தாராபுரம் இடை தேர்தல் பிரச்சாரத்தில்! சினிமாவில் நடித்தால் !ஆளும் தகுதி வந்து விடுகிறதா? – சீமான் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில், சினிமாவில் நடித்தாலே நாட்டை ஆளும் தகுதி வந்து விடுகிறது என்ற எண்ணம் ஆபத்தானது என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். அது உண்மைதான்.

மேலும்,எத்தனையோ நடிகர்கள் நடித்துவிட்டு ,போயிருக்கிறார்கள். சிவாஜி காலத்தில் இருந்து ,நடித்த ஜாம்பவான்கள் எம் ஜி ஆர் ஐ தவிர, அரசியலுக்கு யாராலும் வர முடியவில்லை. அதன் பிறகு தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

மேலும்,இந்த கருத்து சீமான் விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு கூட பேசி இருக்கலாம். அதாவது இவர் சொல்வது கருத்தியல் என்கிறார். மக்கள் கருத்தியல் தேவையில்லை, சினிமா சித்தாந்தமே போதும் என்கிறார்கள் என்று அவரே தெரிவிக்கிறார்.

அதாவது சினிமாவில் ஒரு சித்தாந்தமும், கருத்தியலில் ஒரு சித்தாந்தமும் வெவ்வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். ஒரு கருத்தை மையப்படுத்தி தான் சினிமா எடுக்கப்படுகிறது.

அதேபோல் ஒரு கருத்தை மையப்படுத்தி தான், அரசியலில் பேசப்படுகிறது. அதேபோல் சீமானின் கருத்தை மையப்படுத்தி தான் இக் கட்டுரையை மக்களுக்கு கொடுக்கப்படுகிறது.

மேலும்,நடிகர்கள் சினிமாவுக்கு வரலாம். வரக்கூடாது என்பது இல்லை. ஆனால் ,அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி? தவிர,எப்படிப்பட்ட அரசியலை மக்களுக்கு கொடுக்கப் போகிறார்? என்பதுதான் அவர் அரசியல் வடிவம்!

மேலும்,கலையை தெய்வமாக பார்ப்பது தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ,அப்படி இருக்கும் போது ,அந்த கலைத்துறையில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வருவது தவறல்ல. ஆனால், கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தாலும், மக்களுக்கு அவர் எப்படிப்பட்ட அரசியலை கொடுக்க போகிறார் ?என்பதுதான் மிக மிக முக்கியம்.

மேலும்,இங்கே ரசிகராக இருந்து, சினிமாவைப் பார்த்து ரசிக்கலாம். கைதட்டலாம் அது வேறு, ஆனால், அதையெல்லாம் தாண்டி ,அரசியல் கொள்கை, செயல்பாடு ,அது பற்றி மதிப்பிடுவது தான் அவருடைய அரசியல் மற்றும் அரசியல் கட்சியினரின் மதிப்பீடு மட்டுமல்ல ,மக்களின் மதிப்பீடும் அதுதான்.

அந்த வகையில் அரசியலில் நீண்ட காலம் இருந்த திமுக ,அதிமுக அரசியல் கட்சியினரின் செயல்பாடுகள் எப்படி? அது தேவையில்லை என்றுதான்,அதற்கு மாற்றம் தேவை என்று மக்கள் முடிவு எடுத்து ,தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்தார்கள். இதுதான் அரசியல்!

இந்த அரசியலில்! விஜய் எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்கப் போகிறார்? இதுதான் திரையில் பார்க்கின்ற நடிகர் விஜய்க்கும், முதல்வர் விஜய்க்கும் உள்ள வித்தியாசம் !

அதனால், சீமான் சொல்வது போல், சினிமாவில் நடித்தால் தகுதி என்பது வேறு! அரசியலில் அப்படி நடித்து ஒருவர் தகுதியை மக்களிடம் பெற முடியாது என்பதை சீமானும், அரசியல் கட்சியினரும் ,புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *