தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள்! ஊழல் செய்து வாங்கிய சொத்துக்கள்! பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவு – இதுவே அரசியலில் ஊழல் செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் கால தாமதம் செய்வது ஏன்?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் சார் பதிவாளர் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். அதைத் தவறு என்று சொல்வதற்கில்லை.

அதாவது, அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து சம்பாதித்தால் ,அதை உடனே பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் ,அரசியலில் பதவி அதிகாரத்தில் ஊழல் செய்த சொத்துக்களை ஏன் நீதிமன்றம் அவர்களுக்கு வாய்தா போட்டு ,பல ஆண்டுகளாக காலதாமதம் செய்கிறது?

அது மட்டுமல்ல, அவர்களுடைய ஆரம்ப கால சொத்து நிலை என்ன? ஐந்தாண்டுகளில் எப்படி இவ்வளவு கோடிகள் வந்தது? அதை ஏன் கணக்கெடுப்பதில்லை ? சட்டம் அரசு ஊழியர்களுக்கு ஒன்று! அரசியலில் பதவி அதிகாரத்தில் ,இருப்பவர்களுக்கு ஒன்றா?

மேலும்,ஒரு சாதாரண கிராம பஞ்சாயத்து தலைவராக வருபவர்கள், ஒன்றுமே இல்லாமல் வரும்போது இருப்பவர்கள் ,பிறகு கோடிக்கணக்கில் சொத்துக்கள் எப்படி வருகிறது? அதேபோல் கவுன்சிலர்கள், சேர்மேன்கள், எம்எல்ஏக்கள், மந்திரிகள் ,எம்பிக்கள் இவர்களுடைய சொத்து விபரத்தை ஏன்? ஆண்டுதோறும்,லஞ்ச ஒழிப்பு துறையும், மத்திய குற்ற புலனாய்வுத் துறையும் ,கண்காணிப்பதில்லை? விசாரிப்பதில்லை?

மேலும்,சட்டம் இவர்களுக்கு மட்டும் ஒன்று அரசு ஊழியர்களுக்கு ஒன்றா? மதுரை உயர்நீதிமன்ற கிளை தங்கவேல் சார் பதிவாளருக்கு வழங்கிய தீர்ப்பு போல், மக்களின் பிரதிநிதியாக வருபவர்களுக்கு ஏன் அந்த தீர்ப்பை வழங்கவில்லை? ஏன் புலனாய்வு அமைப்புகள் அவர்களுடைய சொத்துக்கணக்கை விசாரிப்பதில்லை? ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? அவர்களுக்கு மட்டும் ஏன் கோடிகளில் சொத்துக்கள் பெருக்கெடுக்கிறது? அவர்களுடைய தொழில் என்ன? வருமானம் என்ன?

இதுதான் சமூக ஆர்வலர்கள் கேள்வி? இதே கேள்வி தான் சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வி? இனியாவது நீதிமன்றம் இதற்கு ஒரு உத்தரவை பிறப்பிக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *