே கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து விடுகிறார்கள்.

அதுவும் ஆயிரம், 500, 50,000, ஒரு லட்சம் இதற்கெல்லாம் சட்டம் உடனே அனுமதிக்கிறது. இதையெல்லாம் ஒரு பணமா?ஆனால், ஒரு லட்சம் கோடி !10,000 கோடி ,50 ஆயிரம் கோடி, இப்படி பல கோடிகளை சட்டத்திற்கு புறம்பாக ஊழல் செய்த மந்திரிகள் மீது என் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை? .

நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கக்கூடிய அளவுக்கு ஊழல் செய்பவர்கள் மீது ஏன் சட்டம் உடனடியாக தண்டிக்கவில்லை? அப்பாவிகளையும், சாமானியர்களையும் மட்டும் சட்டம் உடனே தண்டிக்கிறதா?

மேலும்,அந்த சட்டம் !இவர்களுடைய ஊழல் சொத்துக்களையும் ,அந்த ஊழல் பணத்தையும், ஏன் உடனே அரசாங்கமும் சரி, அதிகாரிகளும் சரி ஏன் கையகப்படுத்த முடியவில்லை? இதில் அரசியல் தலையிடா? அல்லது சட்டமா? எது? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு விரிவாக இன்று வரை எந்த அரசியல் கட்சியும், இதைப் பற்றி ஒருவர் கூட பேச தகுதி இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

மேலும்,ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லக்கூடிய அரசியல் கட்சிகள் கூட இந்த சட்டத்தைப் பற்றி இதுவரை விவாதித்தது இல்லை. பேசியது இல்லை. மக்களாட்சியில் அதிகாரிகளுக்கு ஒரு சட்டம் ,பொதுமக்களுக்கு ஒரு சட்டம் ,அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம் ,அமைச்சர்களுக்கு ஒரு சட்டம் ,இப்படி ஒரு சட்டம் போட்டுக் கொண்டு ,மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க, ஊடகங்கள் அதை எவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார்கள்? என்று பட்டியல் போட ,மக்கள் அதை படித்து பார்த்து ஆ என்று அலறிக் கொண்டிருக்க, இது எல்லாம் மக்களாட்சியா?

மேலும்,இவர்களுக்கு மட்டும் ஏன் நீதிமன்றம்? இத்தனை கருணை? இத்தனை சலுகை? மக்கள் வாக்களித்ததால் மந்திரி! இல்லை என்றால் சாதாரண மனிதன் .இதை ஏன் ?சட்டம் வகுத்த அம்பேத்கருக்கு தெரியாமல் போனதா? இல்லை .அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நேர்மையானவர்களாக, மனசாட்சி உள்ளவர்களாக, கடவுளுக்கு பயந்து வாழ்ந்து இருந்திருக்கிறார்கள். அப்போது கூட நேரு பரம்பரை மனசாட்சியை மறந்து ,இந்தியாவிற்கு அப்போதும் துரோகம் செய்துள்ளது மன்னிக்க முடியாத ஒரு குற்றங்கள்.

மேலும்,இன்றைய அரசியல் கட்சிகள் சமூக விரோத கூட்டங்களை வைத்துக்கொண்டு, அரசியல் கட்சி என்று அவர்களை பாராட்டிக் கொண்டு ,அவர்களை புகழ்ந்து கொண்டு, அவர்களைப் பதவியில் அமர்த்தி உட்கார வைத்து, மக்கள் 50 ஆண்டுகாலம் தமிழக மக்கள் ஏமாந்து விட்டார்கள்.

மேலும்,தகுதியற்ற ஒரு கூட்டத்தை எல்லாம் உட்கார வைத்து, அதற்கான விளைவும் ,தண்டனையும், மக்கள் தான் அனுபவித்தார்கள் .அவர்கள் அனுபவிக்கவில்லை. இருப்பினும், நாட்டு மக்கள் ஆங்கிலேயர் காலத்தில் அனுபவித்த கொடுமைகளை விட ,அரசியல் ஊழல்வாதிகளிடம் அனுபவித்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு சட்டம் ஏன் இன்னும் கடுமையாக்கப்படவில்லை? விஞ்ஞான பூர்வமான ஊழல் கடந்த திமுக ஸ்டாலின் ஆட்சியில் நடந்திருந்தும் ,அந்த அமைச்சர்கள் மீது மத்திய அரசும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை .மாநில அரசும் பேருக்கு தான் கைது என்று போய்க்கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து மக்கள் ஆறுதல் அடையவா?

மேலும்,ஏதோ கொஞ்சம் சாப்பிட்டார்கள், போனார்கள் ,வந்தார்கள் என்று இருந்தால் கூட பரவாயில்லை .பல லட்சம் கோடிகளுக்கு இவர்கள் சொத்துக்களை சேர்த்திருக்கிறார்கள். இதையெல்லாம் எங்களைப் போன்ற அரசியல் தெரிந்த மக்களும், பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் ,சமூக ஆர்வலர்களும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மேலும்,இதற்கு இன்று வரை இந்த ஊழல் கணக்குகளுக்கு அவர்கள் காட்டும் வருமான கணக்கு எப்படி ஒத்துப் போகிறது? இவர் என்ன தொழில் செய்தார்? இவர் அப்பன் என்ன தொழில் செய்தார்? அரசியலுக்கு வருவதற்கு முன் இவர்களுடைய வருமானம்? சொத்து கணக்கு என்ன? வந்த பிறகு என்ன? எப்படி பல லட்சம் கோடி வரும்?

இந்த கேள்வியை ஒரு தனி நபர்கள் இடம் கேட்கும் சட்டம் ஏன் இவர்களிடம் கேட்கவில்லை? நாட்டின் உடமையாக்குங்கள். அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். இதுவே ஒரு தனிநபர் செய்திருந்தால் ,அவருடைய சொத்துக்கள் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு சட்டம் ?சாமானிய மக்களுக்கு ஒரு சட்டமா?

மேலும்,இங்கே நீதிமன்றம் தவறு செய்கிறதா ?இல்லை சட்டம் தவறு செய்கிறதா? யார் இந்த தவறுக்கு உடந்தையாக இருக்கிறார்கள்? அதிகாரிகளா? அல்லது நீதிமன்றமா? ஏன் இவர்களிடம் மட்டும் இந்த நீதி விசாரணை சரியாக நடத்தப்படவில்லை?

மேலும்,நீதிபதி குன்ஹா ஒரு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை குற்றவாளி கூண்டில் நிறுத்தித்தி வைத்தார் .உட்கார கூட சேர் போடவில்லை. நிற்க வைத்தே தீர்ப்பு சொன்னார். அவர் நீதித்துறையின் வரலாற்றில் இடம் பெற்றவர். அப்படி இருக்க வேண்டும். நீதித்துறை இங்கே தவறு செய்கிறது என்று தான் தோன்றுகிறது.

மேலும்,ஊழல் செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு வரும்போது அவரை முன்னாள் மந்திரியாக பார்க்கக் கூடாது. அவரை ஒரு குற்றவாளி என்றுதான் நீதிபதிகள் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் தான், நாட்டில் இந்த குற்றவாளிகளுக்கு எல்லாம் சரியான தண்டனை கிடைக்கும்.

அது மட்டுமல்ல, ஊழல் குற்றவாளிகளின் வழக்கு ஓராண்டு காலம் மேல் ஆகக்கூடாது .உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது சிபிஐ வழக்காக இருந்தாலும் ,லஞ்ச ஒழிப்புத்துறை வழக்காக இருந்தாலும், வருமான வரித்துறை வழக்காக இருந்தாலும், அமலாக்கத்துறை வழக்காக இருந்தாலும்,அதிகாரிகள் காலதாமதம் செய்தால்! அதற்கான அவர்களுடைய பிரமோஷன் கட் செய்யுங்கள். இங்கே தான் தவறு நடந்து கொண்டிருக்கிறது.

மேலும்,ஒரு பக்கம் அதிகாரிகள் அவர்களுக்கு சலுகை காட்ட வேண்டும் .மற்றொரு பக்கம் நீதிமன்றம் அவர்களுக்கு சலுகை காட்ட வேண்டும். அது மட்டுமல்ல நீதிமன்றம் இவர்கள் காட்டும் போலியான ஆடிட் கணக்குகளை எப்படி ஏற்றுக் கொள்கிறது? இந்த இரண்டு வழிகளில் தான், இவர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழல் வழக்குகளுக்கு சட்டம் இருக்கிறது… ஆனால் தீர்ப்பு ஏன் ஆண்டுக்கணக்கில் தாமதம்?
போலி கணக்குகள்! சந்தேக ஆடிட் !அறிக்கைகள்,பினாமி சொத்துகள்!நீண்ட விசாரணை ஏன் ?— உண்மையான சொத்துக்கள் எப்போது பறிமுதல்?

மேலும்,ஒன்றுக்கும் உதவாத ஐயாயிரம் , பத்தாயிரம் பெரிய தொகை இல்லை என்றாலும் ,அரசு அதிகாரிகள் மீது மட்டும் இவ்வளவு கடினமான நடவடிக்கை இருக்கும் போது, பல லட்சம் கோடி ஊழல் செய்த மந்திரிகள் மீது ,எம்எல்ஏக்கள் மீது, எம்பிக்கள் மீது ஏன் ஊழல் சட்டம் இருந்தும் ? உடனடி நடவடிக்கை இல்லை ஏன் ?என்பதுதான் சட்டத்தின் மீது நம்பிக்கை குறைந்துள்ளது.

மேலும்,இதை உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் இதற்கான நடவடிக்கை எடுப்பாரா? இந்த சட்டம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தம் கொண்டு வரப்படுமா? இந்திய வாக்காளர்கள் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *