முதலமைச்சரையே! அநாகரீகமாக பேசக்கூடிய திமுகவினர், சாமானிய மக்களை எவ்வளவு அலட்சியமாக பேசுவார்கள்? – அரசியல் என்பது திமுகவினர் வீர வசனம் அல்ல .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

1965 க்கு பிறகு கருணாநிதி அரசியலுக்கு வந்தவர் அவர் வந்த காலத்தில் இருந்து தான் அநாகரிகமான அரசியல் பேச்சு. அதற்கு முன்,நாகரீகமானவர்கள், ஒழுக்கமானவர்கள் , எளிமையானவர்கள், ஆடம்பரம் என்பதே தெரியாதவர்கள்,அரசியலில் இருந்தார்கள். படிக்கும்போது அவரைப்போல் ஒப்பிட்டு பேசுவார்கள்.

இப்போது அதற்கு தகுதியே இல்லாதவர்கள், ஓடி வருகிறார்கள். தகுதி உள்ளவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியும் பேசுவது அரசியலல்ல, இப்படி தான் பேச வேண்டும் என்று அரசியல் நாகரீகத்தோடு பேச வேண்டும்.

மேலும்,அரசியலுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம், நானும் அரசியல்வாதி என்று பேசுவது போல் இன்று,பத்திரிக்கை என்பது ஐடி கார்டு போல, நானும் பத்திரிகை என்று ஊரை ஏமாற்றும் கூட்டம் போல, நானும் அரசியல் கட்சி என்று காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும்,கட்சிக்கு ரவுடிசம்? எதற்கு?ஒருவனுக்கு உதவி செய்ய வருபவன், எதற்கு கத்தியை தூக்க வேண்டும்? கத்தியை காட்ட வேண்டும்?இதுதான் அரசியலா? அரசியல் தெரியாதவனை ஏமாற்றும் வேலை. அதற்கு தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து ,அரசியலைப் படிக்க வேண்டும். இன்றைய சமுதாயம், வருங்கால சமுதாயம், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் மக்களை,ஏமாற்றம் கூடாரம் ஆகவிட்டது.

இது, உழைக்காமல் கோடிகளை பார்க்கும் வேலையாகவும் ,அரசியல் தொழிலாகவும் ,மாற்றி வட்டார்கள். தேர்தல் நேரத்தில் அரசியல் தெரியாதவர்களிடம், பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்குவது, பதவிக்கு வந்து அதிகாரத்தில் ஆட்டம் போடுவது ,

மேலும்,ஊடகத்தில் பேசுவது, தன்னை உத்தமனாக காட்டிக் கொள்ள அந்தக் கருவியை பயன்படுத்தி, அரசியல் தெரிந்தவர்களை ஏமாற்ற முடியாது.

அதனால்தான், இப்படிப்பட்ட அரசியலில் மக்கள் தொடர்ந்து ஏமாறக்கூடாது என்று மக்கள் அதிகாரம் தொடர்ந்து ,மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு,செய்திகளை வெளியிட்டு வருகிறது. மேலும்,

முதல்வர் விஜய் ,வயதில் ஸ்டாலினை விட குறைவாக இருக்கலாம். அல்லது அரசியலில் அவரை விட அனுபவம் கூட குறைவாக இருக்கலாம். வயதோ, அனுபவமோ அல்லது அறிவோ எதுவாக இருந்தாலும், மக்கள் ஸ்டாலினை இறக்கி வைத்துவிட்டு, முதல்வர் விஜய்க்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது, மக்களுக்காவது மதிப்பளித்து பேசக்கூடிய ஒரு நாகரிக அரசியலை தெரிந்து கொள்ளாமல், இவர்கள் எப்படி மக்களுக்காக சேவை செய்வார்கள்…? அதனால்தான் அரசியல் என்பது இவர்கள் கொள்ளை அடிப்பதற்கு என்று செயல்பட்டவர்கள்.

மேலும், அரசியல் தெரியாதவர்களிடம்,இன்று வரை தங்களை நியாயமானவர்கள், நாங்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும் ,அது நியாயமானது என்று தெரிவிக்கின்ற ஒரே கட்சி திமுக. மனசாட்சி இல்லாத ஒரு கூட்டம், கவுன்சிலர் சுதா , ஒரு பெண்மணி ,ஒரு முதல்வரை இவ்வளவு தரை குறைவாக பேசுவது, இது என்ன தமிழ்நாட்டின் அரசியல்?

மேலும்,அரசியல் தெரியாத மக்கள் இருக்கிற வரைக்கும், இவர்களுக்கு கொள்ளையடிக்க லாபம். அரசியல் தெரிந்தவர்கள், இவர்களை ஓட விடுவார்கள். அரசியல் எப்படியும் பேசும் வீர வசனம் அல்ல.

இப்படி எல்லாம் பேசி தமிழ்நாட்டு மக்களை இனி ஏமாற்றி திமுக ஒரு காலம் ஆட்சிக்கு வர முடியாது. நீங்கள் எப்படி பேசினாலும், அதற்கு கைதட்ட ஒரு ஜெனரேஷன் இருந்தது. அந்த ஜெனரேஷன் இப்போது மாறிவிட்டது அதுவாவது உங்களுக்கு தெரியுமா?

மேலும்,அரசியல்வாதி என்றால் , சமூகத்தில்,மதிக்கக் கூடியவர்கள். மரியாதைக்குரியவர்கள், அதற்கு அர்த்தமே தெரியாமல், பேசுவது ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு தான் ,நீங்கள் அரசியல் செய்ய முடியும்.

அவர்கள் கூட மதிக்கவில்லை என்றால் ,உங்களை தூக்கி எறிந்து விடுவார்கள். நாட்டில் எவ்வளவு படித்த மக்கள்? இளைஞர்கள்? இருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்ன நினைப்பார்கள் ?என்று கூட தெரியாமல், கேவலமாக பேசியது திமுகவுக்கு தான் கேவலம்.

மேலும், அரசியல் என்பது நீங்கள் செய்த செயலுக்கு மக்கள் கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்க வேண்டிய இடம் .கொள்ளை அடிக்க வேண்டிய இடம் அல்ல. இதையும் ரசித்துக் கொண்டு, கனிமொழி இருக்கிறார் என்றால், இவர்களுடைய அரசியல் நாகரிகமற்ற அரசியல்.

மேலும்,மரியாதை தெரியாத இவர்களுக்கு அரசியலின் அர்த்தம் புரியுமா? அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? எப்படியும் பேசுவது அரசியல் அல்ல. எப்படியும் ஊளையிடுவது அரசியல் அல்ல. 1965 க்கு முன் உள்ள அரசியல் வரலாறு படித்தவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் தெரியாது என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல், கட்சிகளுக்கு ,அரசியல்வாதிகள் எப்படி இருந்தார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களுடைய நேர்மைக்கு அர்த்தம் தெரியாது. உங்களை எல்லாம் அரசியல்வாதி என்று ஐந்தறிவு உள்ளவர்கள் தான் ஏற்றுக் கொள்ள முடியும் .

படிக்காத மக்கள் வாழ்ந்த காலத்தில், அரசியல் எப்படி இருந்தது? என்பது அரசியலை படித்தவர்கள், 1965 க்கு முன் ,அவர்களின் அரசியல் வாழ்க்கையை படித்தாலாவது திமுகவினருக்கு புத்தி வருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *