கடந்த தி.மு.க., அ.தி.முக ஆட்சியில்சென்னை குடிநீர் வாரியத்தில் 100 கோடி ஊழல், 100 MLD நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்! விஞ்ஞானபூர்வ ஊழலா …..?

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கடந்த திமுக ஆட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் 100 கோடி ஊழல் ! 100 MLD இதுவும் விஞ்ஞான முறையில் செய்த ஊழல் .

மேலும்,இந்த ஊழல்! 2008 முதல் 2013 வரை தமிழ்நாட்டில் ஒரே கட்சியின் ஆட்சி இல்லை.

2008 – 15 மே 2011 திமுக ஆட்சி — முதல்வர் மு. கருணாநிதி.


16 மே 2011 – 2013 அதிமுக ஆட்சி — முதல்வர் ஜெ. ஜெயலலிதா!


அதாவது 2008, 2009, 2010 மற்றும் 2011 மே 15 வரை திமுக, 2011 மே 16 முதல் 2013 வரை அதிமுக ஆட்சி! இப்படி மாறி மாறி 2008 முதல் 13 வரை திமுக அதிமுக ஆட்சியில் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது.

அதாவது 2008 ல் சென்னை கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தில் கடலுக்கு அடியில் அதாவது 16 மீட்டர் ஆழத்தில் குழாய் பதிக்க திட்டம் போடப்பட்டது.

.ஆனால் ,அது 8 மீட்டர் ஆழத்திலே போட்டு விட்டு ,பணத்தை எடுத்துக் கொண்டார்கள். இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி 450 கோடி .ஆனால், 350 கோடி தான் காண்ட்ராக்டர்களிடம் போய் சேர்ந்துள்ளது .மேலும்,

மீதி 100 கோடி அதே காண்ட்ராக்ட்டர்களிடம் இருந்து ஆட்சியாளர்கள் வசூல் செய்திருப்பதாக சி. ஆர் .ராஜன் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அவர் கேட்டு வாங்கிய தகவல்.

அது எப்படி என்றால்? 16 மீட்டர் ஆழத்திற்கு கடலில் குழாய் பதிக்க டெண்டர் விடப்பட்டு, 8மீட்டர் ஆழத்திற்கு குழாய்கள் பதித்து விட்டு 16 மீட்டர் கணக்கு காட்டி, பணத்தை எடுத்துக் கொண்டார்கள்.

இப்போது இதில் யார் மாட்டுவார்கள்? அதிகாரிகள் தான் மாட்டுவார்கள். காண்ட்ராக்டர்களுக்கு பணத்தை கொடுத்தது அதிகாரிகள், எஸ்டிமேட் போட்டது அதிகாரிகள், 16 மீட்டருக்கு எஸ்டிமேட் போட்டு, 8 மீட்டர் என்று கணக்கு காட்டினால், மீதித் தொகையை இவர்கள் பிடித்திருக்க வேண்டும். பிடிக்கவில்லை. மேலும்,

காண்ட்ராக்டர்கள் கமிஷன் கொடுத்து பில் வாங்கி இருப்பார்கள். இப்போது திமுகவினர் எங்களுக்கு எதுவும் தெரியாது. எதற்கெடுத்தாலும் ஆதாரத்தை கேட்பவர்கள், எதற்கெடுத்தாலும், சட்டப்படி எதிர்கொள்வோம் என்று சொல்பவர்கள், இங்கே அவர்களுக்கு சொல்லத் தெரியாதா? மேலும்,முதல்வர் விஜய் இது குறித்து நடவடிக்கை எடுப்பாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *