முதல்வர் விஜயின் பள்ளி மாணவர்களின் இலவச உணவு – மக்களின் வளர்ச்சிக்கு உதவுமா? இல்லை அரசியல் விளம்பரமா?

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும்,பசியுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது நிச்சயமாக ஒரு உடனடி சமூக நல நடவடிக்கை.ஆனால் ,இதில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அது என்ன என்றால்?
மேலும்,மாணவர்களுக்கு தினமும் உணவு வழங்குவதால் மட்டும் ,அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா?ஒரு மாணவருக்கான உணவுச் செலவு சுமார் ₹12.71 என அரசு கணக்கிடுகிறது. இதில்,புதிய விரிவாக்கத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

இதன் மூலம் ஒரு பள்ளி வேலை நாளில் கோடிக்கணக்கான ரூபாய் அரசு செலவிடுகிறது.
இந்தச் செலவு குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் பள்ளி வருகைக்கு பயனளிக்கிறதா? என்பதையும், உண்மையில் கல்வித் தரம் உயர்கிறதா? என்பதையும் அளவிட வேண்டும்.


மேலும்,உணவு கொடுப்பது ஒரு நலத்திட்டம் ஆனால், ஒரு குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் உருவாக்குவது வளர்ச்சி.
அடித்தட்டு மக்களின் உண்மையான முன்னேற்றத்திற்கு இது உதவுமா? மேலும் ஒரு ஆண்டுக்கு அரசின் திட்டத்தின் செலவு சுமார் 345 கோடி!

பெற்றோருக்கு நிலையான வேலைவாய்ப்பு,இளைஞர்களுக்கு தொழில் மற்றும் திறன் பயிற்சி,தரமான அரசு கல்வி,இலவசம் என்பதைக் கடந்து தரமான மருத்துவ வசதி

விவசாயிகளுக்கு நிலையான வருமானம்,சிறு தொழில்களுக்கு ஆதரவு,குடும்பங்களின் பொருளாதார சுயநிலை,ஆகியவை வலுப்படுத்தப் பட வேண்டும்.

மேலும்,அரசின் எந்த ஆட்சியாக இருந்தாலும், மக்கள் நலத்திட்டங்களை அரசியல் விளம்பரத்திற்கான கருவியாக மாற்றாமல், அந்தத் திட்டத்தின் பயன் மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது? என்பதுதான் மிக முக்கியம்.


மேலும், இன்றைய இலவச உணவு பசியை போக்கலாம்.அது,
நாளைய வேலைவாய்ப்பு, கல்வி, வருமானம் – நாளைய வாழ்க்கையை மாற்றும் முதலீடாக இருக்க வேண்டும்.தவிர,
மக்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால்!
அரசு எவ்வளவு செலவு செய்தது? என்பது மட்டும் அல்ல!

அந்தச் செலவு, மக்களின் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமைந்து, அது எவ்வளவு உயர்த்தியது? என்பதுதான் முக்கியம். எனவே, தமிழக முதல்வர் விஜய் கடந்த ஆட்சியில் செய்தது போலவே, அதை காப்பி அடிப்பது தர மற்ற அரசியல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *