அதிமுக !எதிர்பார்த்ததை விட தோல்வியை தழுவிய காரணம் என்ன ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததை விட ,அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. இதற்குக் காரணம்? எடப்பாடியின் அரசியல் வியூகம் மற்றும் ராஜதந்திரம் தோல்வியா? மேலும்,

அதிமுகவின் வலிமை படிப் படியாக குறைந்து விட்டது. மேலும்,எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது, இருந்த அதிமுகவின் வலிமை தற்போது இல்லை.இதை உணர்ந்து தான் மோடியும், அமித்ஷாவும் அதிமுகவை கட்டுக் கோப்பாக வையுங்கள் என்று பலமுறை எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இவர் எந்த அறிவுரையும் ஏற்றுக் கொள்வதில்லை.

மேலும்,செங்கோட்டையன் , ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து இருக்க வேண்டும். அவர்கள் உள்ளே வந்தால், நாம் டெம்மி ஆகி விடுவோம். நம்மை கட்சியிலிருந்து தூக்கி விடுவார்கள் என்ற ஒரு பயத்திலே எடப்பாடி பழனிசாமி அவர்களை திட்ட நெருங்கவே விடவில்லை.

இவர் கட்சியை விட ,தன்னுடைய சுயநலம் முக்கியமானது என்று இருந்து செயல்படுகிறார். அடுத்தது அதிமுகவில் இந்த முறை சீட்டு கொடுக்கும்போது, நடுத்தர வயது இளைஞர்களுக்கும் ,முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். அவர்களில் தகுதியான வேட்பாளர்களை களம் இறக்கி வைத்திருக்க வேண்டும்.

ஆனால், எடப்பாடி பழைய ஆட்களுக்கு கொடுத்து விட்டார். திருவொற்றியூர் குப்பன் எல்லாம் சுமார் 85 வயதுக்கு கிட்டத்தட்ட இருப்பவர் அவருக்கு எல்லாம் சீட்டு கொடுத்து, கட்சியின் தோல்விக்கு காரணமாகி விட்டார்.

அது மட்டுமல்ல, சசிகலாவை இவர் அலட்சியமாக நினைத்தது மிகப்பெரிய தவறு. உன்னை முதலமைச்சர் பதவியில் உட்கார வைத்தவர். அவருக்கு துரோகம் செய்துவிட்டு ,தான் மேலே போலாமா என்று கனவு கண்டால், அது! மனசுக்குள்ளே அவர்களுக்கு இருக்கின்ற வேதனை, வலி, எடப்பாடி பழனிசாமியை துரத்திக் கொண்டே இருக்கும்.

அதன் விளைவு ,இன்று தென் மாவட்டங்களில் அதிமுக பல இடங்களில் தோல்விக்கு சசிகலா முக்கிய காரணம்.

மேலும்,வட மாவட்டங்களில் வன்னியர்களின் வாக்கு தான் அதிமுகவுக்கு விழுந்திருக்கிறது. கிட்டத்தட்ட 35 வன்னியர்கள் அதிமுகவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தவிர,எடப்பாடி பழனிசாமி பழைய காலம் போல், அதாவது எம்ஜிஆர் காலத்தில் இரட்டை இலை தவிர வேறு எதுவும் தெரியாது . அப்படி இருந்தவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில், எடப்பாடி பழனிசாமி இப்போது இவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார? மேலும்,

இரட்டை இலை மட்டுமே பார்த்து ஓட்டு போடக்கூடிய 75% மக்கள் இப்போது இல்லை. இப்போதெல்லாம் குருவிக்காரன் கையில் கூட செல்போன். அந்த காலத்தில் ஃபோனே தெரியாது.

இது எல்லாம் தெரியாமல், இவர் கட்சியின் தலைவராகி, மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்? மேலும்,பணம் யாரிடம் இருக்கிறது? என்பதை பார்த்து சீட்டு கொடுத்தால், அவர்கள் தோல்வியை தான் தழுவுவார்கள் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு எடுத்துக்காட்டாக நிரூபித்துள்ளது.

மேலும், விஜயின் அரசியல் வருகை இன்று அதிமுக, திமுக வை ஆட்டம் காண செய்துள்ளது. அதற்குக் காரணம் அரசியலில் அவர் ஒரு சினிமா நட்சத்திரம், அவருடன் போட்டி போட முடியாது.

இருப்பினும், அவர்களுடைய கட்சி வேட்பாளர்கள் இடம் போட்டி போட்டு ஜெயிக்கலாம். அதற்கு தகுதி உள்ள நபர்களை, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யவில்லை. இதுவும் தவறு.

இதையெல்லாம் தேர்தலுக்கு முன்னரே திட்டமிட்டு சரி செய்திருக்க வேண்டும்.

விஜய்யை அதிமுக ,திமுக இரண்டு பேருமே அலட்சியமாக நினைத்து விட்டார்கள் . அதுதான் இவர்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, இவர் எதிர்க்கட்சித் தலைவராக சரியான முறையில் செயல்படவில்லை.

மேலும்,அதிமுகவினரும் மக்கள் சேவையை மறந்து விட்டார்கள். இரண்டு கட்சியும் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என்று தவறான கணக்கு போட்டது தோல்வியை சந்தித்தார்கள். அது மட்டுமல்ல,

அதிமுகவின் அரசியல் கட்சியினரும், மக்களை மதிக்காமல் இருந்ததால், மக்களும் இவர்களை மதிக்கவில்லை . மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள். அதாவது இரண்டு பேரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு விசிலுக்கு போட்டு விட்டார்கள்.

இனி பணத்த வைத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என்றால் அது தோல்வி தான் என்பதற்கு இந்த தேர்தல் இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் முக்கிய பாடம்.மேலும்,

இனிமேல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *